Go to full page →

அவிசுவாசமும் விலக்கப்பட்ட கேளிக்கைகளும் தொடரும் கச 168

விஞ்ஞானம் என்றழைக்கப்படும் நாத்திகம், வேதாகமத்தின்மீதுள்ள கிறிஸ்தவ உலகத்தின் விசுவாசத்தை அதிக அளவில் அழித்திருக்கின்றது. சுய இன்பத் தோய்வின் வழியை பின்தொடரவும், எச்சரிக்கப்படாதிருக்கவுந்தக்கதாக தவறான கருத்துகளும் கட்டுக்கதைகளும் மிகவும் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஏனெனில் தேவனை தங்களுடைய அறிவில் வைத்துக்கொள்ளாதிருக்க அவர்கள் போராடுகின்றனர். “நாளைய தினம் இன்றைய தினம் போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும்” என்று சொல்லிக்கொள்கின்றனர். அவர்களது அவிசுவாசத்தின் மத்தியிலும் தேவனற்ற கேளிக்கைகளின் மத்தியிலும், பிரதான தூதனுடைய சத்தமும் தேவனுடைய எக்காள சத்தமும் கேட்கப்படுகின்றது... கச 168.5

நமது உலகத்தில் இருப்பவைகளெல்லாம் சுறுசுறுப்பான செயலில் ஈடுபட்டிருக்கும்போதும், லாபத்திற்காக சுயநல நோக்கத்தில் முழ்கியிருக்கும்போதும், ஒரு திருடனைப்போல எதிர்பாராத நேரத்தில் இயேசு வருவார். — Ms15b, 1886. கச 169.1

தேவனுடைய பிள்ளைகளென்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள், உலகத்தோடு ஒன்றுபட்டு அவர்களைப்போலவே வாழ்ந்துகொண்டிருக்கும்போது, தடைசெய்யப்பட்ட கேளிக்கைகளில் அவர்களுடன் இணைந்துகொண்டிருக்கும்போது, உலகத்தின் ஆடம்பரம் சபையின் ஆடம்பரமாக மாறும்போது, திருமண மணி ஓசைகள் இசை எழுப்பும்போது, உலகப்பிரகாரமான அநேக வருடங்களின் செல்வச் செழிப்பிற்காக அனைவரும் நோக்கிப்பார்த்துக்கொண்டிருக்கும்போது — அந்த வேளையில், வானங்களிலிருந்து மின்னல் பளிச்சிடுவதுபோல, அவர்களது பிரகாசமான எதிர்பார்ப்புகளும் பொய்யான நம்பிக்கைகளும் சடுதியிலே முடிவை அடையும். — GS 338, 339 (1911). கச 169.2