Go to full page →

42 - மெய்யான மேன்மை தீஇவ 514

உலகப்புகழின் உச்சத்திற்கே உயர்த்தப்பட்டு, வேதாகமத்தி னால் ‘’ராஜாதி ராஜா’‘ என்று அழைக்கப்பட்டாலும், தன்னுடைய ராஜ்யத்தின் மகிமைக்கும் தன் ஆளுகையின் மாட்சிக்கும் யேகோ வாவின் தயைதான் காரணம் என்றான் நேபுகாத்நேச்சார். எசே 26:7. அந்தப் பெரிய சிலை பற்றிய சொப்பனத்திற்குப் பிறகுதான் காரியம் அப்படியாக இருந்தது. ‘சர்வாதிகார ராஜ்யமாக பாபிலோன் விளங் கினாலும் இறுதியில் அது விழப்போகிறது; அதன் பிறகு பிற ராஜ்யங் கள் ஆட்சி செலுத்தப் போகின்றன; இறுதியில், பரலோகத்தின் தேவ னால் நிறுவப்படும் ராஜ்யமானது ஒருபோதும் அழியாததாகவும், பூலோக வல்லமைகளை எல்லாம் விஞ்சி நிற்பதாகவும் திகழப் போகிறது’ என்ற எண்ணத்தை அந்தச் சொப்பனம் உண்டாக்கிய தால், அவனுடைய மனது ஆழமாகத் தாக்கமடைந்தது. தீஇவ 514.1

தேசங்களைப்பற்றின தேவநோக்கம் குறித்து தான் கொண் டிருந்த மெய்யான கருத்தைப் பின்னர் தன் அனுபவத்தில் மறந்து போனான் நேபுகாத்நேச்சார்; ஆனாலும், பெருமைகொண்ட தன் ஆவியை தூரா சமவெளியில் திரளான ஜனங்களுக்கு முன்பாக அவன் தாழ்த்தியபோது, ‘தேவனுடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும்’ என் பதை மீண்டும் ஒருமுறை அவன் ஒத்துக்கொண்டான். சிலை வழி பாட்டிலேயே பிறந்து, வளர்ந்து, சிலை வழிபாட்டின் மக்களுக்குத் தலைவனாக இருந்தபோதிலும், நீதி நியாயம் குறித்த உள்ளறிவைப் பெற்றிருந்தான். எனவேதான், கலகம் செய்வோரைத் தண்டிக்க வும் தேவநோக்கத்தை நிறைவேற்றவும் அவனை ஒரு கருவியாகத் தேவனால் பயன்படுத்த முடிந்தது. நீண்டகாலப் பொறுமைக்கும், நெடிய பிரயாசத்திற்கும் பிறகு, திருவைக் கைப்பற்றும்படி, ‘ஜாதி களில் மகா பலவான்களாகிய நேபுகாத்நேசாருக்கு அருளப்பட் டது. எசே 28:7. ஜெயமிக்க அவனுடைய சேனைகளுக்கு எகிப்தும் இரையானது. அவன் ஒவ்வொரு தேசமாகப் பிடித்து, பாபிலோனின் ஆட்சி எல்லையை விஸ்தாரப்படுத்தியபோது, அக்காலத்தின் மா பெரும் அரசனென்ற புகழையும் சம்பாதித்துக் கொண்டே இருந்தான். தீஇவ 514.2

தாழ்மை மாத்திரமே மெய்யான மேன்மைக்கு வழிநடத்திச் செல்லும் பாதையாகும். ஆனால் அதிக ஆசையும் செருக்கும் கொண்ட, வெற்றிமிக்க ஒரு ராஜா அத்தகைய பாதையிலிருந்து விலகுமாறு தூண்டப்பட்டதில் ஆச்சரியமேதுமில்லை. தேசங்களைக் கைப்பற்ற தான் மேற்கொண்ட யுத்தங்களுக்கு இடைப்பட்ட காலங்களில், தன் தலைநகரத்தைப் பெலப்படுத்தவும் அழகுபடுத்தவும் அதிக மான நேரத்தைச் செலவழித்தான். இறுதியில் பாபிலோன் , அவ னுடைய ராஜ்யத்தின் பிரதான மகிமையாகவும், ‘பொன்னகரி’ ஆக வும், ‘பூமி முழுதும் புகழும் புகழ்ச்சியும்’ கொண்டதாகவும் அது விளங்கியது. ஒரு கட்டடக்கலைஞனாக அவனுடைய ஆர்வமும், பாபிலோனை உலக அதிசயங்களில் ஒன்றாக்குவதில் அவனுடைய குறிப்பிடத்தக்க வெற்றியும் அவனுடைய அகந்தைக்குத் தூபங் காட்டின. இறுதியில், ‘தேவ நோக்கத்தை நிறைவேற்ற தொடர்ந்து ஒரு கருவியாகப் பயன்பட்டிருக்கக்கூடிய ஞானமிக்க ஒரு ராஜா’ என்ற நிலையைக் கெடுத்துக்கொள்ளகூடிய நிலைக்கு உள்ளானான். தீஇவ 515.1

