Go to full page →

பொறுப்புப் பகிர்ந்தளித்தலை வலியுறுத்தல் கச 36

தற்போது நமக்கு வேண்டியது, ஒரு மறு ஒழுங்கமைப்பே ஆகும். நாம் அஸ்திபாரத்திலே துவக்கி, ஒரு மாறுபட்ட கொள்கையின்மீது கட்டவேண்டியிருக்கின்றது... கச 36.5

வெவ்வேறு இடங்களிலும் வெவ்வேறு மாகாணங்களிலுமிருக்கின்ற, கல்வி மற்றும் பகுதி அலுவலகங்கள் சார்ந்த, நமது பலதரப்பட்ட நிறுவனங்களின் தலைமைப்பீடத்தில் நின்று கொண்டிருக்கின்ற மனிதர்கள் இங்கே இருக்கின்றார்கள். செயபடுத்துவதற்கான திட்டங்களை வனைவதிலும் உருவாக்குவதிலும் உரிமையுடைய இவர்கள் அனைவரும், பிரதிநிதியான மனிதர்களாக நிற்க வேண்டியதிருக்கின்றது. முழுதும் பரந்துவிரிந்துள்ள பணித்தளத்தைக் கருத்திற்கொண்டால், ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் அங்கே இருக்கவேண்டியுள்ளது. ஊழியம் பெரிதாயிருக்கின்றது. செய்யப்படவேண்டிய ஊழியத்தைத் திட்டமிடுவதற்கு, ஒரு மனித மூளையால் மாத்திரம் இயலாது. கச 36.6

இப்பொழுது நான் கூறிக்கொல்ள விரும்புவது: “ஊழியத்தின் இந்தப் பிரிவு அல்லது அந்தப் பிரிவு என்று கட்டுப்பாடு செயக்கூடிய எந்த ராஜாங்க வல்லமையையும், நமது பதவி நிலைகளில் தேவன் வைக்கவில்லை. ஒவ்வொரு ஒழுங்குமுறையிலும் அதைக் கட்டுப்படுத்துகின்ற முயற்சிகளினால், ஊழியம் பெரிதும் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஒரு மறுசீரமைப்பு, ஒரு மறு ஒழுங்கமைப்பு கட்டாயம் அவசியாமயிருக்கின்றது. இன்றியமையாத தேவையான ஒரு வல்லமையும் பெலனும், செயற்குழு கூட்டங்களுக்குள்ளாக கட்டாயம் கொண்டுவரப் பட வேண்டும்” 6ஏப்ரல் 2, 1901 -ம் ஆண்டு பேட்டில் கிரீக்கில் நடந்த ஜெனரல் கான்ஃபரன்ஸ் கூட்டத்தில், எலன் உவைட் அவர்கள் பேசிய துவக்கமான பேச்சிலிருந்து எடுக்கப்பட்டது. - GCB April 3, 1901, pp. 25, 26. கச 37.1

புதிய பகுதி அலுவலகங்கள், கட்டாயமாக உருவாக்கப்படவேண்டும். ஆஸ்திரேலியாவில், ஒன்றியப் பகுதி அலுவலகம் (யூனியன் கான்ஃபரன்ஸ்) ஒருங்கினைக்கப்பட்ட காரியம், தேவனுடைய ஒழுங்கின்படியானதாக இருந்தது... அறிவுரைக்காக ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள பேட்டில் கிரீக்கிற்கு கடிதத்தை அனுப்புவதும், பின்பு ஒரு பதிலைப் பெறுவதற்காக பல வாரங்கள் காத்திருப்பதும் அவசியமற்றதாக இருக்கின்றது. அதற்குப் பதிலாக, அந்த சமயத்தில் அங்கு பொறுப்பில் இருக்கக்கூடியவர்களே, என்ன செய்யப்படலாம் என்பதை தீர்மானிக்கவேண்டும். - GCB April 5, 1901, pp. 69, 70. கச 37.2