Go to full page →

துன்மார்க்கருக்காக இனி எந்த ஜெபங்களும் ஏறெடுக்கப்படுவதில்லை கச 171

தேவனுடைய ஊழியக்காரர்கள் தெய்வபயமில்லாத ஒரு மக்கள் கூட்டத்திற்காகவும், கலகவீட்டாரான ஒரு சபைக்காகவும், தங்களது கடைசி ஜெபங்களை ஏறெடுத்தும், மனக்கிலேசமடைந்து கடைசிச் சொட்டுக் கண்ணீரைச் சிந்தியும், தங்களது கடைசி வேலையினை செய்து முடித்திருப்பார்கள். அவர்களுக்கான பக்திவிநயமான கடைசி எச்சரிப்பும் கொடுக்கப்பட்டாயிற்று. அதன் பின்பு, சத்தியத்தை அறிந்திருக்கிறோம் என்று பெருமைபாராட்டிக்கொண்டு, ஆனால் அதன்படி வாழாத மக்களால், தங்களுடைய ஊழியக்காரர்களிடமிருந்து கொஞ்சம் ஆறுதலைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகவும், தங்களுக்கு இரட்சிப்பின் வழி விளக்கிக் காண்பிக்கப்படுவதற்காகவும், அல்லது நம்பிக்கையான ஒரு வார்த்தையையோ அல்லது ஒரு ஜெபத்தையோ கேட்பதற்காகவும் அல்லது ஒரு அறிவுரையைப் பெற்றுக்கொள்வதற்காகவும், வீடுகளும் நிலங்களும் மற்றும் கஞ்சத்தனமாய் வாஞ்சையுடன் போற்றிச் சேமிக்கப்பட்டு இறுக்கமாகப் பிடித்துவைக்கப்பட்ட பணமும் (டாலர்). ஆ! எத்தனைச் சீக்கிரமாய் ஊழியக்காரர்களிடத்தில் கொடுக்கப்படும். ஆனால், அப்படி இல்லை, அவை எல்லாவற்றாலும் அப்போது பிரயோஜனமில்லை. இப்போது அவர்கள் சத்தியம் கிடைக்காத பசியாலும், தாகத்தாலும், பயனற்றவிதத்தில் கண்டிப்பாகத் தவிக்கவேண்டும்; அவர்களது தாகம் ஒருபோதும் தணிக்கப்படமாட்டாது; எந்த ஒரு ஆறுதலையும் இப்போது அவர்கள் கண்டடையமாட்டார்கள். அவர்களது வழக்குகள் தீர்மானிக்கப்பட்டு நித்தியத்திற்காய் முடிவுகட்டப்பட்டுவிட்டது. அது அச்சம் நிறைந்த பயங்கரமான ஒரு நேரமாகும். — Ms 1, 1857. கச 171.1

தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் இரக்கமில்லாமல் பூமியின்மீது ஊற்றப்படும் இந்த நேரத்தில், “உன்னதமானவரின் மறைவிலிருக்கின்ற” தேவனுடைய மக்களை — அதாவது தம்மை நேசித்து தமது கற்பனைகளைக் கைக்கொண்டவர்களை, கர்த்தர் தம்முடைய கூடாரத்தில் மறைத்து வைத்திருக்கிறதைப் பார்க்கும்போது. ஆ! துன்மார்ர்கருக்கு அது எத்தனை பொறாமையாயிருக்கும்! அப்படிப்பட்ட ஒரு காலத்திலே, தங்களது பாவங்களினிமித்தம் வேதனைப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு, நீதிமான்களின் பங்கு உண்மையில் பொறாமையூட்டுகின்ற ஒன்றாக இருக்கும். ஆனால் இரக்கத்தின் கதவு துன்மார்க்கருக்கு மூடப்பட்டுவிட்டது. கிருபையின் காலம் முடிந்த பின்பு, அவர்கள் சார்பாக எந்த ஒரு ஜெபமும் ஏறெடுக்கப்படமாட்டாது. — 3BC 1150 (1901). கச 171.2