அவனுடைய அழிவுக்காக விரிக்கப்பட்டிருந்த கண்ணி பற்றி யும், அவனுடைய ஆபத்து பற்றியும் அவனை எச்சரிக்க, தேவன் இரக்கத்தால் இன்னொரு சொப்பனத்தை ராஜாவுக்குக் கொடுத் தார். இராக்காலச் சொப்பனம் ஒன்றில், பூமியின் நடுவே மிகவும் உயரமான ஒரு மரத்தையும், அதன் உச்சி வானபரியந்தம் எட்டி யிருந்ததையும், அதன் கிளைகள் பூமியின் எல்லைபரியந்தம் பரந்து கிடந்ததையும் கண்டான் நேபுகாத்நேச்சார். மலைகளிலும், குன்று களிலும் இருந்து வந்த ஆடு மாடு முதலான மிருக ஜீவன்கள் அதன் நிழலின் கீழ் தஞ்சம் புகுந்தன். வெளியில் பறவைகள் அதன் கிளை களில் கூடுகளைக் கட்டின். ‘அதின் இலைகள் நேர்த்தியும், அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண் டாயிருந்தது. சகல பிராணிகளும் அதினால் போஷிக்கப்பட்டது’. தீஇவ 515.2

மிக உயரமான அந்த மரத்தை ராஜா பார்த்துக்கொண்டிருந்த போதே, ‘காவலாளனாகிய பரிசுத்தவான் ஒருவனை’ அவன் கண் டான். அவன் அம்மரத்தை நெருங்கி, உரத்த சத்தத்தோடே, இந்த விருட்சத்தை வெட்டி, இதின் கொப்புகளைத் தறித்துப் போடுங்கள்; இதின் இலைகளை உதிர்த்து, இதின் கனிகளைச் சிதறடியுங்கள்; இதின் கீழுள்ள மிருகங்களும் இதில் கொப்புகளிலுள்ள பட்சிகளும் போய்விடட்டும். ஆனாலும், இதின் வேர்களாகிய அடிமரம் பூமி யில் இருக்கட்டும்; இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப் பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனை வதாக; மிருகங்களோடே பூமியின் பூண்டிலே அவனுக்குப் பங்கு இருக்கக்கடவது. அவனுடைய இருதயம் மனுஷ இருதயமாயிரா மல் மாறும்படி, மிருக இருதயம் அவனுக்குக் கொடுக்கப்படக் கடவது; இப்படியிருக்கிற அவன் மேல் ஏழு காலங்கள் கடந்து போகவேண்டும். உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று நரஜீவன்கள் அறியும் படிக்குக் காவலாளரின் தீர்ப்பினால் இந்தக் காரியமும் பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசா ரணையும் தீர்மானிக்கப்பட்டது’‘ என்றான். தீஇவ 516.1

இக்கட்டுக்காலத்தின் முன்னடையாளமாகக் கொடுக்கப்பட்ட அந்தச் சொப்பனத்தால், மிகவும் கலக்கமடைந்த ராஜா, அதனை ‘சாஸ்திரிகள், ஜோசியர், கல்தேயர், குறிசொல்லுகிறவர்’ ஆகியோ ரிடத்தில் சொன்னான். சொப்பனம் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்ட போதிலும், ஞானிகள் எவராலும் அதற்கு அர்த்தம் சொல்ல முடிய வில்லை . தீஇவ 516.2

’தேவனுக்குப் பயந்து அவரில் அன்புகூருகிறவர்கள் மாத்தி ரமே பரலோக ராஜ்யத்தின் மறைபொருள்களை அறிந்துகொள்ள முடியும்’ என்ற உண்மை அந்தச் சிலைவழிபாட்டுத் தேசத்தில், மீண் டும் ஒருமுறை சாட்சியாக வெளிப்பட வேண்டியிருந்தது. குழப்பத் திலிருந்த ராஜா, தன் ஊழியக்காரனும் ஒழுக்கத்திற்கும் உறுதிக்கும் ஈடு இணையற்ற ஞானத்திற்கும் பெயர் பெற்றிருந்தவனுமான தானியேலை அழைத்தனுப்பினான். தீஇவ 516.3

