Go to full page →

இஸ்ரவேலரின் சரித்திரம் நமக்கு ஒரு எச்சரிப்பு கச 42

ஆதி காலத்து இஸ்ரவேலர்கள் சந்தித்த அதே ஆபத்துக்களை, இந்தக் கடைசி நாட்களிலே தேவனுடைய ஜனங்களும் சந்திக்கும்படியாக உட்படுத்தப்படுவார்கள். ஆதி இஸ்ரவேலர்கள் இடர்களில் விழுந்து அவிசுவசத்தினாலே இளைப்பாறுதலில் பிரவேசியாமற்போனதுபோல, தேவன் தருகின்ற எச்சரிப்புகளை ஏற்றுகொள்ளாதவர்களும், அதே போன்ற இடர்களில் விழுந்து போவார்கள். ஆதி இஸ்ரவேலர்கள், பரிசுத்த மடையாத இருதயங்களாலும், ஒப்புக்கொடுக்காத தங்களது சுயசித்தங்களாலுமே அநேக பெறுந்துன்பங்களை அனுபவித்தார்கள். அவர்களது அவிசுவாசம், தன்னம்பிக்கை, பாவத்தைக்குறித்து வருந்தாத மனநிலை, குருட்டாட்டமான மனம் மற்றும் இருதயக்கடினத்தின் விளைவாக, இஸ்ரவேல் தேசமே இறுதியாகப் புறக்கணிக்கப்பட்டது. அவர்களது சரித்திரத்தின் மூலமாக ஒரு அபாய அடையாளம் நம் முன்பாக உயர்த்தி வைக்கப்பட்டிருக்கின்றது. கச 42.1

சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்... நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிகையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம் (எபி. 3:12,14). - Letter 30, 1895 கச 42.2