Go to full page →

பரலோகத்தின் பழுதற்ற முத்து!, மார்ச் 5 Mar 127

“மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் விளையுயர்ந்த ஒரு முத்தைக்கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.” - மத்தேயு 13:45,46. Mar 127.1

கிறிஸ்து தாமே மாபெரும் விலைமதிப்புள்ள ஒரு முத்து ஆவார்... ஒரு தூய்மையான-வெண்மையான -முத்தைப்போன்ற கிறிஸ்துவின் நீதியிலே ஒரு பழுதும் இல்லை, கறையும் இல்லை. மாபெரும் விலையேறப்பெற்ற தேவனுடைய ஈவை மனிதனின் ஏந்தப் பணியும் மேம்பாடு அடையச்செய்யமுடியாது. அது பழுதற்ற ஒன்றாகும். கிறிஸ்துவிலே, “ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது”-கொலோசெயர் 2:3, அவர்: “நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்”-1 கொரிந்தியர் 1:31. இந்த உலகதிற்காகவும், வரப்போகும் உலகத்திற்காகவும், மனித ஆத்துமாவின் ஏக்கங்களையும் தேவைகளையும் திருப்திசெய்யக்கூடிய அனைத்தும் கிறிஸ்துவில் காணப்படுகிறது. நமது மீட்பரே அத்தகைய விலையேறப்பெற்ற முத்து ஆவார். அவருடன் ஒப்பிடும்போது அனைத்துக் காரியங்களும் நட்டமென்று கணக்கிடப்படும்... Mar 127.2

உவமையிலே, முத்தானது ஒரு ஈவாக சுட்டிக்காட்டப்படவில்லை. தனக்குண்டான எல்லாவற்றையும் கொடுத்து, அந்த வியாபாரி அந்த முத்தை விலைக்கு வாங்கினான். வேதவாக்கியங்களிலே கிறிஸ்து ஒரு ஈவாக சுட்டிக்காட்டப்பட்டிருப்பதால், அநேகர் இதன் பொருளைக்குறித்து கேள்விகேட்கின்றனர். எதையும் ஒதுக்கிவைகாதப்படித் தங்களது ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதையும் தத்தஞ்செய்பவர்களுக்கு மாத்திரமே, அவர் ஒரு ஈவாக விளங்குகிறார். அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் அனைத்திற்கும் விருப்பமுடன் கீழ்படிந்து வாழத்தக்கதாக, நாம் நம்மை அவருக்கு ஒப்படைக்கவேண்டும். நாம் இருக்கிறபடியே முழுவதுமாகவும், நமக்கே உரிமையான தாலந்துகள், செயல் திறமைகள் அனைத்தும் ஆண்டவருக்கு உரியவைகளே. அவருடைய ஊழியத்திற்காக அவைகள் அனைத்தும் அர்ப்பணிக்கப்பட வேண்டும். இவ்வாறு நாம் நம்மை முற்றிலுமாக அவருக்கு அர்ப்பணஞ்செய்யும்பொழுது, கிறிஸ்து நமது பரலோகப் பொக்கிஷங்கள் அனைத்தோடும், தம்மைத்தாமே நமக்கு அளிக்கிறார். மாபெரும் விலையேறப்பெற்ற முத்தைப் பெற்று கொள்கிறோம்... Mar 127.3

தெய்வீக இறக்கமானது மேலாண்மைசெலுத்தி, நடத்துகின்ற அந்த வாணிகக் களத்திலே, அந்த அருமையான முத்தானது பணமுமின்றி, விலையுமின்றி வாங்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வாணிகக் களத்திலே, அனைவரும் பரலோகப் பொக்கிஷங்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்ளலாம். சத்தியம் எனப்படும் மாணிக்கக் கற்கள் இருக்கும் பொக்கிஷசாலை அனைவருக்கும் திறக்கப்பட்டுள்ளது... மீட்பரின் குரல் ஆர்வத்தோடும் அன்போடும் பின்வருமாறு நம்மை அழைக்கிறது: “நீ ஐசுவரியவானாகும் படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னை வாங்கிக் கொள்ளும்படி உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்”... -வெளி. 3:18. ஐசுவரியவாஙன்களைப்போலவே, அதற்க்குச் சமமாக தரித்திரரும் மீட்பை விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்; ஏனெனில், எவ்வளவு உலக ஐசுவரியத்தைக்கொண்டும், அதைப் பெற்றுக் கொள்ளமுடியாது. கிறிஸ்துவால் விலைக்கு வாங்கப்பட்ட சொந்த உடமையைபோன்று, நாம் நம்மை முற்றிலுமாக அர்ப்பணித்து, விருப்பமுள்ள கீழ்படிதலினால் பெற்றுக்கொள்ளலாம். Mar 128.1

நாம் மீட்பைச் சம்பாதிக்கமுடியாது. அதற்காக, இந்த உலகத்திலுள்ள அனைத்தையும் உதறித் தள்ளிவிடுவதுபோன்று, அதிக ஆர்வத்தோடும், விடாமுயற்சியோடும் நாடித்தேட வேண்டும்.⋆ Mar 128.2

வாக்குத்தத்த வசனம்: Mar 128.3

“அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை கர்தர் தமது கையினால் அவனைத் தாங்குவார்” - சங்கீதம் 37:24. Mar 128.4