Go to full page →

47 - யோசுவாவும் தூதனானவரும் தீஇவ 582

ஆலயத்தைக் கட்டிவந்தவர்கள் சீரான வேகத்தில் வேலைசெய் ததால், சத்துருவின் கூட்டாளிகள் குழப்பமும் கலவரமும் அடைந் தனர். தேவமக்களுக்கு முன் அவர்களுடைய குணக்குறைகளை நிறுத்தி, அதைரியப்படுத்தி, பெலவீனப்படுத்த முயன்றான் சாத் தான். அக் கிரமத்தினிமித்தம் வெகுநாட்கள் துன்பமடைந்தோர், மீண்டும் தேவனுடைய கட்டளைகளை மீறுகிற தூண்டுதலுக்கு இணங்கியிருந்ததால், மீண்டும் பாவ அடிமைத்தனத்திற்குள் திரும்பக் கூடிய நிலை இருந்தது. தீஇவ 582.1

பூமியில் தேவனைப் பற்றிய அறிவைப் பாதுகாக்கும்படி, இஸ்ரவேலர் தெரிந்து கொள்ளப்பட்டிருந்ததால், அவர்கள் சாத்தானு டைய பகைமைக்கு எப்போதுமே ஆளாகியிருந்தனர்; அவர்களை அழித்துப்போட அவன்தீர்மானித்திருந்தான். அவர்கள் கீழ்ப்படிந்த சமயங்களில், அவர்களுக்கு எந்தத் தீமையும் செய்ய அவனால் முடியவில்லை. எனவே அவர்களைப் பாவத்திற்குள் கவர்ந்திழுக்க , தன் சகல வல்லமைகளையும் தந்திரங்களையும் அவன் உபயோகித் தான். அவர்கள் அவன் சோதனைகளில் சிக்குண்டு, தேவபிரமா ணத்தை மீறினார்கள், எதிரிகளுக்கு இரையாகும்படி தேவன் அனு மதித்தார். தீஇவ 582.2

அவர்கள் பாபிலோனுக்குச் சிறைக்கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், தேவன் அவர்களைக் கைவிடவில்லை. கடிந்துகொள்ளுதலின் செய்தியோடும் எச்சரிப்பின் செய்தியோடும் அவர் தம் தீர்க்கதரிசிகளை அவர்களிடத்திற்கு அனுப்பினார்; தங் கள் பாவத்தைக் காணும்படி, அவர்கள் கண்களை விழிக்கச் செய் தார். தேவனுக்கு முன் தங்களைத் தாழ்த்தி, மெய்மனமாற்றத்துடன் அவரிடம் திரும்பினபோது, ஊக்கமூட்டும் செய்திகளை அவர்கள் ளுக்குத் தந்தார்; சிறையிருப்பிலிருந்து அவர்களை விடுவிப்பதாக வும், தம் தயவில் மீண்டும் பங்கு பெறச் செய்வதாகவும், மீண்டும் ஒருமுறை அவர்களை அவர்கள் தேசத்தில் நிலைகொள்ளச் செய் வதாகவும் அறிவித்தார். அவர்களை மீண்டும் எருசலேமில் சேர்க் கும்பணி அப்போதுதான் ஆரம்பமாகியிருந்தது; இஸ்ரவேலரில் ஒரு கூட்டத்தார் ஏற்கனவே யூதேயாவுக்குத் திரும்பிச் சென்றிருந்தனர். தேவனுடைய நோக்கத்தைச் செயல்படுத்துவதில் அதிருப்தி உண்டு பண்ணச் சாத்தான் தீர்மானித்தான். அத்திட்டத்தை நிறைவேற்றும் படி, அவர்களை முற்றிலும் அழித்துப்போடுவதற்கு ஏதுவாக புற ஜாதியரின் தேசங்களில் அவன் கிரியை செய்தான். தீஇவ 583.1

