Go to full page →

பட்டணங்களைவிட்டு அனைவரும் வெளியேறமுடியாது கச 87

சாத்தியமாகும் வேளையில் கிராமப்புறத்திலே தங்கள் பிள்ளைகளுக்கு வீடுகளை அமைத்துத் தருவது என்பது பெற்றோர்களின் கடமையாகும். AH 141 (1906). கச 87.1

காலம் செல்லச்செல்ல, அதிகமதிகமாக நமது மக்கள் பட்டணங்களை விட்டு வெளியேறிச் செல்லவேண்டியதிருக்கும், நமது சகோதரரும் சகோதரிகளும், விசேஷமாக பிள்ளைகள் கொண்ட குடும்பங்களும், தங்களுக்கு முன்பாக வழி திறக்கும்போது, பட்டணங்களை விட்டுசெல்ல திட்டமிட வேண்டும் என்று வருடக்கணக்காக நமக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அப்படி வழி திறக்கும்படி அநேகர் ஊக்கமாக உழைக்க வேண்டும். அதே நேரம், அப்படி பட்டணத்தை விட்டுச்செல்வதற்குரிய வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும் வரையிலும், அங்கே தங்கியிருக்கும் நாட்களில் தங்களது செல்வாக்கின் எல்லை குறுகினதாயிருந்தாலும்கூட, தேவனுடைய ஊழியத்தை செய்துகொண்டிருப்பதில் அவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும். — 2SM 360 (1906). கச 87.2

நம்முடைய பட்டணங்கள் துன்மார்க்கத்தில் வளர்ந்துகொண்டேயிருக்கின்றன. அவைகளில் அவசியமின்றித் தங்கியிருப்பவர்கள் தங்களது ஆத்தும இரட்சிப்பு அபாயத்துக்குள்ளாகும் விதத்திலேயே அப்படி செய்கின்றனர் என்பது மிகமிகத் தெளிவாகத் தெரிகின்றது. — CL 9 (1907). கச 87.3

பெரும் பட்டணங்களும் சிறு நகரங்களும், குணக்கேட்டிலும் பாவத்திலும் மூழகித் திளைத்திருக்கின்றன. என்றாலும் ஒவ்வொரு சோதோமிலும்கூட லோத்துக்கள் இருக்கின்றனர். — 6T 136 (1900). கச 87.4