Go to full page →

மற்றுமொரு கிருபையின் காலம் துன்மார்க்கரை உணர்த்தமாட்டாது கச 172

நமது தற்போதைய சந்தர்ப்பங்களையெல்லாம் நாம் முழுவதுமாக உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். பரலோகத்திற்கு ஆயத்தப்படக்கூடிய இன்னுமொரு கிருபையின் காலம் நமக்குக் கொடுக்கப்பட மாட்டாது. தமது கற்பனைக்குக் கீழ்ப்படிந்திருக்கின்ற அனைவருக்காகவும் கர்த்தர் ஆயத்தும் செய்துவைத்திருக்கின்ற, வர இருக்கின்ற பரம வீட்டில் வசிக்கத் தகுதியான குணங்களை உருவாக்கத்தக்கதாக, நமக்கு இருக்கின்ற இந்த சந்தர்ப்பமே நம்முடைய ஒரே ஒரு கடைசி சந்தர்ப்பமாகும். — Letter 20, 1899. கச 172.2

கர்த்தருடைய வருகைக்குப் பின்பு கிருபையின் காலம் இராது. அப்படி இருக்கும் என்று சொல்லுகிறவர்கள் வஞ்சிக்கப்பட்டவர்களும், தவறான வழியில் நடத்தப்பட்டவர்களுமாவர். பூமியில் ஜலப்பிரளயம் வருவதற்கு முன்பிருந்த அதேபோன்ற ஒரு நிலைமையே, கிறிஸ்து வருவதற்கு முன்பும் இருக்கும். நமது இரட்சகர் வானத்தின் மேகங்கள்மீது வந்த பின்பு, இரட்சிப்படைவதற்கான மற்றொரு சந்தர்ப்பம் ஒருவருக்கும் கொடுக்கப்படமாட்டாது. ஏனெனில், அனைவரும் தங்களது தீர்மானங்களை எடுத்து முடித்திருப்பார்கள். — Letter 45, 1891. கச 172.3

அவரவர்க்குக் கொடுக்கப்பட்ட வெளிச்சத்தின்படியே அனைவரும் சோதிக்கப்பட்டுப், பரீட்சிக்கப்படுவார்கள், மற்றுமொரு கிருபையின் காலத்தை எதிர்பார்க்க முடியாது. தற்காலிக ஆயிரவருட அரசாட்சி என்பது கிடையாது. பரிசுத்த ஆவியானவர் தங்களது இருதயங்களில் உணர்வைக்கொண்டுவந்த பின்பும், சத்தியத்தை எதிர்த்து, தங்களது செல்வாக்கை பயன்படுத்தி, அதனால் மற்றவர்களும் அதைப் பெற்றுக்கொள்ளாத படிக்கு வழியைத் தடைசெய்கின்றவர்கள் ஒருபோதும் உணர்வடைய மாட்டார்கள். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின் காலத்திலேயே தங்கள் குணத்தை மாற்றிக்கொள்ள அவர்கள் முயற்சி செய்யாததினி மித்தம், மீண்டுமாக அதே பரீட்சையில் வெற்றி பெறுவதற்கான மற்றொரு சந்தர்ப்பத்தைக் கிறிஸ்து அவர்களுக்கு அளிக்கமாட்டார். தீர்மானம் முடிவானதாய் இருக்கும். — Letter 25, 1900. கச 172.4

*****