Go to full page →

அட்வென்டிஸ்ட்டுகள் அல்லாத பெரும்பகுதியினர் எச்சரிப்பைப் புறக்கணிப்பர் கச 152

செய்தியைக் கேட்கின்ற அநேகர் — எண்ணிக்கையில் மிகவும் அதிகமானோர் — பக்திவிநயமான அந்த எச்சரிப்பை நம்பி ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். குணங்களை சோதிக்கின்ற தேவனுடைய கற்பனைகளுக்கு, அநேகர் உண்மையில்லாதவர்களாக காணப்படுவர். கர்த்தருடைய (உண்மையான) ஊழியக்காரர்கள், கொள்கை வெறியர் என்று அழைக்கப்படுவர். ஆதலால், அவர்களுக்குச் செவிகொடுக்க வேண்டாம் என்று போதகர்கள் ஜனங்களை எச்சரிப்பார்கள். மனிதர் கேட்டாலும் அல்லது கேட்காமல் விட்டுவிட்டாலும், தூதைக் கொடுக்கும்படியாக தேவனுடைய ஆவி ஏவினபோது, இதே போன்றுதான் நோவாவும் நடத்தப்பட்டார். — TM 233 (1895). கச 152.3

இவ்விதமான எச்சரிப்புகளை சிலர் கவனித்துக் கேட்பார்கள். ஆனாலும் பெரும்பான்மையினரால் அவைகள் நிராகரரிக்கப்படும். — HP 343 (1897). கச 152.4

மிகவும் புகழ்பெற்று விளங்கும் போதகர்கள் தங்களது அதிகாரம் பற்றி கேள்வியெழுப்பப்பட்டதால், பூர்வ காலத்துப் பரிசேயர்களைப் போலக் கோபத்தால் நிறைந்து, தூதினை சாத்தானிடமிருந்து வருவதாகக் கண்டனம் தெரிவிப்பர்; அதை அறிவிப்போரைப் பரியாசம் செய்து, உபத்திரவப்படுத்தும்படி பாவத்தை நேசிக்கும் திரள்கூட்டத்தாரையும் தூண்டிவிடுவர். — GC 607 (1911). கச 152.5