இத்தகையை நெருக்கடியில், ‘நல்வார்த்தைகளாலும், ஆறுத லான வார்த்தைகளாலும் ‘ தேவன் தம் மக்களைப் பெலப்படுத்தி னார். சகரியா 1:13. சாத்தானுடைய கிரியைகளையும் கிறிஸ்துவின் பணியையும், தேவமக்களைக் குற்றஞ்சாட்டுகிறவனைத் தோற்கடிக் கிற மத்தியஸ்தரின் வல்லமையையும் அவர் தரிசனத்தில் காண்பித் தார். தீஇவ 583.2

’பிரதான ஆசாரியனான யோசுவா அழுக்கு வஸ்திரம் தரித்தவ னாய் ‘ ஒடுக்கப்பட்ட தம் மக்களின் சார்பாக தேவ இரக்கத்தை வேண்டி, கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான். சகரியா 3:1, 3. தேவன் தம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற அவன் வேண் டினபோது, அவனுக்கு விரோதஞ் செய்ய சாத்தான் துணிவுடன் நின்றான். தேவனுடைய தயவில் இஸ்ரவேலருக்கு ஏன் பங்குகிடை யாது என்பதற்கு, அவர்களின் மீறுதல்களை அவன் காரணங்காட்டி னான். அவர்கள் தனக்கு இரையானவர்கள் என்றும், அவர்களைத் தன்னுடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கவேண்டும் என்றும் அவன் கோரினான். தீஇவ 583.3

சாத்தானுடைய குற்றச்சாட்டுகளிலிருந்து பிரதான ஆசாரிய னால் தன்னையோ, தன் மக்களையோ பாதுகாக்க முடியவில்லை. இஸ்ரவேலர்கள் பாவமற்றவர்கள் என்று அவன் அங்குக் கோரவும் இல்லை. தான் ஜனங்களின் பிரதிநிதி என்ற முறையில் அவர்களு டைய பாவங்களின் அடையாளமாக, அழுக்கு வஸ்திரம் தரித்தவ னாய், தூதனுக்கு முன்பாக பிரதான ஆசாரியனாகிய யோசுவா நின் றான். அவர்களுடைய பாவங்களை அறிக்கையிட்டான். அவர்கள் தங்களைத் தாழ்த்தி, மனந்திரும்பினதையும், பாவத்தை மன்னிக்கும் மீட்பரின் இரக்கத்தைச் சார்ந்திருப்பதையும் சுட்டிக்காட்டினான். விசுவாசத்தோடு தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிக் கொண்டான். தீஇவ 584.1

பாவிகளின் இரட்சகரான கிறிஸ்துதாமே அங்கு தூதனாய் நின்று, ‘’கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே , எருச லேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வா ராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல் லவா?’‘ என்று சொல்லி, தம்முடைய ஜனத்தைக் குற்றஞ்சாட்டு பவனின் வாயை அடைத்தார். வச 2. வேதனையான உளையில் வெகுநாட்களாக இஸ்ரவேலர் தவித்து வந்தனர். அவர்களை அழிக்க, சாத்தானும் அவனுடைய ஆட்களும் மூட்டின தீயில், தங் கள் பாவங்களின் நிமித்தம் அவர்கள் கொஞ்சங்குறைய எரிந்து போனார்கள். ஆனால், இப்பொழுது அவர்களை அதிலிருந்து தூக்கி விட, தேவன் தம் கரத்தை நீட்டினார். தீஇவ 584.2

