Go to full page →

மரண தண்டனைக்கான சட்டம் இயற்றப்படுதல்!, செப்டம்பர் 17 Mar 519

“மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலை செய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.” - வெளிப்படுத்தல் 13:15. Mar 519.1

இயேசு மகா பரிசுத்தஸ்தலத்தைவிட்டு வெளியேறும் போது, இதுவரை அதிகாரிகளிடமிருந்த-மக்களிடமிருந்த-கட்டுப்படுத்துகின்ற அவரது தேவ ஆவியானவர் எடுத்துக் கொள்ளப்படுகிறார். எனவே, அதிகாரிகளும் மக்களும் தீய தூதர்களின் கட்டுப்பாட்டிற்கு விட்டுவிடப்படுவார்கள்; அப்போது, சத்தானுடைய ஆலோசனை மற்றும் வழிமுறைகளின்படியாக, பயங்கரமான சட்டங்கள் பிறப்பிக்கப்படுகின்றன. காலம்மட்டும் குறைக்கப்படாதிருக்குமானால், யாருமே உயிரோடிருக்கக்கூடாத படிக்கு அழிக்கப்பட்டுப்போவார்கள். Mar 519.2

ஆசரிப்புக்கூடாரத்திலே இயேசுவின் வேலை முடிவுபெறும் வரைக்கும் நான்கு தூதர்களும் நான்கு காற்றுகளையும் பிடித்திருப்பார்கள்; பின்பு, கடைசி ஏழு வாதைகளும் வரும் என்பதை நான் கண்டேன். இந்த வாதைகள் நீதிமான்களுக்கெதிராக துன்மார்க்கரை கோபவெறி கொள்ளச்செய்தது. நாங்கள்தான் அந்த வாதைகளை அவர்கள்மேல் கொண்டுவந்தோம் என்று நினைத்தார்கள்; எனவே, ஒருவேளை நம்மை இந்த உலகத்திலிருந்து அகற்றிவிட்டால், வாதையும் நின்றுபோகும் என்று யோசித்தார்கள். விடுதலைக்காக இரவும் பகலும் பரிசுத்தவான்களைக் கதறச்செய்த சட்டம் இப்படியாகப் பிறந்தது; இதுவே, யாக்கோபின் இக்கட்டுக் காலம். Mar 519.3

உலகத்தில் தலைமை தாங்குகிற மனிதர்கள் ஒருவருக் கொருவர் கலந்தாலோசித்தார்கள். சாத்தானும் அவனுடைய தூதர்களும் அவர்களைச் சுற்றிலும் சுறுசுறுப்பாக இயக்கினார்கள். அவர்களால் எழுதப்பட்ட பிரதிகளை (அறிவிப்புகளை) நான் பார்த்தேன். அவற்றின் நகல்கள் உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டன. அதில், பரிசுத்தவான்கள் தங்கள் தனித்தன்மை வாய்ந்த விசுவாசத்தை விட்டுவிட்டு, ஓய்வுநாள் ஆசரிப்பைக் கைவிட்டு, வாரத்தின் முதல்நாளை ஆசரிக்காவிடில், குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு, அவர்களைக் கொன்றுபோட, பொதுமக்களுக்குச் சுதந்திரம் தருவதாக எழுதியிருந்தது. கற்பனைகளைக் கைக்கொள்ளுகிற மக்களைக் கொன்றுபோட ஒரு பொதுவான சட்டத்திற்கான காலம் குறிக்கப்பட்டிருந்த போதிலும், அக்குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அவர்களைக் கொன்றுபோட எதிரிகள் விரும்பினார்கள்; ஆனால் உண்மையுள்ள அத்துமாவைச் சுற்றிலும், பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருக்கிற வல்லமையான தூதர்களை எவரும் கடந்துசெல்ல முடியாது. பட்டணங்களிலிருந்து கிராமங்களுக்குத் தப்பிச் செல்லும்போது, சிலர் தாக்கப்பட்டனர்; ஆனால், அவர்களுக்கு விரோதமாக உயர்த்தப்பட்ட பட்டயம் வலிமையிழந்து, ஒரு வைக்கோலைப்போல, முறிந்து-சகதியற்று-விழுந்தது. மற்றவர்கள் யுத்த வீரர்கள்போலக் காணப்பட்ட தூதர்களால் பாதுகாக்கப்பட்டனர். Mar 519.4

ஒருவேளை, மனிதர்கள் பரலோகப் பார்வையோடு பார்ப்பார்களானால், கிறிஸ்துவின் பொறுமையின் வசனத்தைக் காத்துக் கொண்ட பிள்ளைகளைச்சுற்றிலும் வல்லமையான தூதர் கூட்டங்கள் நிற்பதைச் காண்பார்கள். அவர்களுடைய மன வேதனையையும் அவர்களுடைய ஜெபங்களையும் அந்தத் தூதர்கள் பரிவுள்ள மென்மையோடு கண்டிருக்கிறார்கள். அவர்களை அழிவிலிருந்து காக்கிற அவர்களுடைய அதிபதியின் கட்டளைகளுக்குகாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால், அவர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். தேவ மக்கள் அவர் குடிக்கும் பாத்திரத்தில் குடிக்கவும், அவர் பெறும் ஸ்நானத்தைப் பெறவும் வேண்டும்.⋆ Mar 520.1

வாக்குத்தத்த வசனம்: Mar 520.2

“நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.” - ஏசாயா 30:21. Mar 520.3