Go to full page →

தேவனுடைய ஜனங்கள் விடுவிக்கப்படுவர் கச 197

தப்பிப்பதற்கு அவர்களுக்கு வேறு வழியே இல்லாததுபோல் காணப்படுவதனால், சாத்தானின் சேனையும் துன்மார்க்கரும் அவர்களைச் சூழ்ந்துகொண்டு, அவர்களைக் கண்டு வெற்றியினால் ஆர்ப்பரிப்பார்கள் அவர்களது வெற்றி ஆரவாரத்துடன்கூடிய களியாட்டத்தின் மத்தியில், பேரோசையுள்ள இடி முழக்கங்களின் பெருத்த முழக்கம் ஒன்றன்பின் ஒன்றாக அங்கு கேட்கப்படும். வாகனங்கள் கறுத்து சூழுகின்றன. தேவன் தமது பரிசுத்த கூடாரத்திலிருந்து தமது சத்தத்தை முழங்கும்போது, வானங்கள் பரலோகத்திலிருந்துண்டாகும். பயங்கரமான மகிமையினாலும் பிரகாசிக்கும் ஒளியினாலும் மாத்திரம் ஒளியூட்டம் அடைகின்றன. கச 197.1

பூமியின் அஸ்திபாரங்கள் அசையும், கட்டடங்கள் நிலைகுலைந்து பயங்கரமான பேரோசையுடன் இடிந்து நொறுங்கிவிழும். ஒரு பானையின் நீர் கொதிப்பதுபோல சமுத்திரத்தின் தன்ணீர்கள் கொதிக்க, பூமி முழுவதும் பயங்கரமான குழப்பத்தில் இருக்கும். நீதிமான்களின் சிறையிருப்பு திருத்தப்பட்டது. அவர்கள், “நாம் விடுவிக்கப்பட்டோம், இது தேவனுடைய சத்தம்” என்று இனிமையான மற்றும் பக்திவிநயமான மெல்லிய குரலில் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வார்கள். - 1T 353,354 (1862). கச 197.2

நியாயப்பிரமாணங்களைக் கனம்பண்ணின பிள்ளைகளிடமிருந்து மானிட சட்டங்களின் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்படும்பொழுது, வெவ்வேறு இடங்களில் ஒரே சமயத்தில் அவர்களை அழித்துப்போடுவதற்கான பொதுவான ஒரு கிளர்ச்சி எழுப்பும், சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட அந்த நேரம் நெருங்கும்பொழுது, வெறுக்கத்தக்க அந்த வகுப்பினரை வேரோடு அழிக்க துன்மார்க்க ஜனங்கள் சதித்திட்டம் தீட்டுவார்கள். அவர்களைக் (துன்மார்க்கரைக்) கடிந்துக்கொண்டும் எச்சரித்தும்வந்த சத்தத்தை முற்றிலுமாக ஒயப்பண்ணும்விதத்தில், ஒரு குறிப்பிட்ட இரவில் ஒரேடியாக அழித்து விடும்படி தீர்மானிக்கப்படும். கச 197.3

தேவனுடைய ஜனங்களில் சிலர் சிறைச்சாலைகளில் அடக்கப்பட்டிருப்பார்கள். சிலர் மலைகளிலும் காடுகளிலும் உள்ள தனிமையான மறைவான இடங்களில் ஒளிந்துக்கொண்டிருப்பார்கள். தீய தூதர்களின் சேனைகளால் ஏவப்பட்ட ஆயுதந்தரித்த மனிதகூட்டம் அவர்களைக் கொலை செய்யும்படிக்கு, பூமியின் ஒவ்வொரு மூலையிலும் ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்ற அந்த நேரத்தில், அவர்கள் தெய்வீகப் பாதுகாப்பிற்காக் மன்றாடுவார்கள்… வெர்றிக்களிப்போடும், பரியாசச் சிரிப்போடும், சாப வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு ஆரவாரிக்கின்ற தீய மனிதர்களின் கூட்டம் தங்களது இரையயின்மீது பாய ஆயத்தமாகின்ற அந்த நேரத்தில்தானே, இதோ, இரவின் இருளைக்காட்டிலும் அடர்த்தியான ஒரு காரிருள் பூமியின்மீது படிகின்றது… கச 197.4

தமது மக்களை விடுவிப்பதற்காக, தேவன் நள்ளிரவில் தமது வல்லமையை வெளிப்படுத்துகின்றார்… சீற்றமான வானங்களின் மத்தியிலே, விவரிக்க முடியாத மகிமையோடு, தெளிவான ஒரு இடம் காணப்படுகின்றது. அங்கேயிருந்து திரளான தண்ணீர்களின் ஓசையைப்போல, ஆயிற்று என்கின்ற ஆண்டவரது சத்தம் தொனிக்கின்றது (வெளி. 16:17). அந்தச் சத்தம் வானங்களையும் பூமியையும் அசைக்கின்றது… கச 197.5

உலகின் பெருமையான பட்டணங்கள் தாழ்த்தப்பட்டன. உலகின் பெரிய பெரிய மனிதர்கள் தங்களை மகிமைப்படுத்தும்படி பொக்கிஷங்களைச் சேர்த்துவைத்திருந்த கெம்பீரமான அரண்மனைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாக நொறுங்கி அழிந்துபோயின. சிறைச் சாலையின் சுவர்கள் பிளந்தன. தங்களது விசுவாசத்தினிமித்தம் சிறைவைக்கப்பட்டிருந்த தேவனுடைய ஜனங்கள் விடுவிக்கப்பட்டனர். — GC 635-637 (1911). கச 198.1

*****