Go to full page →

தமக்கு உண்மையாய் இருப்பவர்களுடன் தேவன் கிரியை செய்கின்றார் கச 41

தமக்கு ஊழியஞ்செய்வதற்கென்று கர்த்தராகிய இயேசுவுக்கு எப்பொழுதுமே தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் இருக்கின்றனர். யூத ஜனங்கள் ஜீவாதிபதியாகிய கிறிஸ்துவை புறக்கணித்துபோது, அவர் தேவனுடைய ராஜ்யத்தை அவர்களிடத்திலிருந்து எடுத்து அதைப் புறஜாதிகளிடத்தில் கொடுத்தார். இந்தக் கொள்கையின் அடிப்படையில், தேவன் தமது ஊழியத்தின் ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து கிரியை செய்வார். கச 41.1

ஒரு சபை கர்த்தருடைய வார்த்தக்கு உண்மையற்று இருப்பதை நிரூபிக்கும்போது, அவர்கள் என்ன பதவியிலிருந்தாலும், அவர்களது அழைப்பு எந்த அளவில் உயர்ந்ததாகவோ பரிசுத்தமானதாகவோ இருந்தாலும், கர்த்தர் இனி எவ்விதத்திலும் அவர்களுடன் கிரியை செய்ய இயலாது. ஆதலால், முக்கியமான பொறுப்புகளை வகிப்பதற்கு மற்றவர்கள் தேர்ந்தேடுக்கப்படுகின்றனர். இவர்கள் தங்களது வாழ்க்கையின் எல்லா தவறான செயல்களிலிருந்து மனந்திரும்பி, தங்களைச் சுத்திகரித்துக் கொள்ளாவிட்டால், தங்களது அனைத்து எல்லைகளிலும் அவர்கள் சுத்தமும் பரிசுத்தமுமான கொள்கைகளை உருவாக்கிக்கொள்ளாவிட்டால், தேவன் அவர்களை வருத்தத்துடன் சிறுமைப்படுத்தி, தாழ்மைப்படுத்துவார். அப்படிச் செய்தும் அவர்கள் மனந்திரும்பாவிட்டால், அவர்களை இடத்திலிருந்து நீக்கவிட்டு, அவர்களை ஒரு நிந்தையாக வைப்பார். - 14 MR 102 (1903). கச 41.2