Go to full page →

அத்தியாயம் 23 - முதலாம் துதனின் துது GCt 64

1843 ஆம் ஆண்டினில், கர்த்தர், காலங்களைக் குறித்த அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். என நான் கண்டேன். ஜனங்களை விழிப்படையச் செய்து, ஒரு சோதனை கட்டத்திற்கு கொண்டுவந்து, தீர்மானங்களை எடுக்கும்படியாக தூண்டுவது, தேவனின் திட்டமாக இருந்தது. திரளான ஊழியக்காரர்கள், தீர்க்கத்தரிசன காலங்களில் குறிக்கப்பட்ட நிகழ்வுகளைக் குறித்து அறிந்ததை மெய்யான சாட்சி பகிர்ந்தனர். அந்தப்படியே, ஊழியக்காரர்கள் தங்களுடைய பெருமையையும், வருமானத்தையும், சபையையும் விட்டகன்று, பல இடங்களுக்குச் சென்று, இச்செய்திகளை எடுத்துரைத்தார்கள். பரலோகத் திலிருந்து வந்த இச்செய்தியை பரப்ப அநேக ஊழியக்காரர்கள் புதிதாக தெரிந்துக்கொள்ளப்பட்டார்கள். அவர்களில் சிலர் வயல்களிலிருந்தும், வேறு சிலர் தங்கள் வியாபாரங்களிலிருந்தும் அழைக்கப்பட்டனர். பிரபலமாகாத ஊழியமாகிய ‘முதல் தூதனின் செய்தியை’ பரப்புவதற்கென்று அநேகர் அழைக்கப்பட்டார்கள். இயேசு கிறிஸ்து வருகையைக் குறித்து அனைவரும் பேசினார்கள். இச்செய்தியைக் கேட்ட யாவரும் அசைக்கப்பட்டார்கள். பாவிகள், மனங்கசந்து அழுது, மன்னிப்பை கோரினார்கள். உண்மையில்லா தவர்கள், தாங்கள் அநியாயமாக பறித்துக் கொண்டவைகளை திருப்பிக் கொடுக்க முன் வந்தார்கள். GCt 64.1

பிள்ளைகளின் மீது பெற்றோர்கள் வெகுவாக அக்கறைக் கொண்டார்கள். செய்தியை ஏற்றுக்கொண்டவர்கள், இன்னமும் மனம் திருந்தாத நண்பர்களோடும், உறவினர்களோடும் போராடுவதை நான் பார்த்தேன். கிறிஸ்துவின் வருகைக்காக யாவரும் ஆயத்தமானார்கள். இத்தகைய “ஆத்தும சுத்திகரிப்பு” கிரியை, உலக ஆசைகளை புறம்பே தள்ளிவிட்டு, இதற்கு முன் அனுபவித்திராத பரிசுத்த நிலையை கொண்டு வந்தது. வில்லியம் மில்லரால் பிரசங்கிக்கப்பட்ட இச்செய்தியை ஆயிரக்கணக்கானோர் ஏற்றுக்கொண்டனர். பிற ஊழியக்காரர்களும், எலியாவின் வல்லமையோடு பிரசங்கிக்க எழுப்பப்பட்டார்கள். இயேசுவின் முன்னோடியாகிய யோவானைப் போல பிரசங்கித்தவர்களும், கோடரியானதை மரங்களின் வேர் அருகே வைப்பது அவசியம் எனக் கருதி, யாவரையும் மனந்திரும்புதலுக் கென்று அழைத்தார்கள். வரப்போகும் உக்கிரகத்துக்கு தப்பியோடுங்கள் என்கிற செய்தியை கேட்டவுடன், திருச்சபையை விட்டு விலகிய அநேகர் மனங்கசந்து அழுது, ஆத்துமபாரத்தோடு, தேவனிடத்தில் தங்களை அர்ப்பனித்தார்கள். தேவ ஆவியானவர் அவர்கள் மீது தங்கியபோது, அவர்களும் அந்த எச்சரிப்பின் தூதை உச்சரிக்கத் துவங்கினார்கள். GCt 64.2