யோசுவாவின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டதும், ‘இவன் மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்து போடுங்கள்’ என்று கட்டளை கொடுக்கப்பட்டது. பிறகு யோசுவாவினிடத்தில், ‘’நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன்” என்றார் தூதனானவர். வச 4, 5. அவனுடைய பாவங்களும் அவனுடைய மக்களின் பாவங் களும் மன்னிக்கப்பட்டன. இஸ்ரவேலுக்குச் சிறந்த வஸ்திரம்’ தரிக்கப்பட்டது; அதாவது, கிறிஸ்துவின் நீதி தரிக்கப்பட்டது. யோசுவாவின் தலைமேல் வைக்கப்பட்ட பாகையானது, ஆசாரி யர்கள் அணியும் பாகை போன்றது. அதில், ‘கர்த்தருக்குப் பரிசுத் தம்’ என்று எழுதப் பட்டிருக்கும். எனவே, அவனுடைய முந்தைய அக்கிரமங்களுக்கு மத்தியிலும், தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில் அவருக்கு முன்பாக ஊழியஞ்செய்ய இப்போது அவன் தகுதிப் பட்டதையே அது முக்கியப்படுத்தியது. யாத் 28:36. தீஇவ 584.3

’’சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் பிராகாரங்களையும் காவல் காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக் குக் கட்டளையிடுவேன்” என்று யோசுவாவிடம் கூறினார் தூதன். சகரியா3:7. கீழ்ப்படிந்தால், ஆலயத்திலும் அதின் சகல ஆராதனை களிலும் நீதிபதியாகவும், ஆளுகிறவனாகவும் அவன் கனப்படுத் தப்பட இருந்தான்; இவ்வுலக வாழ்வில் பணிவிடைத்தூதர்மத்தியில் உலாவும் சிலாக்கியம் பெறவிருந்தான்; இறுதியில் தேவ சிங்காச னத்தைச் சுற்றிலுமிருக்கிற மகிமையானவர்கள் கூட்டத்தோடு சேர விருந்தான். தீஇவ 585.1

’இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீகேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கட வர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்’ என் றார் தேவன். இரட்சகர் தோன்றவிருந்த அந்தக் கிளையில்தான், இஸ்ரவேலின் நம்பிக்கை அடங்கியிருந்தது. வச 8. வரவிருந்த இரட்சகர்மேல் வைத்திருந்த விசுவாசத்தால் தான், யோசுவாவும் அவனுடைய மக்களும் மன்னிப்பைப் பெற்றுக்கொண்டனர்; மீண் டும் தேவதயவில் பங்குபெற்றார்கள். அவருடைய நற்பேறுகளின் நன்மையால், அவர்கள் அவருடைய வழிகளில் நடந்து, அவரு டைய கட்டளைகளைக் கைக்கொள்வதால்தான், பூமியின் தேசங் களுக்கு மத்தியில் பரலோகத்தால் தெரிந்துகொள்ளப்பட்ட கனவான் களும் அடையாளமாயிருக்கிற புருஷருமாய் அவர்கள் மாற இருந் தார்கள். தீஇவ 585.2

யோசுவாவையும் அவர் மக்களையும் சாத்தான் குற்றஞ்சாட்டி னது போல, தேவதயவையும் இரக்கத்தையும் வேண்டுகிறவர்களை அவன் எல்லாக் காலங்களிலும் குற்றஞ்சாட்டுகிறான். அவன் இர வும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர் மேல் குற்றஞ்சுமத்தும் பொருட்டு, அவர்கள்மேல் குற்றஞ்சாட்டு கிறவன்.’வெளி 12:10. பாவவல்லமையிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆட்டுக்குட்டியானவரின் புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்ட ஒவ் வோர் ஆத்துமாவிலும், மாபெரும் போராட்டம் நடந்துவருகிறது. சத்துருவை எதிர்ப்பதற்கு உறுதியாகத் தீர்மானிக்காத எவரும் தேவ னுடைய குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அன்றைய இஸ்ரவேலின் நம்பிக்கையும் பாதுகாப்பும் நீதியும் மீட்புமாக இருந்த அவர்தாமே, இன்றைய சபையின் நம்பிக்கையாகவும் இருக்கிறார். தீஇவ 585.3

