Go to full page →

தேவனுடைய பிரமாணம் வானத்தில் தோன்றும் கச 180

மடிக்கப்பட்ட இரண்டு கற்பலகைகளைப் பிடித்திருக்கின்ற ஒரு கரம் வானத்திலே காணப்படுகின்றது. “வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி” (சங். 50:6) என்று தீர்க்கதரிசி கூறுகின்றார். இடிமுழக்கத்திற்கும் அக்கினியின் சீற்றத்திற்கும் நடுவே, வாழ்க்கையின் வழிகாட்டியாக சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட தேவனுடைய நீதியாகிய அந்தப் பரிசுத்த பிரமாணம் இப்போது நியாயத்தீர்ப்பின் சட்டமாக மனிதர்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றது. அந்தக் கரம் அந்தக் கற்பலகைளைத் திறக்க, அக்கினியின் எழுதுகோலால் எழுதப்பட்ட பத்துக்கற்பனையின் வார்த்தைகள் அங்கே காணப்படுகின்றன. அனைவரும் வாசிக்கத்தகுந்த விதத்தில், அதன் வார்த்தைகள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. அவர்கள் நினைவுகள் எழுச்சியடைகின்றன. முரணான சமயக் கருதுக்களும், மூட நம்பிக்கைகளுமாகிய இருள் அவர்கள் ஒவ்வொருவர் மனதிலிருந்தும் அகன்றுபோகின்றன. தேவனுடைய பத்துப்பிரமாணங்கள் சுருக்கமாகவும், தெளிவாகவும், அதிகாரத்தோடும் பூமியின் குடிகள் அனைவருக்கும் முன்பாகவும் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. — GC 639 (1911). கச 180.3