Go to full page →

பட்டணங்களில் அநேகர் சத்தியத்திற்கும் வெளிச்சத்திற்கும் ஏங்குவர் கச 86

தேசங்களிலுள்ள பட்டணங்கள்மீது கண்டிப்பான விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இருந்தபோதும் அவைகள் தேவனுடைய உச்சக்கட்ட கோபாக்கினையால் சந்திக்கப்படாது. ஏனெனில், அங்கிருக்கின்ற இன்னும் சில ஆத்துமாக்கள், எதிரியின் தந்திரங்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு, மனஸ்தாபப்ட்டு மனந்திரும்புவார்கள். — Ev 27 (1906). கச 86.2

உலகம் முழுவதையும் கவ்விக்கொண்டிருக்கின்ற ஆவிக்குரிய இருள்ஜனத்தொகை மிகுந்திருக்கின்ற மையங்களிலே கடுமையாக இருக்கின்றது. தேசங்களிலுள்ள பட்டணங்களில்தான், தவறை உணர்ந்து வருந்தாத மாபெரும் நிலையையும், மிகப்பெரிய தேவையையும் நற்செய்தி ஊழியர்கள் காண்கின்றனர். எனவே இப்படிப்பட்ட பட்டணங்களில்தான், ஆத்தும ஆதாயம் செய்பவர்களுக்கு அதிகமான சந்தர்ப்பங்கள் அளிக்கப்படுகின்றது. தேவனையும் பரலோகத்தையும்குறித்த நினைவே இல்லாத திரளான கூட்டத்துடன் இணைந்திருக்கும் அநேகர், சத்திய வெளிச்சத்திற்காகவும், சுத்தமான இருதயத்திற்காகவும் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். கவலையீனமாய் அக்கறையற்றிருப்போர் மத்தியிலும்கூட, மனித ஆத்துமாவிற்கான தேவ அன்பின் ஒரு வெளிப்பாட்டினால் கவர்ந்திழுக்கக்கூடியவர்கள் அநேகர் இருக்கின்றார்கள். — RH Nov. 17, 1910. கச 86.3