Go to full page →

ஆத்துமாவின் உயர்முச்சு! , மார்ச் 18 Mar 153

“இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.” - 1 தெசலோனிகேயர் 5:17 Mar 153.1

ஜெபம் ஆன்மாவின் மூச்சாக, எல்லா ஆசிர்வாதங்களுக்கும் வாய்க்காலாக விளங்குகிறது. மனந்திரும்பிய ஆன்மா அதின் ஜெபத்தை ஏறெடுக்கும்பொழுது, தேவன் அதின் மனப்போராட்டங்களையும், அயராத அரும்பாடுகளையும், அதின் உத்தமமான நிலையையும் கூர்ந்து கவனிக்கிறார். அந்த ஆன்மாவின் நதியில் விரலைவைத்து, அதின் துடிப்பு ஒவ்வொன்றையும் கவனித்து, குறித்துக்கொள்கிறார். அவருக்குத்தெரியாமல் அந்த ஆன்மாவை எந்த எண்ணமும் எழுச்சியடையச்செய்யவோ, எந்த உணர்வும் அதின் அமைதியைக் குலைக்கவோ, எந்தத் துக்கமும் அதை நிழலிடவோ, எந்தப் பாவமும் கறைப்படுத்தவோ, எந்த சிந்தனையோ அல்லது நோக்கமோ அசைக்கவோ முடியாது. அந்த ஆன்மாவானது எல்லையற்ற ஒரு கிரயத்தால் வாங்கப்பட்டது; மேலும், மாற்றமுடியாத ஒரு அழ்ந்த ஈடுபாட்டுடன் நேசிக்கப் பட்டதாகும். Mar 153.2

ஆன்மா குணமாகுதலைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, மாபெரும் சிறந்த வைத்தியராகிய, அவரிடம் ஏறேடுக்கப்படும் ஜெபமானது, தேவனுடைய ஆசிர்வாதத்தைக் கொண்டுவருகிறது. ஜெபம் நம்மை ஒருவரோடொருவர் இணைத்து, பின்னர் தேவனோடும் இணைக்கிறது.. ஜெபம் இயேசுவை நம் பக்கத்திற்குக் கொண்டு வருகிறது, சோர்ந்து திகைத்திருக்கும் ஆன்மாவிற்கு புதிய பலத்தையும் கிருபையையும் வழங்குகிறது.. Mar 153.3

நம்மைப்போல கிறிஸ்து எல்லா வகைகளிலும் சோதிக்கப்பட்டார்; எனினும், பாவமற்றவராக இருந்தார். அவர் மானிடத் தன்மையை எடுத்துக்கொண்டார். மானிட மரபுவழித் தன்மைக்கு இசைவாக உருவாக்கப்பட்டார். அவரது தேவைகள் எல்லாம் ஒரு மனிதனுக்கான தேவைகளாக இருந்தன. உடல் சம்பந்தமான தேவைகள் அவருக்கு அளிக்கப்படவேண்டியதிருந்தன. உடலின் களைப்பினின்று விடுபடவேண்டியதிருந்தது. அவர் தமது பிதாவினிடத்திற்கு ஜெபத்தை ஏறெடுத்தே கடமைகளைச் செய்வ தற்கும் சோதனைகளைச் சந்திப்பதற்கும் ஏற்ற மனஉரம் பெற்றவரானார். ஒவ்வொரு நாளும் தமது பணிமுறை வழக்கத்தின்படி ஆத்தும இரட்சிப்பின் வேலையைத் தொடர்ந்தார்…சோதனையில் அகப்படும் மக்களுக்காக, இரவுகள் அனைத்தையும் ஜெபத்திலே செலவிட்டார். Mar 153.4

பின்வரும் நாட்களிலே அவர் சந்திக்கவேண்டிய சோதனைகளுக்கு தாம் ஆயத்தமாகத்தக்கதாக, மலையில் அல்லது வனாந்தரத்தில் ஜெபத்திலே தரித்திருக்கவேண்டியது அவசியமாயிற்று. சாத்தானின் சோதனைகளைச் சந்திக்கத்தக்கதாக உடலிலும் ஆன்மாவிலும் எழுச்சியையும் புத்துணர்ச்சியையும் பெறவேண்டியதின் அவசியத்தை உணர்ந்தார். அவரது வாழ்க்கையைப்போன்று வாழுவதற்கு முயற்சி செய்துகொண்டிருப்பவர்கள், அதைப்போன்ற தேவையை உணர்வார்கள்… Mar 154.1

“ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால் அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (மத்தேயு 16:24) என்று அவர் நம்மிடம் கூறுகிறார். “என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்” (மத்தேயு 11:29). நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன் என்று கிறிஸ்து கூறும்பொழுது, அவர் மாத்திரமே அதற்கான மறுமொழி கொடுக்கத் தகுதியுள்ளவர்களாக நம்மை ஆக்கமுடியும். ஒவ்வொரு நாளும் சுயம் மறுக்கப்பட வேண்டும் என்பதே இதன் பொருளாகும். அந்த மேன்மையான மனத்துணிவையும், பாடனுபவிக்கத்தக்க சித்தத்தையும், விடாமுயற்சியுடன்கூடிய சக்தியோடு போராடுவதற்கான பெலத்தையும் கிறிஸ்துவே நமக்குக் கொடுக்கமுடியும். பெலவீனமான ஒரு ஆத்துமாகூட தெய்வீக கிருபையின் துணையோடு, எந்த வெற்றியாளருக்கும் மேலாக வல்லமையைப் பெற்றுக்கொள்ள முடியும்.⋆ Mar 154.2

வாக்குத்தத்த வசனம்: Mar 154.3

“...நான் கர்த்தர், எனக்கு காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்.” - ஏசாயா 49:23. Mar 154.4