Go to full page →

சாட்சியாகமங்களைப் புறக்கணித்தல் மருளவிழுகையை ஏற்படுத்தும் கச 128

சாத்தானுடைய கொடியின்கீழ் நிற்கின்ற ஏழாம்நாள் அட்வென்டிஸ்ட் மக்கள், தேவ ஆவியானவரின் சாட்சியாகமங்களில் அடங்கியுள்ளதான கடிந்துகொள்ளுதல்கள், எச்சரிப்புகள் அகியவற்றின்மீதுள்ள தங்களது விசுவாசத்தை முதலாவதாக விட்டுவிடுவார்கள் என்கிற ஒரு காரியம் மட்டும் நிச்சயம். — 3SM 84 (1903). கச 128.6

தேவ ஆவியானவரின் சாட்சியாகமத்தைப் பயனற்றதாக ஆக்குவதே சாத்தானுடைய மிகக் கடைசியான (மாபெரும்) வஞ்சக மாகும். “தீர்க்கதரிசனம் இல்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள்” (நீதி. 29:18). மெய்யான சாட்சியில் (சாட்சியாகமத்தில்) தேவனுடையமீதமான ஜனத்தின் நம்பிக்கையை நிலைகுலையச் செய்ய வெவ்வேறு வழிகளிலும், வெவ்வேறு ஏதுகரங்கள் மூலமும், சாத்தான் சூழ்ச்சித் திறமையுடன் செயலாற்றுவான். - 1SM 48 (1890). கச 128.7

சாட்சியாகமங்களில் நமது சொந்த ஜனங்களின் விசுவாசத்தை நிலைகுலையச் செய்வதற்கு, சத்துரு தனது மிகவும் கைதேர்ந்த முயற்சிகளை எடுத்துள்ளான்… இது, சாத்தான் திட்டமிட்டதுபோலவே இருக்கவேண்டும் என்பதுதான் அவனது எண்ணமாகும். தேவ ஆவியின் சாட்சியாகமங்களில் சொல்லப்பட்டிருக்கின்ற எச்சரிப்புகளுக்கும் கண்டனங்களுக்கும் செவிமடுக்காமல் இருக்கும்படி ஜனங்களுக்கு வழியை ஆயத்தம் செய்துகொண்டிருப்போர், தங்கள் வாழ்க்கையிலே ஒரு வெள்ளம் போன்ற எல்லாவிதமான தவறுகளும் நுழைவதைக் காண்பார்கள். — 3SM 83 (1890). கச 129.1

சாட்சியாகமங்களில் தேவனுடைய ஜனங்கள் கொண்டுள்ள விசுவாசத்தைப் பெலவீனப்படுத்துவதே சாத்தானின் திட்டமாகும். நமது விசுவாசத்தின் மூல உபதேசங்களாகிய நிலைத் தூண்களைக்குறித்த முக்கியமான காரியங்களில், அடுத்ததாக ஐயப்பாடு தொடரும். பின்பு, பரிசுத்த வேத வார்த்தைகளைக்குறித்த சந்தேகமும், அதன் பின்பு அழிவுக்கேதுவான கீழ்நோக்கிய அணிவகுப்பும் தொடரும். ஒரு காலத்தில் நம்பப்பட்ட சாட்சியாகமங்கள், சந்தேகிக்கப்பட்டு கைக்கொள்ளாமல் விட்டுவிடப்படும்பொழுது, வஞ்சிக்கப்பட்டவர்கள் அதோடு நின்றுவிடமாட்டார்கள் என்பதைச் சாத்தான் அறிந்திருக்கின்றான். எனவே, ஒருபோதும் குணப்படுத்த இயலாத அழிவிலே முடியக்கூடியதான வெளிப்படையான கலகத்திற்கு அவர்களைக் கொண்டுசென்று நிறுத்தும்வரைக்கும், அவன் தனது முயற்சிகளை இருமடங்காக்குகிறான். — 4T 211. கச 129.2