தேவனைத் தேடுவோருக்கு எதிராகச் சாத்தான் எழுப்பும் குற்றச்சாட்டுகள், அவர்களுடைய பாவங்களைக்குறித்த அவன் வருத்தத்தால் உண்டாக்குபவை அல்ல. அவர்களின் குணலட்சணத் தின் குறைபாட்டைப் பார்த்து அவன் மகிழ்ச்சியே அடைகிறான்; தேவபிரமாணத்தை அவர்கள் மீறினால் மாத்திரமே, அவர்கள்மேல் தனக்கு அதிகாரம் கிடைக்குமென்பதை என்பதை அவன் அறி வான். மேலும், கிறிஸ்துவின் மேலுள்ள பகைமையே அவன் குற் றஞ்சாட்டுவதற்கு முக்கியக் காரணமாகும். இரட்சிப்புத்திட்டத்தின் மூலம், மனித குடும்பத்தின் மேல் சாத்தானுக்குள்ள பிடியை இயேசு தகர்க்கிறார்; அவன் வல்லமையிலிருந்து ஆத்துமாக்களை விடுவிக் கிறார். கிறிஸ்துவின் ஆதிக்கத்திற்கான ஆதாரங்களைக் காணும் போது, அக்கொடும் எதிரிக்கு வெறுப்பும் பகையும் ஏற்படுகிறது. இரட்சிப்பை ஏற்றுக்கொண்ட மனுபுத்திரர் அவரை விட்டுப் பிரியும் படி, வல்லமையோடும் தந்திரத்தோடும் கிரியை செய் கிறான். மனிதரை அவநம்பிக்கைக்குள் வழிநடத்தி, தேவன் மேலிருந்த நம் பிக்கையை இழக்கப் பண்ணி அவர் அன்பை விட்டுப் பிரியவும் பண்ணுகிறான். பிரமாணத்தை மீறும்படி அவர்களைத் தூண்டி விட்டு, பின்னர் அவர்களைத் தன் கைதிகளென்று கோருகிறான்; அவனிடமிருந்து அவர்களை மீட்கும் கிறிஸ்துவின் உரிமையோடு போட்டியிடுகிறான். தீஇவ 586.1

தேவனிடம் மன்னிப்பையும் கிருபையையும் வேண்டுபவர்கள் அதனைப் பெற்றுக்கொள்வார்கள் என்பது சாத்தானுக்குத் தெரியும்; ஆகவே, அவர்கள் பாவங்களை அவர்கள் முன் கொண்டுவந்து, அவர்களை அதைரியப்படுத்துகிறான். தேவனுக்குக் கீழ்ப்படிய முயல்கிறவர்களைக் குற்றஞ்சாட்டுகிற தருணத்திற்காக அவன் எப் போதும் காத்திருக்கிறான். சிறப்பும் திருப்தியுமான சேவைகளைச் செய்தாலும், அவற்றிலும் கறை இருப்பதுபோல் காட்ட முயல்கி றான். அவர்களை ஆக்கினைக்குள்ளாக்க, தந்திரமும் கொடூரமு மான எண்ணற்ற வியூகங்களை அமைக்கிறான். தீஇவ 586.2

சத்துருவின் குற்றச்சாட்டுகளைத் தன் சுய பெலத்தால் மனிதன் எதிர்கொள்ள முடியாது. தன் குற்றத்தை அறிக்கையிட்டு, கறை படிந்த வஸ்திரங்களோடு, தேவனுக்கு முன்பாக அவன் நிற்கிறான். தங்கள் ஆத்துமக் காவலை விசுவாசத்தோடும் மனந்திரும்புதலோ டும் தம்மிடம் அர்ப்பணித்துள்ள யாவர் சார்பாகவும் திறமையாக வேண்டுகிறார் நம் வழக்கறிஞரான இயேசு. அவர் அவர்களுக்கு ஆதரவாகவேண்டிக்கொள்கிறார்; கல்வாரியில் செய்யப்பட்டதைத் திறமையாக எடுத்துரைத்து, குறைகூறுகிறவனைக் தோற்கடிக்கிறார். தேவனுடைய பிரமாணத்திற்கு அவர் பரிபூரணமாகக் கீழ்ப்படிந்ததால், வானத்திலும் பூமியிலும் சகல வல்லமையும் அவருக்குக் கிடைத் திருக்கிறது; பாவமனிதன் தம்மோடு ஒப்புரவாகவும் அவன் இரக் கம் பெறவும் தம் பிதாவிடம் அவர் வேண்டுகிறார். தம் ஜனங் களைக் குற்றஞ்சாட்டுபவனிடம், ‘’கர்த்தர் உன்னைக் கடிந்துகொள் வாராக. சாத்தானே, இவர்கள் என் இரத்தத்தால் விலைக்கிரயமாக வாங்கப்பட்டு, அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா?” என்பார். விசுவாசத்தோடு தம்மைச் சார்ந்துள்ளோரிடம், ‘’பார், நான் உன் அக்கிரமத்தை உன்னி லிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன்” எனும் நிச்சயத்தைக் கொடுப்பார். சகரியா 3:4. தீஇவ 586.3