குறித்த காலத்தைப் பற்றிய செய்தி, மறுபக்கத்தில், அநேக எதிர்ப்புகளை எழுப்பிற்று. மேடை பிரசங்கியாரிலிருந்து மோசமான பாவிவரை எதிர்ப்புகளை தெரிவித்தார்கள். ‘நாளையோ நாளிகையையோ ஒருவனும் அறிவதில்லை என்ற வேதக் கூற்று எல்லார் மனதிலும் உதிக்க ஆரம்பித்தது. ஆடுகளை மேய்த்தவர்கள் அநேகர், இயேசுவை நேசித்தப்படியால், அவரின் வருகையைக் குறித்த செய்தியை வரவேற்றார்கள். ஆனால், குறித்தக் காலத்தை எற்கவில்லை. தேவனின் கண்கள் இவர்களுடைய இருதயங்களை ஆராய்ந்தது. அவர்கள் இயேசு சமீபமாக இருப்பதை நேசித்ததாக தெரியவில்லை. தேவனுடைய மகத்துவமான ஊழியத்துக்கு தடையாக அநேகர் எழும்பினார்கள். இவர்கள் சாத்தானோடும் அவனுடைய தூதர்களோடும் இணைந்து, சமாதானம் இல்லாதபோதும் ‘சமாதானம், சமாதானம்’ என்று கூறிவந்தார்கள். தேவ தூதர்கள் இவை அனைத்தையும் குறித்து - வைத்ததை நான் கண்டேன். தத்தம் செய்யாத மேய்ப்பர்களின் வஸ்திரங்கள் ஆத்துமாக்களின் இரத்தக் கறைகள் நிறைந்ததாய் இருந்தது. சுகபோகத்தை விரும்பியவர்களும், தேவனைவிட்டு விலகி இருப்பதில் லயித்தவர்களும், தங்களுடைய மாமிசப் பிடியிலிருந்து எழுப்பப்படமுடியாது என்று நான் கண்டேன். GCt 64.3

அநேக ஊழியர்கள் இந்த இரட்சிப்பின் செய்தியை ஏற்றுக்கொள்ளாதது மத்திரமல்லாமல், பிறருக்குத் தடையாகவும் இருந்தார்கள். ஆத்துமாக்களின் இரத்தப்பழி அவர்கள் தலைகளில் இருக்கிறது. பரலோகத்திலிருந்து வந்திருந்த இச்செய்தியை அநேக போதகர்களும் ஜனங்களும் இணைந்து எதிர்த்தார்கள். வில்லியம் மில்லரையும், அவரோடு இணைந்து இந்த ஊழியத்தை செய்து வந்தவர்களையும் துன்பப்படுத்தினார்கள். வில்லியம் மில்லருடைய செல்வாக்கை சீர்குலைப்பதற்காக பொய்ப்பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. வெவ்வேறு சமயங்களில், வேத ஆலோசனைகளை நேரிடையாகவும், தெளிவாகவும் எடுத்துறைத்திருந்ததினால், இருதயங்களில் குத்தப்பட்ட ஜனங்கள், வில்லியம் மில்லரை கொலைச் செய்ய திட்டமிட்டார்கள். ஆனால் தேவதூதர்கள், மில்லரை பாதுகாப்பாக எடுத்துச் சென்றார்கள். அவருடைய ஊழியம் இன்னமும் முடிந்திருக்கவில்லை. GCt 65.1

விசுவாசம் நிறைந்தவர்கள் இச்செய்திகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்கள். அஃது தேனிடத்திலிருந்து வந்தது என்றும், சரியான நேரத்தில் வந்தது என்றும் அவர்கள் அறிந்திருந்தார்கள். இப்பரலோகச் செய்தியை திருச்சபைகள் ஏற்க மறுத்ததால், வருத்தத்துடன் தூதர்கள் இதனை இயேசுவன்டை கொண்டுவந்தார்கள் இnசு தமது கவனத்தை திருப்பி, சத்தியத்தை ஏற்றுக்கொண்டவர்களை சிறப்பாக கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஏனெனில், இன்னொரு ஒளி அவர்கள் மீது பிரகாசிக்கவிருந்தது. GCt 65.2

