Go to full page →

மாபெரும் அக்கினிப் பந்துகள் கச 17

கடந்த வெள்ளிகிழமை காலையிலே, நான் விழித்தெழுவதற்கு சற்று முன்பாக, நெஞ்சைவிட்டு நீங்காத ஒரு காட்சி எனக்கு முன்பாகக்காட்டப்பட்டது. நான் நித்திரையிலிருந்து விழித்துவிட்டதுபோல் காணப்பட்டேன். ஆயினும் நான் என் வீட்டில் இல்லை. அகோரமாகப் பற்றியெரியும் நெருப்பை, ஜன்னல்கள் வழியே என்னால் காண முடிந்தது. வீடுகளின்மீது மாபெரும் அக்கினிப் பந்துகள் விழுந்துகொண்டிருந்தன. இப்பந்துகளிலிருந்து அக்கினிமயமான அம்புகள் எல்லாத் திசைகளிலும் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தன. கொழுந்துவிட்டு எரிந்த அந்நெருப்பை அமர்த்துவது இயலாததாயிருந்தது. அநேக இடங்கள் அழிக்கப்பட்டுக்கொன்டிருந்தன. மக்களுக்கு உண்டான பயங்கரம் விவரிக்க முடியாததாயிருந்தது. சிறிதுநேரம் கழித்து விழித்தபோது, நான் என் வீட்டில் இருப்பதை உணர்ந்தேன். - Ev 29 (1906). கச 17.2

மிகப்பெரிய ஒரு அக்கினிப் பந்து, அழகான சில மாளிகைகளுக்கிடையே விழுந்து, நொடிப்பொழுதில் அவைகளுக்கு அழிவு ஏற்படுத்துவதை நான் கண்டேன். “பூமியின்மீது தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் வரவிருக்கின்றன என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். ஆயினும், அவைகள் இவ்வளவு சீக்கிரமாக வரும் என்பது எங்களுக்குத் தெரியாது” என்று யாரோ ஒருவர் கூறுவதை நான் கேட்டேன். “உங்களுக்குத்தான் தெரிந்திருந்ததே! பின்பு ஏன் நீங்கள் எங்களுக்குச் சொல்லவில்லை! நாங்கள் அறியாதிருந்தோமே!” என்று மற்றவர்கள் வேதனையான குரல்களில் கூறினர். -9T 28 (1909). கச 17.3