கிறிஸ்துவின் நீதி எனும் அங்கியைத் தரித்துக்கொள்ளும் யாவ ரும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாக, உண்மையுள்ளவர்களாக, நம்பத்தகுந்தவர்களாக அவர்முன் நிற்பார்கள். இரட்சகரின் கரத் திலிருந்து அவர்களைப் பறிக்கிறவல்லமை எதுவும் சாத்தானுக்குக் கிடையாது. மனந்திரும்புதலோடும் விசுவாசத்தோடும் கிறிஸ்துவின் பாதுகாப்பைப் பற்றிக்கொள்ளும் எந்த ஆத்துமாவையும் சத்துரு வின் வல்லமைக்கு உட்பட அவர் அனுமதிப்பதில்லை. ‘’அவன் என் பெலனைப் பற்றிக்கொண்டு என்னோடே ஒப்புரவாகட்டும்; அவன் என்னோடே ஒப்புரவாவான்” என்று அவர் வாக்குரைத்துள் ளார். ஏசா 27:5. “இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்” என்று யோசுவாவுக்கு அவர் தந்த வாக்குத்தத்தம் அனைவருக்குமுரிய ஒன்றாகும். சக 3:7. இவ்வுலகிலேயே, தேவதூதர்கள் அவர்களுக்கு இருபக்கங் களிலும் நடந்து செல்வார்கள்; கடைசியில், தேவனுடைய சிங்காச னத்தைச் சுற்றிலுமிருக்கும் தூதர்களோடு அவர்கள் நிற்பார்கள். தீஇவ 587.1

யோசுவா மற்றும் கர்த்தருடைய தூதனானவரைப்பற்றின சகரி யாவின் தரிசனமானது, இறுதிப் பாவநிவாரண நாளின் முடிவுக் கட்டத்தில், தேவமக்களுக்கு ஏற்படப்போகும் அனுபவத்தைவிசே ஷமாக சுட்டிக்காட்டுகிறது. அப்போது மீதமான சபை மிகுந்த உபத் திரவத்திற்குள்ளும் சோதனைக்குள்ளும் கொண்டுவரப்படும். தேவ னுடைய கட்டளைகளையும் இயேசுவின் விசுவாசத்தையும் காத்துக் கொள்கிறவர்கள் வலுசர்ப்பத்தின் கோபத்திற்கும் அவனுடைய சேனைகளின் கோபத்திற்கும் ஆளாவார்கள். உலகத்தாரைத் தன் னுடைய குடிமக்களென்று சாத்தான் எண்ணுகிறான்; பெயர்க்கிறிஸ் தவர்கள் பலர் மேல் அவனுக்கு ஆளுகையும் இருக்கிறது. ஆனால், அவனுடைய ஆதிக்கத்தை எதிர்க்கும் சிறு கூட்டத்தார் இங்குண்டு. அவர்களைப் பூமியிலிருந்து அகற்றிவிட்டால், அவனுக்கு முழு மையான வெற்றி கிடைத்துவிடும். இஸ்ரவேலை அழிக்குமாறு புற தேசத்தாரை அவன் தூண்டிவிட்டது போல, வெகு சீக்கிரத்தில் தேவ மக்களை அழிக்குமாறு பூமியின் துன்மார்க்க வல்லமைகளை அவன் தூண்டிவிடுவான். தேவபிரமாணத்தை மீறும் விதத்தில், மனித கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுமாறு மனிதரைக் கட்டாயப் படுத்து வான். தீஇவ 587.2

