Go to full page →

அவசரமான -அவசியமான மூன்று தூதுகள்...!, ஜூன் 14 Mar 329

“இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்க தரிசியை அனுப்புகிறேன். ” - மல்கியா 4:5. Mar 329.1

தேவனுடைய நாளில் நிற்கத்தக்கதாக, ஒரு கூட்டம் மக்களை ஆயத்தஞ்செய்வதற்காக (அட்வெந்து இயக்கத்தால்), ஒரு மாபெரும் சீர்திருத்த ஊழியஞ்செய்யப்படவேண்டியது இருக்கும். அவரைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் மக்களில் அநேகர், நித்தியத்திற்காக அவர்களது குணத்தைக் கட்டிக்கொண்டிருக்கவில்லை என்பதை தேவன் கண்டார். அவர் தமது இரக்கத்தினால், அவர்களது மதிமயங்கிய நிலையினின்று அவர்களை எழுப்பி, ஆண்டவரின் வருகைக்காக ஆயத்தமாகுவதற்கு நடத்திச்செல்ல, ஒரு தூதை அனுப்புவதாக இருந்தார். Mar 329.2

வெளி. 14-லிருந்து இந்த எச்சரிப்பானது சிந்தனைக்குக் கொண்டுவரப்பட்டது. மூன்று அடுக்குகளிலுள்ள இந்தக் தூது, பரலோக தூதர்களால் கூறியறிவிக்கப்படுவதாகக் காட்டப்படுகிறது. அதின்பின் உடனே, “பூமியின் அறுவடையை” அறுப்பதற்காக, மனுஷகுமாரனின் வருகை பின்தொடர்கிறது. Mar 329.3

வானத்தின் மத்தியிலே தூதர்கள் பறப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது; மேலும், உலகத்திற்கு ஒரு எச்சரிப்பின் செய்தியை அறிவிப்பதாகக் காட்டப்படுகின்றது. பூமியின் வரலாற்றின் இறுதிக் கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற மக்களுக்கு இத்தூது நேரடியாகத் தரப்படுகின்ற-அவர்களைப் பாதிக்கின்ற செய்தியாக இருக்கின்றது. இந்தத் தூதர்களின் குரலை எவரும் கேட்கிறது இல்லை; ஏனெனில், பரலோக அண்டசராசரத்தோடு இணைந்து வேலை செய்கின்ற, தேவனுடைய மக்களைக் காட்டுகின்ற அடையாளமாக, இந்த மூன்று தூதுகளும் இணைந்து கொடுக்கப்படவேண்டும். உலகத்திற்கு மூன்று அடுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கின்றது. “இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகார முடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று” (வெளி. 18:1) என்று யோவான் கூறுகின்றான். இது உலகத்திற்கு உச்சரிப்பாகக் கொடுக்கப்படும் இறுதி முன்றடுக்குத் தூதைச் சுட்டிக்காட்டுகிறது. Mar 329.4

வெளி. 14:6-12-ல் கொடுக்கப்பட்டுள்ள மூன்றடுக்கு எச்சரிப்பைத் தள்ளிப்போட்டதின் விளைவின் நேரத்தை வெளி. 18-ம் அதிகாரம் சுட்டிக்காட்டுகின்றது. இரண்டாம் தூதனால் முன்னறிவிக்கப்பட்ட நிலையை, சபை முற்றிலுமாக அடைந்திருக்கும் அவளது தொடர்பிலிருந்து விலகிவரத்தக்கதாக, பாபிலோனிலுள்ள தேவனுடைய மக்கள் அழைக்கப்படுவார்கள். உலகத்திற்காகக் கொடுக்கப்பட வேண்டிய கடைசித் தூது இதுவே. அது தன்னுடைய வேலையை நிறைவேற்றம், “சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிறவர்கள்” (2 தெசலோ. 2:11) மாபெரும் வஞ்சகத்தில் வீழ்ந்துவிடத்தக்கதாக, விட்டுவிடப்படுவார்கள்; பின்னர், யாருடைய இதயங்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள விருப்பமாக இருக்கிறதோ, அவர்கள்மீது சத்தியத்தின் வெளிச்சம் பிரகாசிக்கும். பாபிலோனில் தங்கியிருக்கும் தேவனுடைய பிள்ளைகள், “என் ஜனங்களே,...அவளைவிட்டு வெளியேவாருங்கள்” (வெளி.18:4) என்ற அவரது அழைப்பிற்குச் செவிகொடுப்பார்கள்.⋆ Mar 330.1

வாக்குத்தத்த வசனம்: Mar 330.2

“சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.” - ஏசாயா 61:3. Mar 330.3