Go to full page →

விழிப்படைவீர்... வேளை வந்துவிட்டது!, ஜூலை 31 Mar 423

“உணர்வுள்ளவன் இல்லை: தேவனைத் தேடுகிறவன் இல்லை: எல்லாரும் வழிதப்பி ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்: நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.” - ரோமர் 3:11, 12. Mar 423.1

மாபெரும் போராட்டம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடலில் அல்லது நிலத்திலே ஏற்படும் பேரழிவுகள், அனைத்துக் காரியங்களுக்கும் முடிவு மிகவும் சமீபம் என்ற உண்மைக்குச் சாட்சியாக இருக்கிறது. யுத்தங்களும் யுத்தங்களின் செய்திகளும் அதை வலியுறுத்திக் கூறுகின்றன. நமக்கு முன்பாக நடைபெறவிருக்கும் சம்பவங்களை எதிர்பார்த்திருக்கின்றபோது, படபடவென்று நாடி துடிக்காத கிறிஸ்தவன் எங்காவது இருக்கின்றானா? நமது ஆண்டவர் வருகிறார்! நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிற தேவனின் காலடிச் சத்தத்தை நாம் கேட்கிறோம். Mar 423.2

கிறிஸ்துவின் வருகை வெகுசீக்கிரமாக இருக்கிறது என்பதைப் பற்றிய அறிவையும், அதின் நோக்கத்தையும் இழந்துவிட நாம் அனுமதிக்கக்கூடாது: அவ்வாறு செய்வோமானால், கவலையின்றி கவனமற்றவர்களாக, அயர்ந்த நித்திரையில் ஆழ்ந்துவிடுவோம்; உள்ளார்ந்த காரியங்களுக்கு உணர்வற்றவர்களாகவும்-அக்கறையற்றவர்களாகவும் மாறிவிடுவோம். நித்திரை மயக்கத்திலே, நாம் பொய்யான உலகில் இருக்கும்பொழுது, நம்மைச் சுற்றிலும் நடைபெறும் காரியங்களைக்குறித்து நமக்கு உணர்விருக்காது. Mar 423.3

தங்களைச் சுற்றிலும் கண்ணைக் கூசத்தக்கதான சத்திய ஒளியில் இருக்கும் நபர்களும் இருக்கிறார்கள்; அவர்கள் சத்துருவினால் கவர்ச்சிக்கப்பட்டு, அவனது மயக்கும் வல்லமைக்கடியில் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்போல் இருக்கிறார்கள். இந்த நமது உலகத்திற்கு வரப்போகின்ற, அந்த மகாநாளிற்கு அவர்கள் ஆயத்த மாகிக்கொண்டிருக்கவில்லை. மார்க்க சம்பந்தமான சத்தியங்களுக்கு முற்றிலும் உணர்வற்றவர்கள்போன்று காணப்படுகிறார்கள். Mar 423.4

விழிப்போடிருக்கும் சில வாலிபர்கள் இல்லையா? இரவும் வருகிறது, விடியற்காலமும் வருகிறது எனக் காண்கிறவர்கள், தங்களது தூங்குகின்ற தோழர்களை எழுப்பிவிடத்தக்கதாக, தளரா ஊக்கத்தோடு பணிபுரிய வேண்டும். அவர்களால் உணர முடியாதா? அவர்களுக்காக ஜெபியுங்கள். அவர்கள் தங்களது சொந்த வாழ்க்கை மற்றும் குணத்தின்மூலமாக, கிறிஸ்து சீக்கிரமாக வருகிறார் என்பதை தங்களுக்குத் தாங்களே விசுவாசிக்கும்படிச் செய்யுங்கள்... நமக்கும் நித்தியத்திற்க்குமுள்ள இடைவெளி துரிதமாகக் குறைந்துவருகிறது என்ற காரியமானது. நமது இதயத்தை ஆழமாக உணர்த்தவேண்டும். நமது குணத்தைப் பூரணப்படுத்துகிற நமது பணியிலே, கடந்துசெல்லும் ஒவ்வொரு நாளும், நமக்கு ஒருநாளைக் குறைத்துக்கொண்டிருப்பதைப் போன்று, அநேகர் தூங்கிக்கொண்டு கவலையற்ற அக்கறை இன்மையோடு, அருமையான மணிவேளைகளை பொழுதுபோக்குகளில் வீணடித்துக்கொண்டிருப்பதால், விசுவாசிகளாயிருப்பவர்கள் தெளிவாகவும் விழிப்போடும் ஊக்கத்தோடுமிருந்து, கடும் உழைப்பாளர்களாகவும் விழித்திருந்து ஜெபஞ்செய்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்... Mar 424.1

அன்புள்ள வாலிபர்களே, உங்களது விளக்குகளின் திரிகள் வெட்டப்பட்டு, சரியாக்கப்பட்டு எரிந்துகொண்டிருக்கின்றனவா?⋆ Mar 424.2

வாக்குத்தத்த வசனம்: Mar 424.3

“உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.” - சங்கீதம் 91:11. Mar 424.4