தேவனுக்கு உண்மையாய் இருப்பவர்களைப் பயமுறுத்தி, புறக்கணித்து, தடை செய்வார்கள். அவர்கள் மரணபரியந்தம் ‘பெற்றோராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகி தராலும் காட்டிக்கொடுக்கப்படுவார்கள்.’ லூக் 21:16. தேவ இரக் கமே அவர்களின் ஒரே நம்பிக்கை. ஜெபமே அவர்களின் ஒரே பாதுகாப்பு. தூதனானவருக்கு முன்பாக யோசுவாவேண்டிக்கொண் டதுபோல, மீதமான சபையும் நொறுங்குண்ட இருதயத்தோடும், அசையா விசுவாசத்தோடும், தங்கள் நீதிபரரான இயேசுவின் மூலம் மன்னிப்பிற்காகவும் விடுதலைக்காகவும் வேண்டிக்கொள்ளும். அவர்கள் தங்கள் வாழ்வின் பாவநிலையை முற்றிலும் உணர்ந்திருப் பார்கள். தங்கள் பெலவீனத்தையும் தகுதியின்மையையும் கண்டு, உடனே உடைந்துபோகவும் ஆயத்தமாயிருப்பார்கள். தீஇவ 588.1

யோசுவாவுக்கு விரோதஞ் செய்ய சோதனைக்காரன் பக்கத் தில் நின்றது போல, அவர்களைக் குற்றஞ்சாட்டவும் பக்கத்திலேயே நிற்கிறான். அவர்களின் அழுக்கான கந்தைகளையும், குணக்குறை பாடுகளையும் சுட்டிக்காட்டுகிறான். தங்கள் மீட்பருக்கு அவமதிப் பைக் கொண்டுவந்த அவர்கள் பெலவீனத்தையும், மதியீனத்தையும் நன்றிகெட்ட தன்மையையும், கிறிஸ்துவைப்போல் அல்லாத தன் மையையும் அவர்கள் முன்வைக்கிறான். தங்கள் நிலைமை நம்பிக் கையற்றதென்றும், தங்களை அசுத்தப்படுத்தின கறை கழுவப்பட முடியாததென்றும் அவர்களைப் பயமுறுத்த, பெருமுயற்சி எடுத்துக் கொள்கிறான். தன் சோதனைகளில் வீழ்ந்து, தேவன்மேலுள்ள மெய்ப்பற்றிலிருந்து அவர்களை விலக்க எண்ணி, அதன்மூலம் அவர்களுடைய விசுவாசத்தை அழிக்கப்பார்க்கிறான். தீஇவ 588.2

