Go to full page →

மேன்மை அடையச்செய்யும் இசை கச 62

இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தர வழியாக பிரயாணம் சென்றபோது, தங்களது வழிகளை புனிதமான பாடலின் இசையால் எப்படி உற்சாகமாக்கிகொண்டார்களோ, அதுபோல இன்றைக்கு தேவனுடைய பிள்ளைகள் அவர்களின் பரதேசப் பிரயாண வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்கிக்கொள்ளுமாறு தேவன் கூறுகின்றார். தேவனுடைய வார்த்தைகளைப் பாடலாகத் திரும்பத்திரும்ப பாடும் வழிமுறை, அவைகளை நினைவில் ஆழமாகப் புதிய வைத்துக்கொள்வதற்கு மிகவும் சிறந்த விளைவை உண்டுபண்ணும் வழிமுறையாகும். மேலும் அப்படிப்பட்ட பாடல் அற்புதமான வல்லமை கொண்டதாகும் முரட்டுத்தனமான மற்றும் நாகரீகமற்ற சுபாவங்களை கீழ்ப்படுத்தும் வல்லமை அதற்கு இருக்கின்றது. சிந்தனையைத் தூண்டவும், இரக்க குணத்தை எழும்பச் செய்யவும் அதற்கு வல்லமை உண்டு. செயலில் ஒருமைப்பாட்டை மேம்படுத்தவும்; தைரியத்தை அழித்து, முற்சியை பெலவீனப்படுத்தும் மனச்சோர்வையும் கவலையையும் அகற்றவும் அதற்கு வல்லமை உண்டு. — Ed 167, 168 (1903). கச 62.3

பரலோக வாசஸ்தலங்களில் தேவனுக்குச் செய்கின்ற தொழுகையிலே, இசை ஒரு பங்கு வகிக்கின்றது. எனவே நம்முடைய துதியின் பாடல்களில் (பரலோக பாடல்குழுவின் இசையோடு) ஒத்துப்போகதக்கதாக, எந்த அளவிற்கு நெருங்கி வரமுடியுமோ அந்த அளவிற்கு நெருங்கிவருவதற்கு முயற்சிக்க வேண்டும்… ஜெபம் ஆராதனையிலே எப்படி ஒரு செயலாக உள்ளதோ, அதேபோல பாடல் பாடுவதும் ஆராதனைகளில் ஒரு பகுதியகா உள்ளது. — PP 594 (1890). கச 62.4

இசைக்கருவிகளை பயன்படுத்தவதென்பது மறுக்கப்பட வேண்டிய ஒன்று அல்ல. முற்காலங்களில் இவைகள் மத ஆராதனைகளில் பயன்படுத்தப்பட்டன. தொழுகை செய்பவர்கள் தம்புரோடும் தாளத்தோடும் தேவனை துதித்தார்கள். அதைபோலவே இசை நமது ஆராதனைகளில் அதனுடைய இடத்தைப் பெற்றிருக்க வேண்டும். — Ev 500, 501 (1898). கச 63.1