Go to full page →

அந்த பொன்னான காலைப் பொழுதில் பளிச்சிடும் ஒளிக்கதிர்கள்!, அக்டோபர் 7 Mar 559

“மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.” - மத்தேயு 24:27. Mar 559.1

உலகம் முழுவதும் இருளில் மூழ்கியிருக்கும்போது, பரிசுத்தவான்களுடைய கூடாரங்களில் வெளிச்சம் இருந்தது. இரண்டாம் வருகையின் முதல் ஒளிக்கதிரை அவர்கள் பார்ப்பார்கள். Mar 559.2

விரைவில் மனிதனின் கையளவில் பாதியளவான ஒரு சிறிய கருத்த மேகம் கிழக்கிலே தோன்றுகிறது. அந்த மேகந்தான் நம் இரட்சகரைச் சூழ்ந்திருக்கிற மேகம். வெகுதூரத்திலிருந்து பார்க்கும்போது, அந்த மேகமானது இருளினால் மூடப்பட்டதுபோலத் தெரிகிறது. இதுதான் மனுஷகுமாரனுடைய அடையாளம் என்று தேவனுடைய மக்கள் அறிவார்கள். பூமியைநோக்கி நெருங்கி வரும்போது, மாபெரும் வெண்மேகமாக மாறும்வரைக்கும், அந்த கருத்த-சிறிய மேகமானது ஒளியினால் நிறைந்தது, மிகவும் மகிமைவாய்ந்ததாகக் காணப்பட்டது. பக்திவிநயமான அமைதியோடு அவர்கள் அதை உற்றுநோக்கிக்கொண்டிருந்தார்கள். அதின் அடிப்பாகமானது பட்சிக்கிற அக்கினியைப்போன்ற ஒரு மகிமையோடு காணப்பட்டது. வெண்மேகத்திற்கும் மேலாக, உடன்படிக்கையின் வானவில் காணப்பட்டது; வல்லமையுள்ள வெற்றி வேந்தனாக இயேசு அதின்மேல் ஏறிவருகிறார். அவமானம், ஆபத்து ஆகிய கசப்பான பாத்திரத்தில் குடிக்கவேண்டிய நிலையில் “துக்கம் நிறைந்தவராக” இப்பொழுது அவர் இருக்கவில்லை. வானத்திலும் பூமியிலும் வெற்றிகொண்டவராக-உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தோரையும் நியாயந்தீர்க் கிறவராக வருவார். “உண்மையும் சத்தியமுமுள்ளவர்,” “நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணு கிறார்.” “அவரோடுகூட பரலோகத்திலுள்ள சேனைகளும் (வெளி. 19:11, 14) வரும்.” பரலோகப் பாடல்களைப் பாடியவாறு, எண்ணக்கூடாத திரள்கூட்டமான பரிசுத்த தூதர்களும் அவரோடுகூட வருவார்கள். ஆயிரம் பதினாயிரமான பிரகாசமான தூதர்களால் ஆகாயம் நிறைந்தது. அந்தக் காட்சியை எந்த மனிதனாலும் விவரிக்க முடியாது; அதின் சிறப்பை எந்த மனிதனாலும் புரிந்துகொள்ள முடியாது; “அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது. அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது” — ஆபகூக் 3:3,4. அந்த ஜீவனுள்ள மேகம் இன்னும் அருகே வரவர, ஜீவாதிபதியை எல்லாக் கண்களும் காண்கின்றன. அவருடைய பரிசுத்த சிரசின் அழகை குறைக்கத்தக்கதாக இப்பொழுது அங்கு முள்முடியில்லை; மாறாக, மகிமையான ஒரு இராஜமுடி அவர் தலையின்மேல் இருக்கிறது. நடுப்பகல் சூரியனின் ஜொலிக்கும் பிரகாசத்தைவிட, அவரது முகம் பிரகாசமாக்க் காணப்பட்டது. “இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்தரத்தின்மேலும் அவருடைய தொடையின் மேலும் எழுதப்பட்டிருந்தது” —வெளிப்படுத்தல் 19:16. Mar 559.3

தலைகளை மேலே உயர்த்தி, நீதியின் சூரியனுடைய ஒளிக் கதிர்கள் தங்கள்மேல் பிரகாசிக்க, இரட்சிப்பு சமீபித்ததென்ற ஆனந்தத்தில், உயிரோடிருந்த பரிசுத்தவான்கள்: “இதோ, இவரே நம்முடைய தேவன்.. இவருக்காகக் காத்திருந்தோம், இவரே நம்மை இரட்சிப்பார்” என்கிற முழக்கத்தோடு மணவாளனை சந்திக்கப் புறப்பட்டுச்சென்றனர் (ஏசாயா 25:9).⋆ Mar 560.1

வாக்குத்தத்த வசனம்: Mar 560.2

“ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால், அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.” - யோவான் 12:26. Mar 560.3