Go to full page →

அனைவரும் பின்மாரியைப் பெற்றுக்கொள்ளமாட்டார்கள் கச 141

தேவனுடைய ஜனங்கள் தங்களது பங்காக உள்ள முயற்சிகளை செய்யாமல், இளைப்பாறுதல் (பின்மாரி) தங்கள்மீது வந்து, பிழைகள் நீங்க தங்கள் தவறுகளைச் சரிசெய்யும் என்று காத்திருப்பார்களானால், தங்களது மாம்சத்திலும் ஆவியிலும் உள்ள அசுத்தத்தை சுத்தம் செய்து, பின்பு மூன்றாம் தூதனின் உரத்த சத்தத்தை அளிக்கத் தங்களைத் தகுதிப்படுத்தும் என்று அவர்கள் அதைச் சார்ந்திருப்பார்களானால், குறைவாய்க் காணப்படுவார்கள் என்று எனக்குக் காண்பிக்கப்பட்டது. — 1T 619 (1867). கச 141.3

முழு சபையும் எழுப்புதல் அடைவதைக் காணும்படியாக நம்பிக்கொண்டிருக்கின்றோமா? அப்படிப்பட்ட காலம் ஒருபோதும் வராது. மனந்திரும்பாமலும், ஊக்கமான மற்றும் அன்றாட ஜெபத்தில் தங்களை இணைத்துக்கொள்ளாமலும் இருக்கிற அநேக நபர்கள் சபையில் இருக்கின்றார்கள். நாம் தனிப்பட்ட முறையிலேதான், இந்த ஊழியத்தில் ஈடுபடவேண்டும். நாம் அதிகமாக ஜெபிக்கவேண்டும், குறைவாகப் பேசவேண்டும். — 1SM 122 (1887). கச 141.4

பரிசுத்த ஆவியானவர் பொழியப்படும்போது, முன்மாரியைப் பாராட்டி அதைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், பின்மாரியின் மதிப்பைப் புரிந்துகொள்ளவும், அதைக் காணவும் முடியாது என்பதை நாம் நிச்சயமாக அறியலாம். — 1SM 22 (1887). கச 142.1

தங்களிடத்தில் கிடைக்கப்பெற்றிருக்கின்ற வெளிச்சத்தின்படி, முழுமையாக வாழ்கின்றவர்கள் மாத்திரமே, இன்னும் அதிகமான வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்வார்கள். செயலாற்றுகின்ற கிறிஸ்தவ நற்பண்புகளின் எடுத்துக்காட்டுகளில் நாம் அனுதினமும் முன்னேறிச் சென்று கொண்டிரா விட்டால், பின்மாரியில் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடுகளை உணர்ந்துகொள்ளமாட்டோம். நம்மைச் சுற்றிலும் இருக்கின்ற இருதயங்களின்மீது பின்மாரி ஊற்றப்படலாம். ஆனால் நாமோ அதை அறிந்து கொள்ளவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ மாட்டோம். — TM 399 (1896). கச 142.2

தீர்மானமான முயற்சி எடுக்காமல், பரிசுத்த ஆவியானவர் வந்து கிரியை செய்யும்படி தங்களைத் தூண்டுவார் என்று வெறுமனே காத்திருக்கிறவர்கள் இருளிலே அழிந்துபோவார்கள். தேவனுடைய வேலையிலே நீங்கள் ஒன்றுமே செய்யாமல் அமைதலாய் உட்கார்ந்திருக்கக் கூடாது. — ChS 228 (1903). 1பார்க்கவும்: சகரியா 10:1; ஓசியா 6:3, யோவேல் 2:23, 28. கச 142.3

*****