Go to full page →

“நான் வருமளவும் ஈடுபடுங்கள்” கச 55

கிறிஸ்து, “நான் திரும்பி வருமளவும்… வியாபாரம் பண்ணுங்கள்.” (லூக். 19:13) என்று கூறுகிறார். வேலையில் ஈடுவது ஒரு சில வருடங்களுக்கு, நமது வாழ்க்கையின் சரித்திரம் முடிவு பெறும்வரை இருக்கலாம். அது வரையிலும் நாம் கண்டிப்பாக வேலையில் ஈடுபட வேண்டும். —RH April 21, 1896. கச 55.1

நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை அமைதியாக தியானிப்பதற்கு, நம்மை நாமே பயிற்றுவித்துக்கொள்ள வேண்டும் என்று கிறிஸ்து விரும்புகின்றார். அனைவரும் தேவனுடைய வார்த்தைகளை நாள்தோறும் ஆராய்ந்து பார்க்கவேண்டும். அதேசமயம், நம்முடைய அனுதின கடமைகளையும் நாம் புறக்கணிக்கக் கூடாது. — Letter 28, 1897. கச 55.2

கிறிஸ்து வரும்பொழுது, அவருக்காக காத்துக்கொண்டிருக்கும் அவரது மக்களில் சிலர், தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பார்கள் என்று கிறிஸ்து அறிவிக்கின்றார். சிலர் நிலத்தில் விதைத்துக்கொண்டும், வேறு சிலர் அறுவடையை அறுத்து சேர்த்துக்கொண்டும், வேறு சிலர் ஆலையில் அரைத்துக்கொண்டும் இருப்பார்கள். அவரால் தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள், வாழ்ககையின் கடமைகளையும் பொறுப்புகளையும் விட்டுவிட்டு, வீணான தியானத்தில் தங்களை ஈடுபடுத்தி, மதம் சார்ந்த காரியம் பற்றின கனவில் வாழ்ந்து கொண்டிருப்பது என்பது தேவனுடைய சித்தமல்ல. — Ms18a, 1901. கச 55.3

இயன்றவரையில் உங்களால் செய்ய முடிந்த அனைத்து நன்மையான வேலைகளையும், இந்த வாழ்க்கை முடிவதற்குள்ளாக செய்யுங்கள். — 5T 488 (1889). கச 55.4

ஒவ்வொரு நாளும் நமது வாழ்வின் கடைசி நாள் என்பதுபோன்று கச 55.5

இந்த நாள்தான் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற கடைசி நாள் என்பதுபோல, நாம் விழிப்புடனிருந்து வேலை செய்து ஜெபிக்க வேண்டும். — 5T200 (1882). கச 55.6

ஒவ்வொரு நாளும் நமது வேலையை, அது வரக்கூடிய விதத்தில் அதை அப்படியே செய்வதிலேயே நம்முடைய ஒரே பாதுகாப்பு இருக்கின்றது. அதாவது, நமக்காக மரித்து, மீண்டும் உயிரோடிருக்கின்ற, நித்தயமாக ஜீவித்திருக்கின்ற தேவனுடைய பெலத்தை ஒவ்வொரு மணித்துளியும் நம்பி சார்ந்து, நமது வேலையை செய்வதிலும் விழித்திருப்பதிலும் காத்திருப்பதிலுமே, நம்முடைய ஒரே பாதுகாப்பு இருக்கின்றது. — Letter 66, 1894. கச 55.7

ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த நாளுக்காக, உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் தேவனிடத்தில் அர்ப்பணியுங்கள். மாதங்களையோ வருடங்களையோ கணக்கிடாதீர்கள்; அவைகள் உங்களுடையவைகள் அல்ல. குறுகிய ஒரு நாளே, உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பூமியிலே இதுதான் உங்களுடைய கடைசி நாளைப்போல எண்ணி, அந்தக் குறிப்பிட்ட காலத்திலே எஜமானுக்காக வேலை செய்யுங்கள். உங்கள் திட்டங்களையெல்லாம், தேவனுடைய வழிநடத்துதல் தெரிவிப்பதுபோல நிறைவேற்றப்படவோ அல்லது விட்டிவிடப்படவோ, அவர் முன்பாக வைத்துவிடுங்கள். — 7T 44 (1902). கச 55.8