Go to full page →

ஞாயிறு ஆசரிப்புச் சட்ட ஆதரவாளர்கள பயன்படுத்தும் விவாதங்கள் கச 94

நிகழ்கின்ற சம்பவங்களுக்கு சாத்தான் தனது சொந்த வியாக்கியானங்களை அளித்து, நாட்டிலே நடக்கின்ற பேரழிவுகளெல்லாம் ஞாயிறு ஆசரிப்பை மீறுவதின் ஒரு விளைவே ஆகும். என்று, தான் விரும்புகின்றபடியே அவர்களை நினைக்கவைப்பான். செல்வாக்குள்ள இந்த மனிதர்கள், தேவனுடைய உக்கிரக் கோபத்தை ஆற்றவேண்டும் என்று எண்ணி, ஞாயிறு ஆசரிப்பை வலியுறுத்துகின்ற சட்டங்களை இயற்றுவார்கள். — 10MR 239 (1899). கச 94.7

“கிறிஸ்தவ ஓய்வுநாள்” (ஞாயிற்றுக்கிழமை) என்று அழைக்கப்படும் நாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குவதே விரைவாகப் பரவிவரும் சீர்கேட்டுக்குப் பெரும் காரணமாக உள்ளது, ஞாயிறு ஆசரிப்பை வலியுறுத்தினால் சமுதாயத்தின் ஒழுக்கநிலை பெருமளவிற்கு மேம்படும் என்ற விவாதத்தை இதே பிரிவினர் முன்வைப்பர். மெய்யான ஓய்வு நாளைப்பற்றிய உபதேசம் மிகவும் பரவலாகப் பிரசங்கிக்கப்பட்ட அதே அமெரிக்காவில் இந்த விவாதம் விசேஷ விதத்தில் வலியுறுத்தப்படுகிறது. — GC 587 (1911). கச 95.1