Go to full page →

இறுது யுத்தத்தின் தன்மை!, அக்டோபர் 16 Mar 577

“கர்த்தர் தம்முடைய ஆயுதசாலையை திறந்து, தம்முடைய சினத்தின் அஸ்திராயுதங்களை எடுத்துக்கொண்டு வந்தார்...” - எரேமியா 50:25. Mar 577.1

தேவன் தமது சுயசித்தத்தின்படியே தமது சத்துருக்களின் வல்லமையை முறியடிக்க இயற்க்கையின் சக்த்திகளுக்கு கட்டளை இடுவார். “அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே, அவர் சொற்ப்படி செய்யும் பெருங்காற்றே” என்று சங்கீதக்காரன் அதைக்குறித்துக் கூறுகிறார் (சங்கீதம் 148:8). அவருடைய நோக்கத்தை நிறைவேற்றக்கூடாதபடிக்கு இஸ்ரவேலருக்கு எதிரிகளாயிருந்த அஞ்ஞானிகளான எமோரியரை வானத்திலிருந்து கல்மழையை அனுப்பிச் சிதறடித்ததுபோல, தேவன் தலையிடுவார். “கர்த்தர் தம்முடைய ஆயுதசாலையைத் திறந்து, தம்முடைய சினத்தின் அஸ்திராயுதங்களை எடுத்துக்கொண்டு” (எரேமியா 50:25) வருவார். உலக வரலாற்றின் கடைசி காட்சிகளிலே நடைபெறப்போகும் ஒரு மாபெரும் யுத்தத்தைப்பற்றி நமக்கு கூறப்பட்டிருக்கிறது. “உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல்மழையிருக்கிற பண்டசாலைகளைப் பார்த்தாயோ? ஆபத்து வருங்காலத்திலும், கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்திவைத்திருக்கிறேன்” - யோபு 38:22,23. Mar 577.2

சம்பவிக்கப்போகின்ற அழிவைக்குறித்து வெளிப்படுத்தின விசேஷகன் பின்வருமாறு வர்ணிக்கிறார்: “பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து: ஆயிற்று என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறந்தது”; “தாலந்து நிறையான பெரிய கல் மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது” - வெளிப்படுத்தல் 16:17,21. Mar 577.3

இந்த பூமியின் வரலாற்றின் கடைசிக் காட்ச்சிகளில் யுத்தங்கள் குமுறி வெடிப்பதைக் காணலாம். Mar 577.4

ஒரு பெரிய யுத்தஞ்செய்யாமல் தீமையின் வல்லமையாளர்கள் தங்கள் போராட்டங்களை கைவிடமாட்டார்கள்; ஆனால், அர்மெகதோன் யுத்தத்திலே சர்வவல்லவர் செயல்படுத்தவேண்டிய ஒரு பங்கு உண்டு. Mar 577.5

ஆண்டவருடைய சேனையின் அதிபதி, பரலோக தூதர் சேனையின் தலைவராயிருந்து யுத்தத்தை தலைமையேற்று நடத்துவார். Mar 578.1

தமது வஸ்த்திரத்தின்மேல், “இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தா” என்னும் நாமம் பொறிக்கப்பட்ட அவர், வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்த்திரம் உடுத்தியவராக, வெள்ளைக் குதிரையின்மேல் ஏறிவருகிறவராக, பரலோக சேனைகளைத் தலைமையேற்று நடத்துவார். Mar 578.2

அவர் மீண்டும் பூமிக்கு வரும்போது, “பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசைப்பார்.” “வெறித்தவனைப்போல் தேசம் தள்ளாடி, ஒரு குடிலைப்போலப் பெயர்த்துப்போடப்படும். வானங்கள் புத்தகச் சுருளைப்போல் சுருட்டப்படும். பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம். கர்த்தர் தமது ஜனத்திற்க்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார்” - எபி. 12:26; ஏசாயா 24:20; 34:4; 2 பேதுரு 3:10; யோவேல் 3:16.⋆ Mar 578.3

வாக்குத்தத்த வசனம்: Mar 578.4

“கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்ச்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.” - ஏசாயா 58:11. Mar 578.5