மன்னனுடைய அழைப்பிற்கிணங்கி, அவனுக்கு முன்பாக தானியேல் நின்றபோது, ‘’சாஸ்திரிகளின் அதிபதியாகிய பெல்தெ ஷாத்சாரே, பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிற தென்றும், எந்த மறைபொருளையும் அறிவது உனக்கு அரிதல்ல வென்றும் நான் அறிவேன்; நான் கண்ட என் சொப்பனத்தின் தரிச னங்களையும் அதின் அர்த்தத்தையும் சொல்லு” என்றான் நேபுகாத் நேச்சார். சொப்பனம் பற்றிச் சொல்லிவிட்டு, “இப்போது பெல் தெ ஷாத்சாரே, நீ இதின் அர்த்தத்தைச் சொல்லு; என் ராஜ்யத்திலுள்ள ஞானிகள் எல்லாராலும் இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக் கக்கூடாமற் போயிற்று; நீயோ இதைத் தெரிவிக்கத்தக்கவன்; பரி சுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதே’‘ என்றான் நேபுகாத்நேச்சார். தீஇவ 517.1

சொப்பனத்தின் அர்த்தம் தானியேலுக்குத் தெளிவாகத் தெரிந் தது; அதன் காரியம்தான் அவனைத் திகைக்கச் செய்தன. அவன், ‘ஒரு நாழிகை மட்டும் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினார். தானியே லின் தயக்கத்தையும் வேதனையையும் கண்டபோது, தன் ஊழியக் காரன் மேல் பரிதாபம் கொண்டான் ராஜா. எனவே, ‘’பெல் தெஷாத் சாரே, சொப்பனமும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கப்பண்ண வேண்டியதில்லை” என்றான். தீஇவ 517.2

உடனே தானியேல் , ‘’என் ஆண்டவனே, அந்தச் சொப்பனம் உம்முடைய பகைவரிடத்திலும், அதின் அர்த்தம் உம்முடைய சத் துருக்களிடத்திலும் பலிக்கக்கடவது’‘ என்று பதிலளித்தான். நேபு காத்நேச்சாரின் அகந்தை மற்றும் அராஜகத்தின் நிமித்தம் அவர்மேல் சம்பவிக்கவிருந்த நியாயத்தீர்ப்பை அவருக்கு வெளிப்படுத்தும் முக்கியக் கடமையை தேவன் தன்மேல் சூட்டியிருந்ததை உணர்ந் தான் தீர்க்கதரிசி. இராஜாவால் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் சொப்பனத்திற்கு தானியேல் அர்த்தம் சொல்லியாகவேண்டும்; அதன் பயங்கரத்தை நினைத்தபோது, அவன் பேச்சற்று, திகைத்து, தயங்கி நின்றான். இருந்தாலும், தனக்கு எத்தகைய விளைவு நேரி டினும் அவன் உண்மையைச் சொல்லியாக வேண்டியிருந்தது. தீஇவ 517.3

பிறகு, சர்வவல்லவரின் கட்டளையைத் தெரிவித்தான் தானி யேல். ‘’நீர் கண்ட விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லை பரியந்தம் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட் டினது. அதின் இலைகள் நேர்த்தியும், அதின் கனி மிகுதியுமாயி ருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின் கீழே வெளி யின் மிருகங்கள் தங்கினது, அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்தது. அது பெரியவரும் பலத்தவரு மாயிருக்கிறராஜாவாகிய நீர்தாமே; உமது மகத்துவம் பெருகிவான் பரியந்தமும், உமது கர்த்தத்துவம் பூமியின் எல்லைபரியந்தமும் எட்டியிருக்கிறது. தீஇவ 517.4

இந்த விருட்சத்தை வெட்டி, இதை அழித்துப் போடுங்கள்; ஆனாலும், இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டு மென்றும், இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளி யின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; ஏழுகாலங்கள் அவன் மேல் கடந்துபோகுமட்டும் மிருகங்களோடே அவனுடைய பங்கு இருக்கக்கடவதென்றும், வானத்திலிருந்து இறங்கிச் சொன்ன பரிசுத்த காவலாளனை ராஜாவாகிய நீர் கண் டீரே. ராஜாவே , அதின் அர்த்தமும் ராஜாவாகிய என் ஆண்டவன் பேரில் வந்த உன்னதமானவருடைய தீர்மானமும் என்னவென்றால்: மனுஷரினின்று நீர் தள்ளி விடப்படுவீர்; வெளி யின் மிருகங் களோடே சஞ்சரிப்பீர்; மாடுகளைப் போலப் புல்லை மேய்ந்து, ஆகாயத்துப் பனியிலே நனைவீர். தீஇவ 518.1

