Go to full page →

ஓய்வுநாள் தேவனுடைய முத்திரை!, ஆகஸ்டு 26 Mar 475

“என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்” என்றேன். - எசேக்கியேல் 20:20. Mar 475.1

இஸ்ரவேல் புத்திரர் தாங்கள் தேவனுடைய சம்பத்து என்பதைக் காட்டுவதற்காக, தங்களது வீட்டுக் கதவுகளிலே இரத்தத்தினால் கையொப்பமிட்டிருந்தார்கள் (அடையாளமிட்டிருந்தார்கள்). இந்தக் காலத்திலே, தேவனுடைய பிள்ளைகள் தேவனால் நியமிக்கப்பட்ட கையொப்பத்தை எடுத்துச் செல்வார்கள். தேவனுடைய பரிசுத்த பிரமாணத்திற்கு இசைவாக அவர்கள் தங்களை வைத்திருப்பார்கள். பொதுவான அழிவினின்று இஸ்ரவேல் மக்களை பாதுகாப்பதற்காக, எபிரெயர் குடியிருப்புகளிலுள்ள கதவுகளிலே எப்படி ஒரு திட்டமான அடையாளம் வைக்கப்பட்டிருந்ததோ, அதைப்போன்று, தேவனுடைய பிள்ளைகள் ஒவ்வொருவர்மீதும் ஒரு அடையாளம் வைக்கப்படும். “நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்” —எசேக்கியேல் 20:12. Mar 475.2

இந்த நமது உலகிலுள்ள ஒவ்வொரு ஆத்துமாவும் படைப்பினாலும், மீட்பினாலும் தேவனுடைய சொத்தாகும். ஒவ்வொரு தனிப்பட்ட நபரும், அவரது ஜீவியத்திற்கான ஒரு பரீட்சையில் வைக்கப்பட்டிருக்கிறார். தேவனுக்குச் சொந்தமானதை அந்த நபர் தேவனுக்குக் கொடுத்துவிட்டாரா? அவரால் கிரயத்திற்குக் கொள்ளப்பட்ட உடைமையாக, தேவனுக்குச் சொந்தமான அனைத்தையும் அவரிடத்தில் அந்த நபர் ஒப்படைத்துவிட்டாரா? இந்த வாழ்க்கையிலே, ஆண்டவரைத் தங்களது பங்காக மனதாரப் பெற்றுக்கொண்டவர்கள், அவரது கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய விசேஷ உடைமை என்பதைக் காட்டுகின்ற தேவனுடைய அடையாளமாகிய அந்த முத்திரையைப் பெற்றுக்கொள்வார்கள். கிறிஸ்துவின் நீதியானது, அவர்களுக்கு முன்பாகச் செல்லும். ஆண்டவரது மகிமை அவர்களுக்கு மீண்டும் கிடைத்த வெகுமதியாக இருக்கும். அவரது அடையாளத்தைப் பெற்றிருக்கும் ஒவ்வொரு மானிடனையும் அவர் பாதுகாக்கிறார்; மேலும், கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்…”-யாத். 31:12,13; “ஆறு நாளும் வேலை செய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலை செய்யப்படவேண்டும். ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக் கடவர்கள். அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறு நாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார்” (யாத். 31:15,16,17) என்றார். Mar 475.3

தேவனுடைய இந்த அங்கீகாரமானது, ஒவ்வொரு மானிடனுக்கும் ஒரு உயர்ந்த மதிப்புடையதாக விளங்குகிறது. அவரை நேசித்து, அவரைச் சேவிக்கிற அனைவரும், அவரது பார்வையில் மிகவும் அருமையானவர்கள். தேவனில் இருப்பது போன்ற சத்தியத்திற்கு எங்கு அவர்கள் தகுதியுள்ள பிரதிநிதிகளாக நிற்கமுடியுமோ, அங்கு அவர்களை அவர் வைப்பார்.⋆ Mar 476.1

வாக்குத்தத்த வசனம்: Mar 476.2

“உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவர்களைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்…” - ஆதியாகமம் 12:3. Mar 476.3