Go to full page →

ஓய்வுநாளைப்பற்றிய சத்தியம் முழுமையாக கூறியறிவிக்கப்படுத்தல்!, ஜூன் 11 Mar 323

“பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக் கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக் கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீருற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள்” என்று கூறினான். - வெளிபடுத்தல் 14:6,7. Mar 323.1

இக்கட்டுக்காலம் ஆரம்பமானபோது, நாங்கள் புறப்பட்டுச் சென்று, ஓய்வுநாள் சத்தியத்தை முற்றிலுமாகக் கூறியறிவித்தபோது, நாங்கள் பரிசுத்த ஆவியினால் நிறையப்பெற்றிருந்தோம். Mar 323.2

இங்கு கூறப்பட்டிருக்கும் இக்கட்டுக்காலத்தின் தொடக்கமானது, வாதைகள் ஊற்றப்படுகின்ற காலத்தைக் குறிப்பிட்டுக்காட்டவில்லை. அந்த வாதைகள் ஊற்றப்படுவதற்கு முன்னர் உள்ள-இயேசு ஆசரிப்புக்கூடாரத்திற்குள் இருக்கின்ற-அந்த குறுகிய காலமே-இக்கட்டுக்காலமாகும். மீட்பின் ஊழியமானது முடிவடைகின்ற அந்தத் தருணத்திலே, பூமியின்மீது இக்கட்டுவந்துகொண்டிருக்கும். ஜாதிகள் கோபங்கொள்ளுவார்கள்; எனினும், மூன்றாம் தூதனின் வேலையைத் தடைசெய்துவிடாதபடி, கட்டுக்குள் அடக்கிவைக்கப்படுகிறார்கள். அச்சமயத்தில், “பின்மாரி அதாவது ஆண்டவரின் பிரசன்னத்தினின்று வருகிற இளைப்பாறுதல், கடைசி ஏழு வாதைகள் ஊற்றப்படுகின்ற அந்தக் காலக்கட்டத்தில் பரிசுத்தவான்கள் நிலைநிற்கத்தக்கதாக, அவர்களை ஆயத்தப்படுத்துவதற்காக, மூன்றாம் தூதனின் உரத்தசத்தத்திற்கு வல்லமை கொடுக்கத்தக்கதாக (பின்மாரி) ஊற்றப்படும்.” Mar 323.3

வெளி. 14.ம் அதிகாரத்திலுள்ள தூதன், கிறிஸ்து வானங்களின் மேகங்களின்மீது வருவதற்கு சற்றுமுன்னர், அறிவிக்கப்படவேண்டிய தூதை அவன் கொடுக்கிறான்... இந்த நேரத்திற்கு சற்று முன்பாக, பழைய-புதிய ஏற்பாடுகளில் சொல்லப்பட்ட-அந்த உடன்படிக்கைப் பெட்டியினுள் வைக்கப்பட்டுள்ள- காலின்கீழ் போட்டு மிதிக்கப்பட்ட-தேவனுடைய பிரமாணத்திற்கு, மக்களின் கவனத்தை ஈர்க்கும்படியாக அழைப்பு கொடுக்கப்படுகிறது... Mar 324.1

தேவனால் பரிசுத்தமாக்கப்பட்டு, ஓய்வுநாளாகக் கைக்கொள்ளப்படவேண்டுமென்று கட்டளையாகக் கொடுக்கப்பட்ட அந்தநாளை, ஓய்வுநாளாக ஆசரிப்பதற்குப் பதிலாக, வாரத்தின் முதல்நாள் ஓய்வுநாளாக ஆசரிக்கப்படுவதைக் காண்கிறார்கள். அவர்கள் தேவனுடைய சித்தத்தை நேர்மையான முறையில் செய்ய விரும்புகிறார்கள். இந்த ஓய்வுநாள் மாற்றத்திற்கான காரணத்தைக் கண்டறிய, வேதவாக்கியங்களை ஆராய ஆரம்பிக்கிறார்கள். இத்தகைய பழக்கத்திற்கான வேதாகம அதிகாரத்தைக் கண்டறியமுடியாமல், அதாவது பிரபலமில்லாத அல்லது பொதுமக்களால் விரும்பப்படாத நிலைக்கு மாறிவிட்ட ஒரு சத்தியத்தை நாம் ஏற்றுக்கொள்வோமா? அல்லது மனிதக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, தொடர்ந்து உலகத்தோடு இணைந்துசெல்வோமா? என்ற கேள்வி எழுகிறது. விரித்துவைக்கப்பட்ட வேதாகமங்களை வைத்து, அழுது ஜெபிக்கிறார்கள். சத்தியத்தைப்பற்றி உறுதியான எண்ணம் ஏற்படும்வரை வேதவாக்கியங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்து, மனசாட்சியின்படி தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்கிறவர்களோடு நிற்பதைத் தெரிந்துகொள்கிறார்கள்.⋆ Mar 324.2

வாக்குத்தத்த வசனம்: Mar 324.3

“அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசைதொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கோடியேற்றுவார்.” - ஏசாயா 59:19. Mar 324.4