Go to full page →

சிறப்புடைய ஓர் மேன்மையான வழி!, ஜனவரி 18 Mar 35

“உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, ..... ஓயுங்கள்; நன்மைசெய்யப் படியுங்கள்...” - ஏசாயா 1:16,17. Mar 35.1

மடமை, களியாட்டுகளின்மீதுள்ள ஆசை, பாவம் நிறைந்த பழக்கவழக்கங்கள் ஆத்துமாவையும் சரீரத்தையும் குணத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த உலகம் முழுவதும் தீயொழுக்கம் எனப்படும் தொழுநோயால் நிறைந்திருக்கிறது. சாவிற்கேதுவான தீயொழுக்கம் எனப்படும் மலேரியா ஜுரம் ஆயிரமாயிரம் மக்களை அளித்துக்கொண்டிருக்கிறது. Mar 35.2

அநேகர் பாவத்தில் மூழ்கியிருக்கிறார்கள்; அநேகர் கடுந்துயர் அனுபவிக்கிறார்கள். துன்பம், இல்லாமை, அவிசுவாசம், நம்பிக்கையின்மை போன்ற காரியங்களால் நெருக்கப் படுகிறார்கள். உடலிலும், ஆன்மாவிலும் வகைவகையான ஒவ்வொரு வியாதியானாலும் துன்பமடைகிறார்கள். தங்களது துன்பங்களிலிருந்து விடுதலையும் ஆறுதலும் பெற ஏங்குகிறார்கள்; ஆனால், சாத்தான் அழிவிற்கும், மரணத்திற்கும் இட்டுச் செல்கின்ற பலவிதமான இச்சைகளையும், சிற்றின்பங்களையும்நாடித்தேடி அலையும்படி அவர்களைச் சோதிக்கிறாள். அவர்கள் வாயில் இருக்கும்பொழுதே சாம்பலாகிப் போகத்தக்கதான, சோதோமின் கினை அவர்களுக்கு வழங்குகிறான். Mar 35.3

உலகத்தின் பயங்கரமான நிலைபற்றிய ஒரு சித்திரம் எனக்கு முன்பாக வைக்கப்பட்டது. ஒழுக்கக்கேடு எங்கணும் பெருகி வழிகின்றது. இழிந்த காமவெறி இந்தக் கடைசி நாட்களில் காணப்படுகின்ற ஒரு தனிப்பட்ட, மிக முக்கியமான பாவமாகும். ஒழுக்கக் கேடானது, அதின் சிதைந்த - அருவருப்பான தலையை இந்த காலத்தில் உயர்த்தி இருப்பதுபோன்ற, ஒருபோதும் துணிகரமாக உயர்த்தியது கிடையாது.. பெருகிவழியும் அக்கிரமமானது அவிசுவாசியிடமும், கேலி செய்பவனிடமும் மாத்திரமல்ல, எங்கணும் ஏராளமாகக் காணப்படுகிறது. காரியம் இப்படி இருக்குமானால் இப்படித்தான் காணப்படும்; ஆனால், காரியம் அப்படியல்ல. கிறிஸ்துவின் மார்க்கத்தில் இருப்பவர்கள் என்று கூறிக்கொள்பவர்களாகிய அநேக ஆண்களும் பேரன்களும் இத்தகைய பாவத்தில் இருக்கிறார்கள். அவரது வருகையை எதிர்நோக்கி கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக் கொள்பவர்களிலும் கூட சிலர், சாத்தானைவிட எந்தவிதத்திலும், அந்த வருகையின் சம்பவத்திற்காக ஆயத்தமாக இல்லை (சாத்தானும் ஆயத்தமாயிருக்க்வில்லை; அவர்களும் ஆயத்தமாக இருக்கவில்லை.) இத்தகைய அருவரூப்புகளிளிருந்து தங்களைத் தாங்களே கழுவிக் கொள்ளவில்லை. அவர்கள் நீண்ட காலமாக இச்சைக்கு அடிமைப்பட்டு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு இக்காரியமானது இயல்பான தன்மையாக மாறிவிட்டது.. அவர்களது சிந்தனைகள் தூய்மைகெட்டதாகி, அவர்களது எண்ணங்களின் படைப்புத்திறனே கேடடைந்துவிட்டது; எப்படியெனில், நயாகரா அருவியின் போக்கை மாற்றி, திரும்பவும் அருவிக்கு மேற்றிசையில் கொட்டச்செய்வது எவ்வளவு கடினமோ, அதேபோன்று இப்படிப்பட்டவர்களின் உள்ளங்களை பரிசுத்தமான - தூய்மையான காரியங்கள்மீது நாட்டங்கொள்ளச் செய்வது அவ்வளவு கடினமான காரியமாகும்... ஒவ்வொரு கிறிஸ்தவனும், அவனது இச்சைகளைக் கட்டுப்படுத்தி , கொள்கையினால் அடக்கி ஆளப்படவேண்டும்... Mar 35.4

சத்தியத்தை அறியாதவர்களாக, தேவனுடைய வசனத்தில் காணப்படும் கொள்கைகளால் அடக்கியாளப்பட மறுக்கிறவர்கள் மத்தியில், இழிந்த சிற்றின்ப வேட்கை, தூய்மைக் கேடு, விபசாரம், தீய செயல்கள், கொலைவெறி ஆகியவை அன்றாடம் காணப்படும்; இந்த நிலையிலிருக்குமானால், தாங்கள் கிறிஸ்துவின் பின்னடியார்களென்று சொல்லிக் கொள்ளுகிற வகுப்பாரைப் போன்று தேவனோடும், அவரது தூதர்களோடும் நெருக்கமாக இணைந்திருப்பது போன்று இருப்பவர்கள், சிறப்பான மேலான வழியை, அவர்களுக்குக் காட்ட வேண்டியது எவ்வளவு முக்கியமான காரியமாகும்? மிருக இச்சைகளால் அடக்கி ஆளப்படும் வகுப்பினருக்கு முன்பாக, பளிச்சென்று தெரியத்தக்கதாக, கற்போடும் ஒழுக்கத்தோடும் காணப்பட வேண்டியது எவ்வளவு முக்கியமான காரியமாகும்.⋆ Mar 36.1

வாக்குத்தத்த வசனம்: Mar 36.2

“இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.” - ஏசாயா 43:21 Mar 36.3