’’உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்து கொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடைய பேரில் கடந்து போகவேண்டும். ஆனாலும் விருட்சத்தின் வேர் களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்று சொல்லப்பட்டது என்னவென்றால்: நீர் பரம் அதிகாரத்தை அறிந்தபின், ராஜ்யம் உமக்கு நிலைநிற்கும்’‘ என்றான். தீஇவ 518.2

உள்ளபடியே சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லிவிட்டு, பெருமை கொண்டிருந்த ராஜாவிடம், ‘’மனந்திரும்பி தேவனிடம் திரும்புமாறும், நீதி செய்தால், வரவிருந்த ஆபத்தைத் தவிர்க்கலாம்’‘ என்றும் வலியுறுத்தினான் தானியேல். ‘’ஆகையால்ராஜாவே, நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு நீதியைச் செய்து உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு இரங்கி உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்; அப்பொழுது உம் முடைய வாழ்வு நீடித்திருக்கலாம்’‘ என்று வேண்டிக்கொண்டான் தீர்க்க தரிசி. தீஇவ 518.3

தீர்க்கதரிசியின் ஆலோசனையும் எச்சரிப்பும் சில காலத்திற்கு நேபுகாத்நேச்சாரில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன; ஆனால், தேவ கிருபையால் மாற்றம் பெறாத இருதயமானது சீக் கிரத்திலேயே பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதல்களை இழந்து போகிறது. சுய விருப்ப நாட்டமும் பேராசையும் ராஜாவின் இரு தயத்திலிருந்து அகற்றப்படாமல் இருந்தன; பின்னர் இத்தகைய குணங்கள் மீண்டும் தலைதூக்கின. கிருபையாக தனக்குச் கொடுக் கப்பட்ட போதனைக்கு மத்தியிலும், கடந்தகால அனுபவத்தின் எச் சரிப்புகளுக்கு மத்தியிலும், தனக்குப்பின் வரவிருந்த ராஜ்யங் களைக்குறித்த பொறாமையின் ஆவியால் மீண்டும் கட்டுப்படுத்தப் பட தன்னை அனுமதித்தான் நேபுகாத்நேச்சார். இதுவரையிலும், பெருமளவு நீதியோடும் இரக்கத்தோடும் காணப்பட்ட அவனுடைய ஆட்சி, கொடுமையானதாக மாறியது. இருதயத்தைக் கடினப்படுத் தின அவன், தேவன் தந்த தாலந்துகளைத் தன் சுய மகிமைக்காகப் பயன்படுத்தினான்; ஜீவனையும் வல்லமையையும் தந்ததேவனுக்கு மேலாக தன்னை உயர்த்தினான். தீஇவ 519.1

தேவனுடைய நியாயத்தீர்ப்பு பல மாதங்கள் தாமதித்தது. ஆனால், தேவ பொறுமையால், மனந்திரும்புதலுக்கு நேராக வழி நடத்தப்படுவதற்குப் பதிலாக, சொப்பனத்தின் பேரிலுள்ள தன் நம் பிக்கையை இழந்து, தன் முந்தைய திகிலான அனுபவங்களை கொஞ்சமும் மதிக்காமல், தன் அகந்தையில் திளைத்துக் கொண்டி ருந்தான். தீஇவ 519.2

தான் எச்சரிப்பைப் பெற்று ஒரு வருடத்திற்குப்பிறகு, தன் அரண்மனையில் நடந்துகொண்டிருந்தபோது, ஓர் அரசனாக தன் வல்லமை குறித்தும், ஒரு கட்டடக் கலைஞனாக தன் சாதனை குறித் தும், ‘’இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப் பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா!’‘ என்று பிரமித்தான் நேபுகாத்நேச்சார். தானி 4:30. தீஇவ 519.3

அந்த அகந்தையான பேச்சு அவனுடைய வாயிலிருந்தபோதே, தேவன் நியமித்த நியாயத்தீர்ப்பிற்கான நேரம் வந்ததைப் பரலோ கத்திலிருந்து ஒரு சத்தம் அறிவித்தது. ‘’ராஜாவாகிய நேபுகாத்நேச் சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று. மனுஷரினின்று தள்ளப் படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப் போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமானவர் மனுஷரு டைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவர் னுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்து கொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன் மேல் கடந்து போகும் என்று உனக்குச் சொல்லப் படுகிறது’‘ என்ற யேகோவாவின் கட்டளை அவனுடைய காது களில் விழுந்தது. தீஇவ 519.4