தங்களுடைய இரட்சகரின் தோற்றத்தை நேசிப் பர்களாகவோ, அவர்மீது வாஞ்சை வைத்தவர்களாகவோ, இயேசுவிற்கு நிகரானவர் எவரும் இல்லை என்ற விசுவாசமுள்ளவர்களாகவோ இருந்திருந்தால், இந்த பாசங்கு கிறிஸ்தவர்கள் அவருடைய வருகையின் செய்தியை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்கள் வெளிப்படுத்திய ஆர்வமற்ற பாவனை, அவர்மீது அவர்களுக்கு அன்பில்லாததை நிரூபித்தது. அவருடைய நாமத்தை தரித்திருக்கும் பிள்ளைகள், அவர் மீது பிரியமில்லாதிருப்பதை, சாத்தானும் அவனுடைய தூதர்களும் இயேசுவின் முகத்தில், வீசியெறிந்தார்கள். GCt 65.3

அதே வேளையில், தேவ ஜனங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன், கர்த்தருடைய வருகைக்காக காத்திருப்பதை நான் கண்டேன். ஆனால் தேவன் அவர்களை சோதிக்க திட்டமிட்டார். தீர்க்கதரிசன காலங்களின் விளக்கத்திலிருந்த ஒரு சிறிய பிழையை கர்த்தரின் கரம் மறைத்துவிட்டது. கர்த்தரின் வருகையை எதிர்பார்த்து இருந்தவர்களும் இதனை கண்டுபிடிக்கவில்லை, இந்த தீர்க்கதரிசன விளக்கங்களை எதிர்த்தவர்களும் இதனை கவனிக்கத் தவறிவிட்டார்கள். ஐனங்கள் ஒரு ஏமாற்றத்தை சந்திக்க வேண்டும் என்று தேவன் திட்டமிட்டார். காலம் கடந்தபோது, கர்த்தரின் வருகைக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தவர்கள் மனம் நொந்துப்போனார்கள். அவருடைய வருகையை பயத்தினால் ஏற்றவர்கள், எதிர்பார்த்த காலத்தில் அவர் வராததால், மகிழ்ச்சி அடைந்தார்கள். இவர்களுடைய இருதயங்கள் மாறவுமில்லை, சுத்திகரிக்கப்படவுமில்லை. இத்தகைய இதயங்களை வெளிக்காட்ட இந்த தீர்க்கதரிசன காலக்கட்டம் சரியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இரட்சகரின் வருகையை ஆசித்த நபர்களை இவர்கள்தான் முதலாவதாக நிந்தித்தார்கள். இக்கட்டான வேளைகளில், குறுகி, பின்னடையப் போகிறவர்களை காட்டுவதற்காகவே இந்தப் பரீட்சை விளங்கியது. இதில் தேவனுடைய ஞானத்தை நான் கண்டேன். GCt 66.1

