Go to full page →

இயேசுவையே மையமாக வைத்து, அவரையே உயர்த்துங்கள்!, ஜனவரி 15 Mar 29

“... நான் தாவீதின் வெறும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன்...” - வெளிப்படுத்தல் 22:16 Mar 29.1

உலகத்தின் இறுதி நாட்களின் இன்னல்கள் நம்மீது படிகின்றன. மக்கள் எத்தகைய ஆபத்தில் இருக்கிறார்கள் என்பதை நாம் அவர்களுக்கு நம்முடைய ஊழியத்தினால், எச்சரிக்க வேண்டும். தீர்க்கதரிசனம் வெளிப்படுத்தியிருக்கின்ற பக்தி விநயமான காட்சிகளை ஆராய்ச்சி செய்யாமல் விட்டுவிடக் கூடாது. நமது மக்கள் அரை விழிப்போடாவது இருந்திருப்பார்களானால், வெளிப்படுத்தலிலே விளக்கமாக விவரிக்கப்பட்டிருக்கின்ற சம்பவங்கள் எவ்வளவு சீக்கிரமாக நிறைவேறப் போகிறது என்பதைத் தெளிவாக உணர்ந்திருப்பார்களானால், நமது சபைகளிலே ஒரு சீர்திருத்தம் ஏற்பட்டிருக்கும்; மேலும், அநேகர் இந்தத் தூதை விசுவாசித்திருப்பார்கள். இழப்பதற்கு இனி நமக்கு நேரம் கிடையாது.. புதிய விதிமுறைகளை ஊக்குவித்து, தெளிவாக விளக்கப்பட்ட சத்தியங்களை நிறைத்து வையுங்கள். அது இருபுறமும் வெட்டுகின்ற ஒரு கருக்குள்ள பட்டயம்போல் இருக்கும். எதிர்வாதஞ்செய்கின்ற மனப்பாங்கை ஏற்பதற்கு அதிக ஆயத்தமாக இருக்காதீர்கள். அமைதியாக நின்று, நாம் தேவனுடைய இரட்சிப்பைக் காணவேண்டிய நேரங்களும் இருக்கலாம். தானியேல் பேசட்டும்; வெளிப்படுத்தின விசேஷம் பேசட்டும்; சத்தியம் என்னவென்று கூறப்படட்டும். எந்தப் பொருளின் தலைப்பில், எந்தப் பகுதியை நீங்கள் விளக்கிக் கொண்டிருந்தாலும், “தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிற..” (வெளி. 22:16) இயேசுவையே நமது அனைத்து நம்பிக்கையின் மையமாக உயர்த்திக்காட்ட வேண்டும். Mar 29.2

போதிய அளவிற்கு நாம் ஆழமாகச் சென்று, சத்தியத்தை ஆராய்கிறதில்லை. நிகழ்கால சத்தியத்தை விசுவாசிக்கும் ஒவ்வொரு நபரும் அவர் தன்னிலே நிலைத்திருக்கின்ற அந்த நம்பிக்கைக்கான காரணத்தைக் கொடுக்கவேண்டிய நிலைக்குக் கொண்டுவரப்படுவார். தேவனுடைய மக்கள் இராஜாக்களுக்கும் இளவரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் பூமியின் மாபெரும் மனிதர்களுக்கும் முன்பாக நிற்பதற்காக அழைக்கப்படுவார்கள். சத்தியமாவது என்ன என்பதைக் குறித்துத் தாங்கள் நிச்சயமாக அறிந்திருக்கிறோம் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அவர்கள் மனந்திரும்பிய ஆண்களும் பெண்களுமாக இருக்க வேண்டும். இவ்வுலகின் மாபெரும் மனிதர்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்வதைவிட, தேவன் தமது பரிசுத்த ஆவியின்மூலமாக, ஏராளமான காரியங்களை ஒரு கணப்பொழுதில் கற்றுக் கொடுத்து விடுவார், பூமியின்மீது நடைபெற்றுக் கொண்டிருக்கிற போராட்டத்தை இந்த அண்டசராசரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. வரம்பற்ற விலைக்கிரயத்தின்மூலமாக, இரட்சிப்பிற்கு ஏற்ற ஞானவானாகும்படி அறிந்து கொள்ளத்தக்கதான சந்தர்ப்பத்தை தேவன் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தை ஏஆர் தனக்காகப் பயன்படுத்திக் கொள்வாரென்பதை அறிய, தூதர்கள் எவ்வளவு ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! தேவனுடைய மக்களுக்கு முன்பாக ஒரு தூது வைக்கப்படும்போது, அவர்கள் அதற்கு எதிராக எழும்பக் கூடாது; அவர்கள் வேதகாமத்தை எடுத்துவைத்துக் கொண்டு, அந்தத் தூதை வேதத்தோடும் (பிரமாணங்ளோடும் சாட்சியாகமத்தோடும்) ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அந்தத் தூதானது, இத்தகைய பரிசீலனையை தாங்கக் கூடாதிருக்குமானால், அது உண்மையான தூது அல்ல. நமது உள்ளங்கள் விரிவடைய வேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். இந்த நல்ல காரியங்களை ஒவ்வொரு நாளும் நிறைவாக அனுபவித்து மகிழலாம்; ஏனெனில் தேவன் பரலோகத்தின் அனைத்துப் பொக்கிஷங்களையும் நமக்காக திறந்துவைக்க முடியும்.⋆ Mar 30.1

வாக்குத்தத்த வசனம்: Mar 30.2

“அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுது கொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம் பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்.” - எரேமியா 29:12. Mar 30.3