தேவனால் அவனுக்கு அருளப்பட்டிருந்த பகுத்தறிவு ஒரு கணப்பொழுதில் அவனிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது; தான் பூரண நல்லறிவு கொண்டிருந்ததாகராஜா நினைத்தான். அது வும், அவன் மேன்மை பாராட்டின் அவனுடைய ஞானமும் ஒரு கணப்பொழுதில் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஒரு சமயத்தில் பேரரச னாகத் திகழ்ந்தவன், பித்துப்பிடித்தவனானார். அவன் கரத்திலிருந்து செங்கோல் பிடுங்கப்பட்டது. எச்சரிப்பின் செய்திகளுக்குச் செவி கொடாது போன அரசன் தன் சிருஷ்டிகர் தனக்களித்திருந்த வல்ல மையை இழந்தான். மனிதரிலிருந்து புறக்கணிக்கப்பட்ட நேபுகாத் சேச்சார், ‘மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான், அவனுடைய தலைமயிர்கழுகுகளுடைய இறகுகளைப் போலவும், அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப் போலவும் வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பணியிலே நனைந்தது’. தீஇவ 520.1

ஏழு வருடங்கள் தன் குடிமக்கள் யாவரின் திகைப்புக்கும் ஆளானான் நேபுகாத்நேச்சார்; ஏழு வருடங்கள் உலகத்தார் அனை வருக்கும் முன்பாக அவன் தாழ்த்தப்பட்டான். அதன்பிறகு, அவ னுடைய புத்தி அவனுக்குத் திரும்ப வந்தது; தாழ்மையோடு பர லோகதேவனை நோக்கிப்பார்த்தான்; தான் சிட்சிக்கப்பட்டதில் தேவ கரம் இருந்ததை உணர்ந்தான். தன்னுடைய குற்றத்தையும், தன்னைக் குணப்படுத்தியதில் தேவன் காட்டிய மிகுந்த கிருபையையும் ஒத் துக்கொண்டு, மக்களிடம் அறிக்கை செய்தான். ‘’அந்த நாட்கள் சென்ற பின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத் துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; அப்பொ ழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலை முறை தலைமுறையாக நிற்கும். பூமியின் குடிகள் எல்லாம் ஒன்று மில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின் படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்து கிறார்; அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை’‘ என்றேன். தீஇவ 520.2

மேலும் ‘’அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பி வந் தது; என் ராஜ்ய பாரத்தின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பி வந்தது; என் மந்திரிமாரும் என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள்; என் ராஜ்யத்திலே நான் ஸ்திரப்படுத்தப்பட்டேன்; அதிக மகத்துவமும் எனக்குக் கிடைத் தது’‘ என்றான். தீஇவ 521.1

ஒரு சமயத்தில் அகந்தைமிக்க ராஜாவாக இருந்தவன், இப் போது தேவனுடைய தாழ்மையான பிள்ளையாக மாறினான். கொடுங்கோன்மையும் ஆணவப்போக்குமுள்ள மன்னனாக விளங் கியவன், ஞானமும் மனதுருக்கமுமுள்ள ராஜாவாக மாறினான். பர லோக தேவனை எதிர்த்துத் தூஷணம் பேசியவன், இப்போது உன் னதமானவரின் வல்லமையை ஒத்துக்கொண்டான்; தன் குடிமக் களின் சந்தோஷத்தையும் யேகோவாவின் மேலுள்ள பயத்தையும் பெருகச் செய்ய ஊக்கமாக முயன்றான். இராஜாதி ராஜாவும் கர்த் தாதி கர்த்தாவுமானவரின் கடிந்து கொள்லுதலினால், சகல மன்னர் களும் அறியவேண்டிய ஒரு பாடத்தை அவன் அறிந்துகொண்டான். ‘மெய்யான நற்குணத்தில்தான் மெய்யான மேன்மை அடங்கியி ருக்கிறது’ என்பதுதான் அந்தப் பாடம். யேகோவாவை ஜீவனுள்ள தேவனாக ஏற்றுக்கொண்ட அவன், ‘’நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்து கிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும்” என்றான். தீஇவ 521.2

உலகின் மிகப்பெரும் ராஜ்யம் தேவனுடைய புகழை வெளிப் படுத்த வேண்டுமென்ற தேவ நோக்கம் இப்போது நிறைவேறியது. தேவனுடைய கிருபையையும் தயவையும் அதிகாரத்தையும் ஏற்றுக் கொண்டு, வெளிப்படையாக அவன் கொடுத்த இந்த அறிவிப்பு தான் பரிசுத்த வரலாற்றில் அவன் வாழ்வைப் பற்றிப் பதிவுசெய்யப் பட்டுள்ள கடைசிச் செயல். தீஇவ 521.3