Go to full page →

மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பரீட்சைகளைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்!, மே 19 Mar 277

“…பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள்… ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மை பாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.” - பிலிப்பியர் 3:2,3. Mar 277.1

தங்களது இதயங்களிலே தேவ ஆவியானவரின் தொடுதல் அவசியமான நிலையில் இருப்பவர்கள் இருக்கிறார்கள்; அப்பொழுது, இந்தக் காலத்திற்கான தூதானது அவர்களது மனப்பாரமாக இருக்கும். அவர்கள் மானிடப் பரீட்சைகளைத்தேடி அலையமாட்டார்கள்; அதாவது, ஏதோ புதிதான-வித்தியாசமான காரியங்களைத் தேடமாட்டார்கள். நான்காம் கற்பனையிலுள்ள ஓய்வுநாளே, இந்தக் காலத்திற்குரிய பரீட்சையாகும். Mar 277.2

ஏறக்குறைய உலகம் முழுவதிலும் பயனற்றதாக்கிப்போடப்பட்ட தேவனுடைய பிரமாணமே இந்தக் காலத்திற்குரிய-சோதிக்கின்ற சத்தியமாகும்…தேவனை வணங்கும் அனைவரும் இந்த அடையாளத்தின்மூலமாக,(உண்மையான ஓய்வுநாளை ஆசரிப்பதின் மூலமாக) வேறுபடுத்திக்காட்டப்படக்கூடிய நேரம் வந்துகொண்டு இருக்கிறது. தேவனுக்கு அவர்கள் உண்மையாயிருப்பதின் அடையாளத்தின்மூலமாக, தேவனுடைய ஊழியக்காரர்கள் என்று அறிந்துகொள்ளப்படுவார்கள். நிகழ்கால சத்தியத்தில் அடங்கி இருக்கும் மாபெரும் முக்கியமான கொள்கைகளினின்று, மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சோதனைகள் அனைத்தும் உள்ளத்தை விலகிச்செய்யும். Mar 277.3

நமக்கு மத்தியிலே எதற்கெடுத்தாலும் மிதமிஞ்சிச் செயலாற்றுபவர்கள்-அதாவது குறுகிய கண்ணோட்டமுடைய மக்கள், குற்றங் கண்டுபிடிக்கிறவர்கள், கூர்முனைப்புடையவர்கள், சத்தியத்தின் பொருள் இதுதான் என்று கூறி, தங்களது சொந்தக் கருத்துகளை விடாப்பிடியோடு அதிகமாகப் பற்றிப்பிடித்துக்கொண்டிருப்ப வர்கள் ஆயோரைக் கொண்டுவருவதே சாத்தானின் விருப்பமும் திட்டமுமாகும். அவர்கள் மிகவும் நெருக்கடி கொடுத்து, குறைவான முக்கியத்துவமுடைய காரியங்களில் மிகவும் கடுங்கண்டிப்பாக கடமைகளை நடைமுறைப்படுத்த முயற்சித்து, மிதமிஞ்சிச் செல்லுகிறார்கள்; ஆனால், பிரமாணத்தின் உயர்தர முக்கியத்துவம் வாய்ந்தவைகளை அலட்சியஞ்செய்து, அதாவது தேவனுடைய நியாயத்தீர்ப்பு, அன்பு, இரக்கம் ஆகியவைகளை அசட்டைபண்ணுகிறார்கள். இத்தகைய கூட்டத்தைச் சார்ந்த ஒரு சிலர் செய்யும் செயல்களினால், ஓய்வுநாளைக் கைக்கொள்கிற அனைவருமே குருட்டுப்பிடிவாதமுள்ளவர்கள் என்றும், கொள்கை வெறியர்கள் என்றும் பெயர் சூட்டப்படுகிறார்கள்… Mar 277.4

அனுபமுள்ள மக்கள் செய்வதற்காக, தேவன் ஒரு சிறப்பான வேலையை வைத்திருக்கின்றார். அவர்கள் தேவனுடைய ஊழியத்தை விழிப்போடு காக்கவேண்டும். தங்களது சொந்த சுதந்தரமான தீர்மானத்தின்படி, வெளியே செல்வது தங்களது சிறப்புரிமை என்றெண்ணுகிற மனிதரிடத்தில், தங்களுக்கு விருப்பமானது எதுவோ அதையே பிரசிங்கிப்போம் என்பவரிடத்தில், ஊழியஞ் சம்பந்தமாக அல்லது கொடுக்கப்படும் செயல்துறை கட்டளைகளுக்கு தாங்கள் யாருக்கும் பொறுப்பல்ல என்று சொல்லுகிற இப்படிப்பட்டவர்களிடத்தில், தேவனுடைய வேலை ஒப்படைக்கப்படக் கூடாதென்பதை இவர்கள் கவனிக்கவேண்டும். நமக்கு மத்தியிலே மட்டற்ற தன்னம்பிக்கையின் ஆவி ஆளுகைசெய்யும்படி அனுமதிப் போமானால், செய்யப்படும் காரியங்களில் எந்தவிதமான இணக்கமும் இருக்காது; ஆவியின் ஒருமைப்பாடு அங்கிருக்காது; ஊழியத்திற்கும் பாதுகப்பும் இல்லை; ஆண்டவருடைய வேலையிலே ஆரோக்கியமான வளர்ச்சியுமிருக்காது…கிறிஸ்து தாமும் தமது பிதாவும் ஒன்றாக இருப்பதுபோல, தமது பின்னடியார்களும் ஒன்றாயிருக்கவேண்டும் என்று ஜெபித்தார். இந்த ஜெபத்திற்கு பதிலளிக்கப்படுவதைக் காண விரும்புவார்கள், பிரிவினை எனப்படும் தன்மை சிறிதளவு காணப்பட்டாலும், அதை அதைரியப்படுத்த முயற்சிசெய்ய வேண்டும். சகோதரர்கள் மத்தியிம் அன்பின் —ஐக்கியத்தின் ஆவியைக் காப்பாற்ற முயற்சிசெய்ய வேண்டும்.⋆ Mar 278.1

வாக்குத்தத்த வசனம்: Mar 278.2

“உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.” - ஏசாயா 26:3. Mar 278.3