Go to full page →

பாபிலோனின் விழுகை இன்னும் முழுமையடையவில்லை கச 143

அவள், “தனது வேசித்தனமாகிய உக்கிரமான மதுவை சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே” (வெளி. 14:6-8). இது எப்படி நடை பெறுகின்றது? ஒரு போலியான ஓய்வுநாளை ஏற்றுக்கொள்ள மனிதர் -களைக் கட்டாயப்படுத்துவதின் மூலம் நடைபெறுகின்றது. - 8T 94 (1904). கச 143.6

இருப்பினும்..., “தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவை சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே,” என்று நாம் இந்நேரம் வரை கூறமுடியாது. ஏனெனில் அவள், சகல ஜாதிகளும் குடிக்கும்படியாக இன்னமும் (முழுமையாக) செய்யவில்லை... கச 144.1

இந்த நிபந்தனை நிறைவேறும்வரையிலும், உலகத்துடனான சபையின் ஒருங்கிணைப்பு கிறிஸ்தவ உலகம் முழுவதிலும் முற்றிலுமாக நிறைவேறும்வரையிலும், பாபிலோனின் விழுகை முழுமையடையாது. இந்த மாற்றம் முன்னேற்றமடைகின்ற ஒரு காரியமாகும். வெளிப்படுத்தல் 14:8-ன் முழுமையான நிறைவேறுதல் இன்னும் எதிர்காலத்திலேயே நடக்கவிருக்கின்றது. - GC 389, 390 (1911). கச 144.2

எப்போது அவளுடைய பாவங்கள் வானபரியந்தும் எட்டும்? (வெளி. 18:2-5), சட்டமியற்றப்படுத்லின்மூலம், தேவனுடைய பிரமாணம் ஒன்றுமில்லாமல் ஆக்கப்படும்போதுதான் அப்படி நடக்கும். — ST June 12,1893. கச 144.3