தன் தூண்டுதலால் தேவமக்கள் எத்தகைய பாவங்களைச் செய் தார்கள் என்பது சாத்தானுக்கு மிக நன்றாகத் தெரியும். தங்கள் பாவங் களால் தெய்வீக பாதுகாப்பை அவர்கள் இழந்ததாகச் சொல்லி, அவர்களுக்கு எதிராக தன் குற்றச்சாட்டுகளை வலியுறுத்துகிறான்; அவர்களை அழிக்க தனக்கு உரிமையிருப்பதாகக் கோருகிறான். எனவே, தன்னைப்போல் அவர்களும் தேவதயவுக்கு அப்பாற் பட்டவர்கள் என்று தேவனிடம் தீர்ப்பு வேண்டுகிறான். ‘பரலோகத் தில் இவர்களா என் இடத்தையும், என் தூதர்களின் இடத்தையும் நிரப்பப் போகிறார்கள்? தேவபிரமாணத்தைக் கைக்கொள்வதாகச் சொன்னாலும், அதன் நெறிகளின்படி அவர்கள் நடந்தார்களா? தேவனை நேசிப்பதைக் காட்டிலும் சுயத்தை அதிகமாக நேசிக்க வில்லையா? அவர் சேவைக்கு மேலாக தங்கள் சுயநலன்களை அவர்கள் முக்கியப்படுத்தவில்லையா? இவ்வுலகக்காரியங்களை அவர்கள் நேசிக்கவில்லையா? அவர்கள் வாழ்வில் காணப்படும் பாவங்களைப் பாரும். அவர்களின் சுயநலத்தையும், தீய எண்ணத் தையும், ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள வெறுப்பையும் பாரும். தேவன் தம் பிரசன்னத்திலிருந்து என்னையும் என் தூதர்களையும் தள்ளி விட்டிருக்க, அதே பாவங்களின் நிமித்தம் குற்றவாளிகளாய் நிற்போருக்கு அவர் பலனளிப்பதென்ன? ஆண்டவரே, நீர் செய் வது நீதியாகாது. அவர்களுக்கு எதிராகத் தண்டனை வழங்குவதே நீதி’‘ என்கிறான். தீஇவ 589.1

ஆனால், கிறிஸ்துவின் அடியார்கள் பாவம் செய்தாலும், சாத் தானின் வல்லமைக்குக் கட்டுப்பட அவர்கள் தங்களை ஒப்புக் கொடுக்கவில்லை. அவர்கள் தங்கள் பாவங்களைவிட்டு மனந் திரும்பி, தாழ்மையோடு மனம் நொறுங்கிதேவனைத் தேடினார்கள்; தெய்வீக நீதிபரர் அவர்களுக்காக வேண்டிக்கொண்டார். அவர் களுடைய நன்றிகெட்ட செயல்களால் பழிச்சொல்லுக்கு ஆளாகி யிருக்கிற அவர், அவர்களுடைய பாவத்தையும் மனந்திரும்புத லையும் அறிந்தவராய், ‘’கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக. சாத்தானே, இந்த ஆத்துமாக்களுக்காக நான் என் ஜீவனைக் கொடுத் தேன் . என் உள்ளங்கையில் அவர்களை வரைந்திருக்கிறேன். அவர் கள் குணக்குறைபாடுள்ளவர்களாக இருக்கலாம்; தங்கள் ஓட்டத் தில் அவர்கள் தோற்றிருக்கலாம். ஆனால், அவர்கள் மனந்திரும் பினவர்கள்; நான் அவர்களை மன்னித்து, ஏற்றுக்கொண்டேன்’‘ என்று சொல்லுவார். தீஇவ 589.2

சாத்தானின் தாக்குதல்கள் பெலம் வாய்ந்தவை, அவனுடைய வஞ்சகங்கள் தந்திரமானவை. ஆனால், தேவனுடைய கண்கள் அவருடைய ஜனங்கள் மேல் இருக்கின்றன. அவர்களின் வேதனை பெரிதுதான்; உலையின் அக்கினி அவர்களைப் பட்சிப்பது போலத் தோன்றம். ஆனால், அக்கினியில் சோதிக்கப்பட்ட பொன்னாக அவர்களை விளங்கப்பண்ணுவார் இயேசு. அவர்கள் மூலம் கிறிஸ்து வின் சாயல் பூரணமாக வெளிப்படும்படி, அவர்களின் உலகப்பற்றை அவர் அகற்றிப்போடுவார். தீஇவ 590.1

