Go to full page →

பின்மாரிக்காக வழியை ஆயத்தப்படுத்தல் கச 139

சூழ்ந்து நெருக்குகின்ற ஒவ்வொரு பாவத்தின்மீது. பெருமை, சுயநலம், உலக ஆசைமீதும், ஒவ்வொரு தவறான வார்த்தை மற்றும் செய்கைமீதும், அவர்கள் வெற்றிபெறாத வரை, ஒருவரும் பின்மாரி என்னும் இளைப்பாறுதலைப் பெற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை நான் கண்டேன். எனவே நாம் இன்னும் அதிகமாகக் கர்த்தரின் பக்கம் நெருங்கி வந்து, கர்த்தருடைய மகா நாளிலே நடக்கப்போகின்ற யுத்தத்திலே நிற்க தகுதியடையும்படியான ஆயத்தத்தை மிகவும் ஊக்கமாகத் தேடவேண்டும். — EW 71 (1851). கச 139.5

நமது குணங்களில் இருக்கின்ற குறைபாடுகளைச் சரிசெய்து, எல்லா அசுத்தமும் நீங்க நமது ஆத்துமாவைச் சுத்தம் செய்வது நம்மிடம்தான் விடப்பட்டிருக்கின்றது. அப்போது, பெந்தெகொஸ்தே நாளிலே சீஷ்ர்களின்மீது முன்மாரி பொழிந்ததைப்போல நம்மீது பின்மாரி பொழியும். — 5T 214 (1882). கச 139.6

ஏங்கித் தவித்துக்கொண்டிருகின்ற சபையின்மீது கர்த்தர் தமது ஆவியை ஊற்றும்படிக்கு, எல்லாத் தடைகளையும் அகற்றுவதன்மூலமாக தேவனுடைய ஜனங்கள் வழியை ஆயத்தம் செய்வதைப் பார்த்து பயப்படுவதைப் போல, வேறு எதைப் பார்த்தும் சாத்தான் அதிகமாக பயப்படுவதில்லை… ஒவ்வொரு சோதனையும், ஒவ்வொரு எதிர்க்கின்ற செல்வாக்கும், அவைகள் மறைவானவையாய் இருந்தாலும், வெளியரங்கமானவையாக இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்த்து நிறுத்தப்பட முடியும். “பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (சக. 4:6). — 1SM 124 (1887). கச 140.1

பின்மாரி வரும்; ஒவ்வொரு அசுத்தமும் நீங்க சுத்திகரிக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்துமாவையும் தேவனுடைய ஆசீர்வாதம் நிரப்பும். பரிசுத்த ஆவியானவரின் ஞானமுழுக்கிற்காக — கர்த்தருடைய சமூகத்திலிருந்து வரப்போகின்ற இளைபாறுதலின் காலத்திற்குள் பிரவேசிப்பதற்கு நாம் தகுதியடையும்படியாக, நம்முடைய ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்கு ஒப்படைப்பதே இன்றைய நம்முடைய வேலையாக இருக்கின்றது. — 1SM 191 (1892). கச 140.2