Go to full page →

ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊழியம் செய்யவேண்டும்!, ஜூன் 19 Mar 339

“சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்து கொண்டு, புத்திசொல்லு.” - 2 தீமோத்தேயு 4:2 Mar 339.1

ஞாயிறு சட்டங்களை எதிர்த்து நிற்றலானது, அதை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்ற மார்க்க சம்பந்தமான விடாப்பியான கொள்கை உடையோரை, தாங்கள் கொடுக்கும் உபத்திரவத்திலே மேலும் அவர்களை அதிகமாகப் பலப்படுத்தும். சட்டத்தை மீறுகிறவர்கள் என்று அழைக்கப்படுவதற்கு எந்த ஒரு வாய்ப்பையும் கொடுக்காதீர்கள். தேவனுக்கும் மனிதனுக்கும் பயப்படாத மனிதர்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவர்கள் விடப்படுவார்களானால், அந்தக் கட்டுப்படுத்துதலானது, அதின் புதுமையை சீக்கிரத்தில் இழந்துவிடும். ஞாயிற்றுக்கிழமை ஆசரிப்பின் காரியத்தில் மிகவும் கண்டிப்பாக இருப்பது தங்களுக்கு வசதியானதாகவோ அல்லது ஒத்திருப்பதாகவோ இல்லை என்பதை அவர்கள் காண்பார்கள். உங்களது வேதாகமங்களைக் கரங்களில் ஏந்தியவர்களாக, உங்களது இறைப்பணியை நேராகத் தொடர்ந்து செய்யுங்கள். சத்துரு தனது இலக்கைத் தானே மிகவும் புண்படுத்தக்கூடிய வேலையைச்செய்யும் காரியத்தினின்று விலகி, அதே சமய்த்தில், மேன்மையான-முக்கியத்துவம் வாய்ந்த-வேலையைச் செய்துகொண்டு, சமாதானத்தைக் காத்துக்கொள்ளத்தக்கதான ஞானமுள்ள காரியத்தை அந்த நபர் தெளிவாக உணர்வதைக் காட்டுவதினால், அந்த நபர் மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக்கொள்ளமாட்டார். Mar 339.2

ஞாயிற்றுக்கிழமையை இறைப்பணிக்கு நாம் ஒப்படைக்கும்பொழுது, ஏழாம் நாள் வருகை சபையினரை இழிவுபடுத்த நினைக்கும் கடுமையான மனப்போக்கையுடைய வெறியர்களின் கரங்களிலிருந்து சாட்டை அகற்றப்பட்டுவிடும். Mar 339.3

தேவனுக்காக நிறைவேற்றத்தக்கதாக பலதரப்பட்ட அதிகமான வேலை முன்னேறிச்செல்வதற்கு ஞாயிற்றுக்கிழமையைப் பயன் படுத்தலாம். அந்த நாளிலே, திறந்த வெளியிடங்களிலும், வீடுகளிலும், ஜெபக்கூட்டங்களை நடத்தலாம்; வீடுவீடாக மக்களைச் சந்தித்து, தேவ செய்தியைக் கொடுக்கலாம். எழுதும் திறமையுள்ளோர் அந்தநாளில் கட்டுரைகள் எழுதலாம். எப்பொழுதெல்லாம் சாத்தியமோ அப்பொழுதெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் மார்க்க சம்பந்தமான ஆராதனைகள் நடத்தப்படட்டும். மிகவும் அதிக ஆர்வத்தை எழுப்பும் கூட்டங்களாக அவைகளை நடத்துங்கள். தூய்மையான எழுப்புதல் கீதங்களைப் பாடுங்கள்; மேலும், மீட்பரின் அன்பைப்பற்றி வல்லமையோடும், நிச்சயத்தோடும் பேசுங்கள். இச்சையடக்கம்பற்றிய உண்மையான-மார்க்க சம்பந்தமான அனுபவத்தைப்பற்றிப் பேசுங்கள். இவ்வாறாக, எப்படி ஊழியஞ் செய்ய வேண்டும் என்பதைப்பற்றி நீங்கள் அதிகமாகக் கற்றுக் கொள்வீர்கள். Mar 339.4

வாரத்தின் முதல்நாளை ஆசரிக்கவேண்டுமென்று வலியுறுத்தும் சட்டமானது, விழுந்துபோன கிறிஸ்தவ உலகத்தின் படைப்பாகும். ஞாயிற்றுக்கிழமை ஆசரிப்பு, பாப்பு மார்க்கத்தின் குழந்தையாகும். தேவனுடைய ஓய்வின் பரிசுத்த நாளுக்கும்மேலாக, நாளுக்கும்மேலாக, கிறிஸ்தவ உலகத்தால் உயர்த்தப்பட்டதாகும். எந்த வகையினாலும் தேவனுடைய மக்கள் அதற்கு வணக்கஞ்செலுத்தக்கூடாது. எதிர்ப்பை ஆண்டவர் தவிர்க்கவேண்டுமென்று விரும்பும்போது, எதிர்ப்பைத் துணிவுடன் சந்திப்பதினால், அவர்கள் தேவ சித்தத்தைச் செய்கிறவர்கள் என்று கருதப்படமாட்டார்கள், என்பதை அவர்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். Mar 340.1

அற்புதமான காட்சிகள் நமக்கு முன்பாக வெளிப்படையாகக் காட்டப்படுகின்றன. இந்தக் காலத்தில் எப்பக்கத்திலும் தீமை ஆளுகைசெய்யும். தேவனுடைய சித்தத்தைச் செய்வதற்காக, தங்களது சுயசித்தத்தை ஒதுக்கிவைத்துவிட்ட இதயங்களிலும் ஜீவியங்களிலும் தேவனுடைய பிரமாணம் எழுதப்பட்ட ஒரு கூட்டம் மக்கள் இருக்கிறார்கள் என்பதை, இந்த உலகம் காணத்தக்கதாக, தேவனுடைய மக்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டிருப்பவர்களது ஜீவியங்களால், ஒரு உயிருள்ள சாட்சி பகரப்பட வேண்டும்.⋆ Mar 340.2

வாக்குத்தத்த வசனம்: Mar 340.3

“பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்துக்கும், யுத்தத்திலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கி மீட்பர்.” - யோபு 5:20. Mar 340.4