Go to full page →

ஆத்துமாக்களுக்காக பரிந்து மன்றாடும் ஜெபங்கள்!, ஜனவரி 30 Mar 59

“...உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப் போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப் பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும்” என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். - மத்தேயு 18:19. Mar 59.1

வெளிச்சத்தைக் காணாமல் இருளில் இருப்பவர்களுக்காகவும், மனந்திரும்பாதவர்களுக்காகவும், பேட்டில்கிரீக் என்னுமிடத்தில் மனப்பாரத்தோடிருந்த மக்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். தேவனுடைய வல்லமையை தங்களுடைய வல்லமையாகப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, ஜெபக்கூட்டங்கள் ஏற்படுத்தப் பட்டன. ஒவ்வொரு காரியத்திலும் இந்த முயற்சிகளிலே பரலோகத்தின் தூதர்கள் இணைந்து உழைத்தார்கள்; ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டன. Mar 59.2

சபையிலே ஒரு பெருங்கூட்டமான மக்கள் இருப்பார்களானால் அந்த அங்கத்தினர்களை சிறுசிறு குழுக்களாக அமைக்கவேண்டும். அந்தக் குழுக்கள் சபைக்காக மாத்திரம் அல்ல; அவிசுவாசிகளுக்காகவும் உழைக்க வேண்டும். ஒரு இடத்திலே சத்தியத்தை அறிந்த இரண்டு அல்லது மூன்றுபேர் இருப்பார்களானால், அவர்கள் தங்களை ஒரு ஊழியக் குழுவாக அமைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் தங்களது ஐக்கிய உறவை உடைந்துபோகாமல் காத்துக் கொள்ளட்டும். அன்பிலும் ஐக்கியத்திலும் நெருக்கமாக இணைந்து ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு, தைரியமூட்டி, மற்றவர்களின் உதவியினால் பலத்தையும் தைரியத்தையும் பெற்றுக்கொள்ளட்டும். கிறிஸ்துவைப்போன்று அருளும், இரக்கமும், பொறுமையும் உடையவர்களாக இருக்கட்டும். அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடாமல், மிக உன்னதமான பரிசுத்த விசுவாசத்திலே ஒருவரையொருவர் கட்டத்தக்கதாக, பேச்சுத் திறமையை பயன்படுத்தட்டும். திருச்சபைக்கு வெளியே இருக்கும் மக்களுக்காக கிறிஸ்து காட்டும் அன்பைப்போல, அன்புகாட்டி உழைக்கட்டும்... இவ்வாறு கிறிஸ்துவின் நாமத்திலே ஜெபித்து உழைக்கும்போது, சபையின் எண்ணிக்கை உயரும். Mar 59.3

உள்நாட்டிலியே செய்யப்பட வேண்டிய வேலையைக் குறித்த முறையீட்டை நாம் கேட்கிறோம். ஏராளமான பாவமும், உழைப்பிற்கான தேவையும் நமது சொந்த நாட்டிலேயே இவ்வளவு அவசியமாக இருக்கும்போது, ஏன் வெளிநாட்டு வேலைபற்றிய விஷயத்தில் இவ்வளவு ஆர்வம் காட்டப்பட வேண்டும். இந்த உலகமே நமது பணித்தளம் என்று நான் இதற்கு விடைகூறுகிறேன்.. நமது மீட்பர் தம்முடைய சீடர்களை தங்களது வேலையை எருசலேமில் துவங்கவேண்டுமென்றும், பின்னர் யூதேயாவிற்கும், சமாரியாவிற்கும் பூமியின் கடையாந்தரங்கள் மட்டும் செல்லவேண்டும் என்றும் வழிநடத்தினார். ஒரு சிறு கூட்டத்தார் மாத்திரமே வேதாகமக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டார்கள்; எனினும், தூதுவர்கள் துரிதமாக இடம்விட்டு இடம்சென்று, நாடுவிட்டு நாடுசென்று, அருகிலுள்ள - தூரத்திலுள்ள உலகின் அனைத்து இடங்களிலும் சுவிசேஷ கோடியை உயர்த்திப் பிடித்தார்கள்; ஆனால், இதற்காக முன்னதாக பயிற்சி அளித்து, ஆயத்தமாக்குகின்ற ஓர் வேலை உண்டு, “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது, நீங்கள் பெலனடைந்து நீங்கள் எனக்கு சாட்சிகளாக இருப்பீர்கள்” என்பது மீட்பரின் வாக்குத்தத்தமாகும். யாரெல்லாம் தங்களது சொந்த சித்தத்தையும் விருப்பங்களையும் பின்பற்றாமல், ஆண்டவருடைய ஆலோசனையை நாடுகிறார்களோ, அவர்கள் ஊக்கமற்றமாணாக்கர்களாக இருக்கமாட்டார்கள்; ஏனெனில் ஆண்டவர் தாமே அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பார்.⋆ Mar 60.1

வாக்குத்தத்த வசனம்: Mar 60.2

“உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.” - எசேக்கியேல் 36:26. Mar 60.3