கிறிஸ்துவின் வருகை மீது ஆத்தும தாகம் கொண்டிருந்தவர்களை அன்போடும், அனுதாபத்தோடும் பரலோகமே பார்த்துக்கொண்டிருந்தது. இச்சோதனைக் காலத்தில், அவர்களை, தேவதூதர்கள் தாங்கிக்கொண்டிருந்தார்கள். பரலோகச் செய்தியை ஏற்காதவர்கள் இருளில் வசித்தார்கள். தேவக் கோபம் அவர்கள் மீது எழும்பிற்று. தங்கள் கர்த்தர் எதற்காக இச்சமயத்தில் வரவில்லை என்பதை கண்டறிய, ஏமாற்றமடைந்திருந்த விசுவாசிகள், மீண்டும் வேதத்திலிருந்து தீர்க்கதரிசனக் காலங்களின் விளக்கங்களை அலச ஆரம்பித்தார்கள். இப்பொழுது, கர்த்தரின் கரம் எடுக்கப்பட்டபடியால், காலக்கணக்கில் ஏற்பட்டிருந்த பிழை தெளிவாக்கப்பட்டது. தீர்க்கதரிசன காலங்களின் விளக்கம் 1844 ஆம் ஆண்டு வரை வந்தது. ஆனால், இதே விளக்கத்தை, தீர்க்கதரிசனக் காலங்கள் 1843ஆம் ஆண்டு நிறைவடையும் என்றும், 1844ஆம் ஆண்டு அனைத்தும் முடிந்துவிடும் என்றும் சொல்வதற்கு பயன்படுத்திக்கொண்டார்கள். கர்த்தருடைய வார்த்தையிலிருந்து எழும்பிய ஒளி அவர்களுடைய நிலையை தெளிவாக்கியபடியால், “தாமதிக்கும் காலம்” என்றொன்று இருப்பதை கண்டுப்பிடித்தார்கள். இந்த தரிசனம் பிந்துமானால், அதற்காக காத்திருக்கத்தான் வேண்டும். இயேசுவின் துரித வருகையின் மீது இருந்த அளவற்ற வாஞ்சையினால், இந்த பிழையை கவனிக்காமல் இருத்திருக்கிறார்கள். இன்னொரு காலக்குறியும் அவர்களுக்கு கிடைத்தது. ஆகிலும், 1843ஆம் ஆண்டு வரை இருந்த உற்சாகத்தையும் விசுவாசத்தையும், இந்தப் பெரிய ஏமாற்றத்தின் பின் அடைய அநேகரால் கூடாமற்போனதை நான் கண்டேன். GCt 66.2

சாத்தானும் அவனுடைய தூதர்களும் களிகூர்ந்தார்கள். பரிசுத்த தூதினை ஏற்காதவர்கள், தங்களுடைய ஞான-மிகுதியால் தான் ஏமாற்றத்திலிருந்து தப்பியதாகக் கருதினார்கள். தேவ ஆலோசனைகளை நிந்தித்து, சாத்தானோடு இணைந்து, தேவ ஜனங்களை குழப்பிவிடுகிறார்கள் என்பதை உணராதிருந்தார்கள். GCt 66.3

வருகையின் செய்தியை ஏற்றுக்கொண்டவர்களை திருச்சபைகளில் கொடுமைப்படுத்தினார்கள். ஆரம்பத்தில், சிலர் இக்கொடுமைகளைச் செய்ய பயந்தார்கள். ஆனால், காலப்போக்கில், தங்களுடைய இருதயங்களின் உண்மையான நிலை வெளி வர ஆரம்பித்தது. தீர்க்கதரிசன விளக்கங்களைப் பெற்று, அதனை பிறருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டவர்களை அமைதியாக்க முயற்சித்தார்கள். ஆனால், அவர்கள் அளித்த வேத விளக்கங்களை எதிர்க்க முடியாமல் போனது. 1844ஆம் ஆண்டில் கர்த்தர் வருவார் என விசுவாசித்தது ஏன், என்பதற்கு தெளிவான வேத விளக்கங்களை அவர்கள் கொடுத்தார்கள். திருச்சபையின் அதிகாரங்கள் இவர்களுக்கு விரோதமாக எழும்பினது. இந்த சாட்சிகளை தடுக்கவும், யாதொரு சாட்சியத்தையும் அவர்கள் ஏற்காமல் இருக்கவும் தீர்மானித்தார்கள். தாங்கள் தேவனிடத்திலிருந்து பெற்ற சத்திய ஒளியை பிறருக்கு மறைக்கவிரும்பாதவர்களை, திருச்சபையிலிருந்து வெளியேற்றினார்கள். ஆகிலும், இயேசு அவர்களுடன் இருந்தப்படியால், அவர்கள் மகிழ்ச்சியாய் இருந்தார்கள். இரண்டாம் தூதனின் தூதினை கேட்க ஆயத்தமாயிருந்தார்கள். GCt 66.4

பார்கக : தானியேல் 8 : 14
ஆபகூக் 2 : 1-4
மல்கியா 3 : 1-18 ; 4 : 1-6
மத்தேயு 24 : 36
வெளிப்படுத்தல் 14 : 6-7