Go to full page →

அக சுத்தத்திற் கோர் புற அடையாளம் LST 150

விசுவாசிகள் ஏழைகளாய் இருந்தாலும் கூட அவர்கள் தங்களையும் தங்கள் வீடுகளையும் சுத்தமாயும் ஒழுங்காயும் வைத்துக் கொள்ளும்படி அவர்கள் போதிக்கப்பட வேண்டும். சுத்தத்தின் முக்கியத்தையும் அதின் அர்த்தத்தையும் பற்றிக் கொஞ்சமும் உணர்வற்றிருப்போருக்கு இவ்விஷயத்தில் உதவி செய்ய வேண்டும். உன்னதமும் பரிசுத்தமுமான தேவனுக்கு அடையாளமாய் இருக்கப்பட்டவர்கள் தங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாயும் ஒழுங்காயும் வைத்துக்கொள்வதுமன்றி அவர்கள் தங்கள் ஆடைகளையும் வீட்டிலுள்ளவைகள் எல்லாவற்றையும் சுத்தமாய் வைத்துக்கொள்ளவும் வேண்டுமென்று போதிக்கப்பட வேண்டும். சத்தியம் ஆத்துமாவைச் சுத்திகரித்து, விருப்பங்களை நன்றாக்கி, ஜீவியத்தை மாற்றியிருக்கின்றதென்று பணவிடை செய்யும் தூதர்கள் தெரிந்துகொள்வார்கள். நியாயப் பிரமாணத்தைக் கேட்பதற்கு இஸ்ரவேல் புத்திரர் மலைக்கு வரும்போது அவர்கள் சுத்தமான சாரீரத்தோடும் வச்திரத்தொடும் வரவேண்டுமென்று தேவன் கட்டளையிட்டார். இக்காலத்தில் அவருடைய ஜனங்கள் திட்டமான ஒழுங்குடனும் சுத்தமான பழக்க வழக்கங்களினாலும் அவரை மகிமைப்படுத்த வேண்டும். C.H. 101-2. LST 150.4