Go to full page →

இந்த உலகம் தத்தளிக்கிறது!, அக்டோபர் 4 Mar 553

“இதினிமித்தம் சேனைகளின் கர்த்தருடைய உக்கிரத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீக்கும்படி வானத்தை அதிரப்பண்ணுவேன். துரத்தப்பட்ட வெளிமானைப்போலும், யாரும் சேர்க்காத ஆட்டைப்போலும் இருப்பார்கள்; அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்குப்போக முகத்தைத் திரும்பி, அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப்போவார்கள்.” - ஏசாயா 13:13,14. Mar 553.1

அடர்ந்த மேகங்கள் இன்னமும் வானத்தை மூடிக்கொண்டிருக்கின்றன; சூரியன் அவ்வப்போது வெளிப்படுகிறது. பார்வைக்கு அது யேகோவாவின் பழிவாங்கும் கண்போன்று தோற்றமளிக்கிறது. பூமியையே அக்கினிஜீவாலையாக மாற்றுவதுபோன்ற கொடிய மின்னல்கள் வானங்களினின்று துள்ளி வருகின்றன. இடியின் பயங்கரமான குமறலுக்கும்மேலாக, வெவ்வேறுவிதமான-புரிந்துகொள்ளக்கூடாத-அச்சந்தரும் குரல்கள் துன்மார்க்கர்களுக்கு வரும் அழிவை அறிவிக்கின்றது. நடுவிலே, அந்தச் சமயத்தில் கூறப்பட்ட வார்த்தைகளை எல்லாரும் புரிந்துகொள்ளவில்லை; ஆனால் கள்ளப்போதகர்கள் அவைகளைத் தெளிவாகக் புரிந்துகொள்கிறார்கள். கொஞ்ச நேரத்திற்கு முன்பு கவலையற்று, பெருமையோடு தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிற பிள்ளைகளை எதிர்த்து எக்களித்தவர்கள், இப்போது திகிலடைந்து, பயத்தால் நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். மூலகங்களால் ஏற்படும் சத்தங்களுக்குமேல் அவர்களது புலம்பல் கேட்கப்படுகிறது. பிசாசுகளும் கிறிஸ்துவின் தெய்வீகத்தை ஒப்புக்கொண்டு, அவர் வல்லமைக்கு முன்பு நடுங்குகின்றன…மனிதர்களோ அஞ்சி அஞ்சி ஆதரவற்ற பயங்கரமான நிலையில் இரக்கத்திற்காகக் கெஞ்சி மன்றாடுகிறார்கள்… Mar 553.2

மேகங்களின் நடுவிலே உண்டான ஒரு பிளவின் வழியாக, சூழ்ந்திருக்கிற இருளுக்கு நான்கு பங்கு எதிரிடையான வெளிச் சத்தோடு ஒரு நட்சத்திரம் பிரகாசிக்கிறது. விசுவாசிகளுக்கு நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் அது தந்தது; ஆனால், தேவனின் கற்பனைகளை மீறினவர்களுக்கோ அது உக்கிர கோபத்தையும் கொடுமையையும் காட்டியது. கிறிஸ்துவிற்காக எல்லாவற்றையும் தியாகஞ்செய்தவர்கள், ஆண்டவருடைய கூடாரத்தின் மறைவிலே மறைக்கப்பட்டவர்கள்போன்று இப்பொழுது பத்திரமாக இருக்கிறார்கள்; அவர்கள் சோதிக்கப்பட்டாயிற்று. உலகத்தாருக்கு முன்பாகவும், சத்தியத்தை அவமதித்தவர்களுக்கு முன்பாகவும், தங்களுக்காக மரித்தவருக்கு, தங்களது உத்தமத்தை நிரூபித்துக் காண்பித்தார்கள். மரண ஆபத்தின் நேரத்திலும் தங்களது நேர்மையை உறுதியாய்க் காத்துக்கொண்ட அனைவர்மீதும் ஒரு அற்புதமான மாறுதல் ஏற்பட்டது. காரிருளிலிருந்தும், பிசாசுகளைப்போல மாறிய மனிதர்களின் கொடூரச் செயல்களிலிருந்தும், திடீரென விடுதலையாக்கப்பட்டார்கள். இதுவரை வெளுத்துப்போய், வேதனையடைந்து, சோர்வடைந்திருந்த முகங்கள் ஆச்சரியத்தினாலும், விசுவாசத்தினாலும், அன்பினாலும் நிறைந்து காணப்பட்டன. “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும் மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்” (சங்கீதம் 46:1 -3) என்று அவர்கள் வெற்றி முழக்கமிட்டனர்.⋆ Mar 553.3

வாக்குத்தத்த வசனம்: Mar 554.1

“இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.” - சங்கீதம் 91:5.6. Mar 554.2