Go to full page →

வானவில் வளையமிட்ட சிங்காசனம்!, நவம்பர் 14 Mar 635

“...இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது; அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார். வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில் இருந்தது; அது பார்வைக்கு மரகதம்போல் தோன்றிற்று.” - வெளிப்படுத்தல் 4:2,3. Mar 635.1

சிங்காசனத்தைச் சுற்றிலுமிருந்த வானவில், “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” என்கிற ஒரு நித்தியமான சாட்சியாக இருக்கிறது. Mar 635.2

மேகத்திலே காணப்படுகிற வானவில் சூரிய ஒளி, தண்ணீர் இவைகளின் கூட்டாக எப்படி அமைக்கப்படுகிறதோ, அப்படியே சிங்காசனத்தைச் சுற்றியிருக்கிற வானவில் இரக்கம், நீதி ஆகியவைகளின் இணைந்த ஒரு வல்லமையைச் சுட்டிக்காட்டுகிறது. ஆண்டவருடைய இராஜ்யத்தில், எப்பொழுதும் நீதிமாத்திரமே தொடர்ந்து செயல்படுத்தப்பட்டால் போதாது; ஏனென்றால், சிங்காசனத்தைச் சுற்றிலுமிருக்கிற வாக்குத்தத்தமான வானவில்லின் மகிமையை அது மறைத்துவிடும். பிரமாணத்தின் தண்டனைகளை மட்டுமே மனிதர்கள் பார்ப்பார்கள். நீதியில்லாமலும் தண்டனையில்லாமலும் தேவனுடைய அரசாங்கம் இருக்குமானால், அது நிலைத்து நிற்கமுடியாது; எனவே நீதியும் இரக்கமும் ஒன்று சேர்ந்து இரட்சிப்பைப் பூரணமாக்குகிறது... Mar 635.3

தேவனுடைய நகரத்திற்குள் வாசல்கள் வழியாகப் பிரவேசிக்கும்படி இரக்கம் நம்மை அழைக்கின்றது. கீழ்ப்படிகிற ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் இராஜரீகக் குடும்பத்திற்குள் பிரவேசிக்கிற பரலோக இராஜாவினுடைய பில்லையாகக்கூடிய-- சிறப்புரிமைகளை முழுமையாகக் கொடுப்பதின்மூலம்--நீதி திருப்தியடைகிறது. நாம் குணங்களில் குறைவுள்ளவர்களாயிருந்தால், கீழ்ப்படிந்தவர்கள் பிரவேசிக்கும்படியாக இரக்கம் திறந்திருக்கிற வாசலில் நாம் பிரவேசிக்க முடியாது; ஏனெனில், நீதியானது வாசலண்டை நின்று, தேவனைப் பார்க்கிற ஒவ்வொருவரும் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கும். Mar 635.4

ஒருவேளை நியாயம் அகன்றுபோய், எந்த ஒரு நிபந்தனையும் இன்றி, பிரவேசிக்கலாம் என்கிற உரிமையை தெய்வீக இரக்கம் கொடுக்குமானால், சாத்தான் பரலோகத்திலிருந்து வெளியேறுமுன் அங்கு நிலவிய, வெறுப்பும் கலகமுமே பரலோகத்தை மேலும் ஒரு மோசமான நிலையில் வைத்துவிடும். பரலோக சமாதானம், சந்தோஷம், இணக்கம் எல்லாம் சிதைந்துபோகும். பூமியிலிருந்து பரலோகிற்குச் சென்றதினால், மனுஷனுடைய குணம் மாறிவிடுமா என்றால் அதுவும் மாறாது. மீட்கப்பட்டவர்கள் பரலோகில் சந்தோஷமாயிருப்பத்தின் காரணமே, இந்த உலகில் அவர்கள் கிறிஸ்துவுடைய சாயலின்படி தங்கள் குணங்களை மாற்றிக் கொண்டதினால்தான்; எனவே, பரலோகத்திலுள்ள பரிசுத்தவான்கள் முதலாவது பூமியிலே பரிசுத்தவான்களாக இருந்திருக்க வேண்டும். Mar 636.1

மனிதனுக்காக மீட்பைப் பற்றுக்கொள்ள,கிறிஸ்து செய்த தியாகம் மாத்திரமே இப்படிப்பட்ட மதிப்பு வாய்ந்தது. ஏனெனில், அதுதான் மனிதனைப் பாவத்திலிருந்து காக்கிறது...இவ்வாறு தேவனுடைய பிரமாணமானது, சுவிசேஷத்தினாலே அவமாக்கப்பட்டவில்லை; மாறாக, பாவத்தின் வல்லமை முறியடிக்கப்படுகிறது. மனந்திரும்புகிற பாவிக்கும் இரக்கத்தின் செங்கோல் நீட்டப்படுகிறது...தீமைக்கெதிராக தமது மக்கள் போராடிக்கொண்டிருக்கிறதை ஆண்டவர் ஒருபோதும் மறக்கமாட்டார். இயேசு மாத்திரமே நம்முடைய ஆய்விற்கான நபராக இருக்க வேண்டும்.⋆ Mar 636.2

வாக்குத்தத்த வசனம்: Mar 636.3

“சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்திய ஜீவன் அளிப்பார்.” - ரோமர் 2:7. Mar 636.4