Go to full page →

கிறிஸ்துவே நமது உதவியாளரும் மீட்பருமாவார்!, ஆகஸ்டு 4 Mar 431

“அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.” - ரோமர் 5:19. Mar 431.1

விழுந்துபோன மனிதன் தனது மானிட சக்தியினால் சாத்தானை மேற்கொள்ள முடியாதாதினால், மானிட வல்லமையும் தெய்வீக வல்லமையும் ஒருங்கே இணையப்பெற்ற கிறிஸ்து அதைக் கொண்டு பரலோக இராஜரிக மன்றங்களில் அவனுக்கு உதவிசெய்ய வந்தார். ஏதேனில் இருந்த ஆதாம் அவனது மேம்பட்ட அனுகூலங்களால் சாத்தானின் சோதனைகளுக்கு எதிர்த்துநின்று, ஈடுகொடுத்து அவன் மீது வெற்றிபெற்றிருக்கமுடியும். விழுகைக்குப்பின், ஆதாம் ஏதேனினின்று வெளியேற்றப்பட்டு, தேவனின் அன்பினின்றும், வெளிச்சத்தினின்றும் விலகிய நிலையில், அவனது சொந்த சக்தியினால், சாத்தானின் சோதனைகளை எதிர்த்து நிற்பது முடியாத காரியம் என்பதும் கிறிஸ்துவிற்குத் தெரியும். மனிதன் முற்றிலும் அழிந்துபோகாதபடி, அவனைக் காப்பாற்றி, அவனுக்கு நம்பிக்கையைக் கொண்டுவருவதற்காக, மனிதன் எங்கு இருக்கிறானோ அங்கே, அவனை சென்றடையத்தக்கதாக, அவர் தம்மையே தாழ்த்தி, மனிதனின் தன்மையை எடுத்து, அவரது தெய்வீக வல்லமையோடு மானுடத்தையும் இணைத்தார். விழுந்துபோன ஆதாமின் குமாரர்களுக்கும் குமாரத்திகளுக்கும், அவர்கள் தங்களுக்காகப் பெற்றுக்கொள்ளக்கூடாத சக்தியை, அவரது நாமத்தினாலே, சாத்தானின் சோதனைகளை அவர்கள் மேற்கொள்ளத்தக்கதாக, அவர்களுக்கு அந்த வல்லமையைப் பெற்றுக்கொடுக்கிறார். Mar 431.2

ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திலே மிகவும் சாதகமான சூழ்நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள்…அவர்கள் பாவத்தின் ஆக்கினைத் தீர்ப்பில்லாதவர்களாக அங்கிருந்தார்கள்…அவர்கள் உலகில் வாழ்வதற்கு ஆரம்பத்தைக் கொடுத்தவரே, அவர்களது ஆசிரியாராக இருந்தார்; ஆனால், தந்திரமுள்ள எதிராளியின் சோதனைகளுக்கும் வல்லமைக்குமடியில் அவர்கள் விழுந்துபோனார்கள். தேவனுடைய அரசாங்கத்திற்கு எதிராக, சாத்தான் நான்காயிரம் ஆண்டுகள் போடாடிக்கொண்டிருந்தான். தீர்மானமான செயல்திட்டத்தின்மூலமாக, வல்லமையையும் அனுபவத்தையும் பெற்றுக் கொண்டான். ஏதேனில் இருந்த ஆதாமைப்போல் விழுந்துபோன மனிதர்களுக்குச் சாதகமான சூழ்நிலைகள் இல்லை. அவர்கள் நான்காயிரம் ஆண்டுகள் தேவனைவிட்டு பிரிக்கப்பட்டவர்களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். புரிந்துகொள்ளும் ஞானம், சாத்தானின் சோதனைகளை எதிர்க்கும் வல்லமை ஆகியவை இந்த பூமியிலே சாத்தான் வெற்றியோடு ஆளுகை செய்வாதாகத் தோன்றும்வரை குறைந்துகொண்டே போய்விட்டது. இன்சுவைக் கவர்ச்சி, இச்சை, உலகப்பற்று, துணிகரமான பாவங்கள் ஆகியவை தீமையின் மாபெரும் பிரிவுகள் ஆகும். இவைகளினினின்று அனைத்து வகையான கேடுபாடுகளும் வளர்ந்தன. Mar 431.3

நமது ஜீவியங்கள் ஒரு கடுமையான சிக்கலில் இருப்பது போன்று தோன்றலாம்; ஆனால், தலைமை ஊழியக்காரராகிய அவரிடம் நம்மை ஒப்படைப்போமானால், அவருடைய சொந்த மகிமைக்கு ஏற்றதான வாழ்க்கை, குணம் ஆகியவைகளை நம்மில் கொண்டுவருவார். அந்தக் குணமானது, அதாவது கிறிஸ்துவின் மகிமையை வெளிப்படுத்துகிற குணமானது, தேவனுடைய பரலோகத்திலே ஏற்றுக் கொள்ளப்படும். Mar 432.1

விசுவாசத்தினாலே தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்ளுகிற அனைவரும், ஆதாம் தன்னுடைய மீறுதலிற்கு முன்பாக வாழ்ந்திருந்த அந்த பாவமற்ற நிலையை அடைவார்கள்.⋆ Mar 432.2

வாக்குத்தத்த வசனம்: Mar 432.3

“நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம்; அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?” - உபாகமம் 4:7. Mar 432.4