Go to full page →

ஒவ்வொருநாளும் மீட்பு!, ஆகஸ்டு 16 Mar 455

“…தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவான்.” - 1 கொரிந்தியர் 10:12. Mar 455.1

பேதுருவின் விழுகையானது, உடனடியாக அந்தக் கணத்திலே நிகழ்ந்ததல்ல; படிப்படியாக நிகழ்ந்ததொன்றாகும். அவனது சுய நம்பிக்கையானது, தான் இரட்சிக்கப் பட்டவன் என்ற நம்பிக்கைக்கு அவனை வழிநடத்தியது. கீழிறங்கிச்செல்லும் பாதையை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து, இறுதியில் தனது எஜமானரை மறுதலிக்கும்வரையிலும் அந்த எண்ணம் அவனை இட்டுச் சென்றது. ஒருபோதும் சுயத்திலே பாதுகாப்போடு நம்பிக்கை வைக்கமுடியாது. இந்த உலகத்திலே சோதனைக்கு எதிராக பாதுகாப்போடு இருக்கிறோம் என்று எண்ண முடியாது. இரட்சகரை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள், தங்களது மனந்திரும்புதல் எவ்வளவிற்கு உண்மையானதாக இருந்தாலுங்கூட, தாங்கள் இரட்சிக்கப் பட்டோமென்று எண்ணும்படியோ, சொல்லும்படியோ ஒருபோதும் கற்றுக்கொடுக்கப்படக் கூடாது; இது தவறாக வழிநடத்தக் கூடியாதாகும். நம்பிக்கையையும் விசுவாசத்தையும் நெஞ்சாரப் பேணத்தக்கதாக ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். நாம் நம்மை கிறிஸ்துவிற்கு ஒப்புக்கொடுத்து, அவர் நம்மை ஏற்றுக்கொள்கிறார் என்று அறிந்திருக்கிறதினாலுங்கூட, சோதனை நம்மை எட்டாத அளவிற்கு, அதற்கப்பால் இருக்கிற நிலையில் நாம் இருப்பதில்லை… பாடுகளைச் சகிப்பவர்கள் மாத்திரமே ஜீவகிரீடத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும் -யாக்கோபு 1:12. Mar 455.2

இயேசுவை ஏற்றுக்கொள்ளுகிறவர்களில் தங்களது முதல் நம்பிக்கையிலே, “நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன்” என்று சொல்லுகிறவர்கள், தங்களிடத்திலேயே மிகவும் உறுதியான நம்பிக்கைவைக்கும் ஆபத்தில் இருக்கிறார்கள்.. “தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்” -1 கொரிந்தியர் 10:12. தொடர்ந்து சுயத்தின்மீது நம்பிக்கை வைக்காமல், கிறிஸ்துவைச் சார்ந்திருப்பதில் மாத்திரமே நமது ஒரே பாதுகாப்பு இருக்கிறது. Mar 455.3

கிறிஸ்துவை அநேகர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் முதிர்ச்சியுடைய கிறிஸ்தவர்களாக ஒருபோதும் மாறுகிறதில்லை. மனிதன் விழுந்துபோனவனென்றும், அவனுடைய செயல்திறன் எல்லாம் பலவீனப்பட்டுக்கிடக்கிறது என்றும், ஒழுக்கநிலையில் வெற்றி காண்பதற்குத் தகுதியற்றவனென்றும் அவர்கள் ஏற்றுக் கொள்ளுகிறார்கள்; ஆனால், கிறிஸ்து அனைத்துப் பாரங்களையும், அனைத்துத் துன்பங்களையும், அனைத்து சுயமறுப்புகளையும் சுமந்துவிட்டாரென்றும், அவர் சுமப்பதற்கு அனுமதிக்க அவர்கள் விருப்பத்தோடிருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். அவரை விசுவாசித்தால் மட்டும் போதுமென்றும், தாங்கள் தங்களுக்காகச் செய்யவேண்டியது எதுவுமே இல்லையென்றும் கூறுகிறார்கள்; ஆனால், கிறிஸ்து: “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” என்று (மத்தேயு 16:24) கூறுகிறார். “நான் இரட்சிக்கப்பட்டேன்” என்று கூறுபவர்களாக, முன்னேற்றத்திற்கான அனைத்துக் காரியங்களையும் விட்டுவிட்டு, ஒரு திருப்தியான நிலையில் நாம் ஒரு போதும் இளைப்பாறிக்கொண்டிருக்கக்கூடாது. இந்தக் கருத்தானது, ஏற்றுக்கொள்ளப்படும்பொழுது, விழிப்போடிருத்தல், ஜெபித்தல், மேலான இலட்சியங்களை அடையவேண்டுமென்ற ஊக்கத்தோடு முயன்று முன்னேறுதல், ஆகியவைகளுக்கான நோக்க்கங்கள் இல்லாமல் நிறுத்தப்பட்டுப்போகின்றன. கிறிஸ்து வரும்வரை, தேவ பட்டணத்தின் வாசல்கள் வழியாகப் பிரவேசிக்கும்வரை, பரிசுத்தமாக்கப்பட்ட எந்த நாவும் இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசுவதை நாம் காணமுடியாது; பின்னர் மிகப்பெரிய ஒழுங்கு முறையோடு, அந்த நித்திய விடுதலைக்காக, தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் நாம் மகிமையைச் செலுத்துவோம்.⋆ Mar 456.1

வாக்குத்தத்த வசனம்: Mar 456.2

“சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.” - 1 கொரிந்தியர் 1:18. Mar 456.3