Go to full page →

மிகவும் உயர்ந்த வகையான தியானம்! , மார்ச் 10 Mar 137

“நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்:...” — யோவான் 3:1. Mar 137.1

என்ன அன்பு! பாவிகளும், அந்நியருமாயிருக்கிற நாம் தேவனிடத்தில் மிண்டும் கொண்டுவரப்பட்டு, அவருடைய குடும்பத்தின் பிள்ளையாக சுவீகாரஞ்செய்யப்படத்தக்கத்தான அவரது அன்பு எத்தகைய ஈடு இணையற்ற அன்பு! “எங்கள் பிதாவே” என்று மிகவும் விருப்பமான நாமத்தினாலே நாம் அவரைக் கூப்பிடலாம். Mar 137.2

மானிட இதயங்கள் என்னும் வாய்க்கால்கள்மூலமாக தலைமுறை, தலைமுறையாகத் தொடர்ந்துவருகின்ற தகப்பனின் அனைத்து அன்பும்,மானிட ஆத்துமாக்களில் திறக்கின்ற மென்மையான ஊற்றுகள் அனைத்தும், வற்றாத-எல்லையற்ற-பரந்து விரிந்து கிடக்கும் சமுத்திரம்போன்ற-தேவனின் அன்போடு ஒப்பிடும் பொழுது, வெறும் சிற்றோடைகளே. அந்த அன்பைக்குறித்து நாவினால் விவரிக்கமுடியாது; பேனாவினால் விவரமாக விளக்கிக்காட்ட இயலாது; உங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் அந்த அன்பைக்குறித்து தியானிக்கலாம். அந்த அன்பை விளங்கிக் கொள்ளத்தக்கதாக தீவிர முயற்சிசெய்து, வேத வாக்கியங்களை ஆராய்ந்துபார்க்கலாம். பரலோகப் பிதாவின் பரிவையும் அன்பையும் புரிந்துகொள்ளத்தக்கதான முயற்சியிலே, நீங்கள் தேவன் கொடுத்த ஒவ்வொரு வல்லமையையும் ஆற்றலையும் வரவழைத்துக் கொள்ளலாம்; எனினும், எல்லையற்ற நித்தியம், அதற்கும் அப்பால் இருக்கிறது. யுகம் யுகமாக நீங்கள் அந்த அன்பைக்குறித்துப் படிக்கலாம்; எனினும் இந்த உலகத்திற்காக மரிப்பதற்கென்று தமது ஒரே குமாரனை தத்தஞ்செய்த, தேவனுடைய அன்பின் நீளத்தையும் அகலத்தையும் ஆழத்தையும் உயரத்தையும் ஒருபோதும் நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. நித்தியத்தாலுங்கூட ஒருபோதும் முழுமையாக வெளிப்படுத்திக் காட்டமுடியாது; எனினும்; நாம் வேதாகமத்தை வாசித்து, கிறிஸ்துவின் வாழ்க்கையைக்குறித்தும், அவரது மீட்பின் திட்டத்தைக்குறித்து தியானஞ்செய்யும்பொழுது, ஆய்விற்கான இந்தப் பொருளானது, அதிகம் அதிகமாக நாம் புரிந்துகொள்ளத்தக்கதாக தெளிவடையும். Mar 137.3

அன்பான-முழுவதும் இரக்கமே உருவான-கனியுள்ள-பரியுள்ள ஒரு தேவனை இவ்வுலகத்திற்க்குக்காட்டவே, கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். Mar 138.1

மாட்டுத்தொழுவத்தில் பிறந்ததிலிருந்து கல்வாரிச்சிலுவையில் அடிக்கப்பட்டதுவரையிலுள்ள, கிறிஸ்துவானவரின் வாழ்க்கையைப்பற்றி தினமும் ஒரு மணிநேரம் சிந்தனைசெய்வது நல்லது; ஒவ்வொரு பகுதியாக, மிகத் தெளிவானவிதத்தில் கற்பனைசெய்து, ஒவ்வொரு காட்சியையும், குறிப்பாக பூமியில் அவர் நடத்திய வாழ்கையின் கடைசிக் காட்சிகளை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவரது போதனைகளையும் அவர் பட்டபாடுகளையும் மானிட இனத்தின் மீட்பிற்காக அவர் செய்த எல்லையற்ற தியாகத்தையும், இவ்வாறு தியானஞ்செய்வதின்மூலம் நமது விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ளலாம்; நமது அன்பை உயிர்ப்பித்துக் கொள்ளலாம்.நமது மீட்பரைத் தாங்கி ஊக்கமளித்த அந்த ஆவியானவரால்,இன்னும் ஆழமாக —உள்ளார்ந்து இயக்குவிக்கப்படலாம். இறுதியிலே இரட்சிப்பை அடையவேண்டுமானால், சிலுவையின் பாதத்தருகே பாவத்திற்ககாக மனம்வருந்துதல் மற்றும் விசுவாசம் ஆகிய பாடங்களை நாம் அனைவரும் கற்றுக் கொள்ளலாம்... சிலுவையின்மீது தொங்கிய கிறிஸ்துவை தியானிப் பதின்மமூலமாக, மனிதனிலுள்ள மேன்மையான, பெருந்தன்மையுள்ள ஒவ்வொரு குணமும் செயலூக்கமடையும்.⋆ Mar 138.2

வாக்குத்தத்த வசனம்: Mar 138.3

“கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்: நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” - சங்கிதம் 55:22. Mar 138.4