Go to full page →

நமது மீட்ப்பருக்கான மிகவும் உயர்ந்த மேன்மை!, டிசம்பர் 20 Mar 707

அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: “உன் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று கேட்டால், என் சினேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள்” என்பான். - சகரியா 13:6. Mar 707.1

“நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்து போயின” - வெளிப்படுத்தல் 21:1. துன்மார்க்கரைப்பட்சித்துப்போடும் அக்கினியே, பூமியையும் சுத்திகரிக்கும்; பாவத்தின் ஒவ்வொரு சுவடும் துடைக்கப்பட்டுபோகும்... Mar 707.2

ஒன்றே ஒன்றுமட்டுமே பாவத்தின் நினைவுச்சின்னமாக நிலைத்து நிற்கும்; அது, நம் மீட்பர் சிலுவையில் தொங்கிய காயங்களின் தழும்புகளே! அவரது காயப்பட்ட தலையிலும், விலாவிலும், கரங்களிலும், பாதங்களிலும், பாவத்தின் கோர விளைவுகளின் தழும்புகள் காணப்படும். “அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது” (ஆபகூக் 3:4) என்று கிறிஸ்துவை அவரது மகிமையில் தரிசித்த தீர்க்கதரிசி கூறுகிறார். அந்த குத்தப்பட்ட அவரது விலாவிலிருந்து புறப்பட்ட செந்நீர் நம்மை தேவனோடு ஒப்புரவாக்கியது; அந்தக் குருதியில் தான் இரட்சகரின் மகிமை இருக்கிறது. “அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருக்கும்! அவரைச் சிறுமைப்படுத்திய அடையாளங்கள் ஒவ்வொன்றும் அவருடைய ஒப்பற்ற மகத்துவங்களைக் காட்டுகிறது. யுகங்கள் நெடுகிலும் கல்வாரியின் காயங்கள், அவரது துதியையும் அவரது பராக்கிரமத்தையும் உறுதிபட எடுத்துக்கூறும்.” Mar 707.3

கிறிஸ்துவின் சிலுவையே மீட்கப்பட்டவர்கள் நித்திய காலமும் பாடும் பாட்டும், படிக்கும் அறிவியல் பாடங்களுமாகும். மகிமையடைந்த கிறிஸ்துவில், சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைக் காண்பார்கள். தனது சக்தியால் எண்ணிமுடியாத உலகங்களை, அகன்று பரந்த மாபெரும் வெளியில் சிருஷ்டித்து தாங்கியவர், தேவனின் ஒரேபேறான நேசகுமாரன், பரலோகத்தின் மகத்துவமானவர், கேரூபீங்களும், சேராபீங்களும் போற்றி வணங்கும் பெருமைக்குரிய உன்னதமானவர், தன்னைத் தாழ்த்தி, விழுந்துபோன மனுகுலத்தை மீட்க, பாவத்தின் சாபத்தையும், அவமானத்தையும் சுமந்ததோடல்லாமல், பிதா தமது முகத்தை மறைத்துக் கொண்டதையும் சகித்து, கல்வாரி சிலுவையில், பாவத்தில் மூழ்கிப்போன உலகத்தின் சாபங்கள் அனைத்தும் அவரை நொறுக்கிப்பிழிய, உயிர்நீத்ததை ஒருபோதும் ஒருவரும் மறக்க இயலாது. அனைத்து உலகங்களையும் உண்டாக்கியவர், அனைவருடைய முடிவுக்கும் மத்தியஸ்தராயிருந்தவர், தன் மகிமையைக் களைந்துவிட்டு, மனிதன்மேலுள்ள அன்பினால், தன்னைத் தாழ்த்தியதை, அண்டசராசரங்களின் சிருஷ்டிகளும் ஆச்சரியத்தோடு வியந்து வியந்து போற்றுவார்கள். இரட்சிக்கப்பட்டவர்கள், தங்களின் மீட்ப்பரின் முகத்தில் பிதாவின் நித்திய மகிமை பிரகாசிப்பதையும், அவரது நித்தியமான சிங்காசனத்தையும் கண்டு, அவரது இராஜ்யத்திற்க்கு முடிவில்லை என்பதையும் உணர்ந்து, மகிழ்ந்து களிகூர்ந்து: “அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் பாத்திரராயிருக்கிறார்... எங்களை தேவனுக்கென்று தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தினாலே மீட்டுக்கொண்டாரே” என்று பாடினார்கள்.⋆ Mar 707.4

வாக்குத்தத்த வசனம்: Mar 708.1

“என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்” - யோவான் 14:21. Mar 708.2