தம் சபைக்கு ஏற்படுகிற ஆபத்துக்களையும், அதன் சத்துருக் களால் அதற்கு ஏற்படும் பாதிப்புகளையும் தேவன் காண மறந்தவர் போலவும் கண்டுகொள்ளாதவர்போலவும், சில சமயங்களில் தெரி யலாம். ஆனால் தேவன் மறக்கவில்லை. தம்முடைய சபையைப் போலதேவனுடைய இருதயத்திற்கு மிகவும் பிரியமானது இவ்வுல கில் வேறேதும் இல்லை. உலகக் கொள்கைகள் அதன் சாதனையைக் கெடுத்துப்போடுவது தேவசித்தமல்ல. சாத்தானின் சோதனைகள் ளால் மேற்கொள்ளும்படி, அவர்தம் மக்களை விட்டுவிடவில்லை. தம்மைத் திரித்துக் காட்டுவோரை அவர் தண்டிப்பார். ஆனால் மெய்யாக மனம்மாறும் யாவருக்கும் கிருபைகாட்டுவார். கிறிஸ்த வக் குணவளர்ச்சியில் தங்களைப் பெலப்படுத்தும்படி, தம்மை நோக்கிக் கூப்பிடுவோருக்கு அவர் சகல உதவிகளையும் செய்வார். தீஇவ 590.2

முடிவுகாலத்தில் தேசத்தில் செய்யப்படும் அருவருப்புகளுக் காகதேவமக்கள் பெருமூச்சுவிட்டு, அழுவார்கள். பிரமாணத்தைத் துன்மார்க்கர் தங்கள் காலுக்கடியில் போட்டு மிதிப்பதால் ஏற்படு கிற ஆபத்தைக்குறித்து கண்ணீரோடு அவர்களுக்கு எச்சரிப்பார்கள்; சொல்லமுடியாவேதனையோடு, பாவத்திற்கு வருந்தினவர்களாய், தேவனுக்கு முன்பாகத்தங்களைத் தாழ்த்துவார்கள். அவர்களுடைய வேதனையைத் துன்மார்க்கர் ஏளனஞ் செய்து, அவர்களின் பரிசுத்த மான வேண்டுதல்களைப் பரிகசிப்பார்கள். ஆனால், பாவத்தின் விளைவால் இழந்து போன நற்குணத்தையும் பெலத்தையும் தேவ மக்கள் மீண்டும் பெறுவதற்கு, அவர்களின் வியாகுலமும் தாழ்மை யும் தெளிவான ஆதாரங்களாய் இருக்கும். கிறிஸ்துவிடம் நெருங் கிச் சேர்வதாலும், அவருடைய பூரண பரிசுத்தத்தில் தங்கள் கண் களை நிலைத்திருக்கச் செய்வதாலுமே பாவத்தின் கொடூரத்தன் மையை அவர்கள் பகுத்தறிகிறார்கள். சாந்தமும் மனத்தாழ்மையுமே தீஇவ 590.3

வெற்றிக்கும் ஜெயத்திற்குமான நிபந்தனைகள். சிலுவையடியில் பணிந்து கொள்வோருக்கு ஒரு மகிமையின் கிரீடம் காத்திருக்கிறது. தீஇவ 590.4

தமக்கு உண்மையுள்ளவர்களையும் ஜெபவீரர்கயுைம் தேவன் பாதுகாத்தார்; இப்பொழுதும் பாதுகாக்கிறார்கள். தேவன் தங்களை எவ்வளவு பத்திரமாகப் பாதுகாத்திருக்கிறார் என்பதை அவர்கள் கூட அறியாதிருக்கலாம். சாத்தானால் தூண்டப்படுகிற இவ்வுலக அதிபதிகள், அவர்களை அழிக்க முயல்கிறார்கள். தோத்தானில் எலிசாவின் வேலைக்காரனுடைய கண்கள் திறக்கப்பட்டதுபோல, தேவ பிள்ளைகளின் கண்கள் திறக்கப்படுமானால், தங்களைச் சுற் றிலும் தேவதூதர்கள் நின்று, அந்தகாரச் சேனைகளைத் தடுத்து நிறுத்தியுள்ளதை அவர்கள் காண முடியும். தீஇவ 591.1

இருதயம் பரிசுத்தமாகவேண்டுமென்று ஆத்தும் வேதனை யோடு தேவமக்கள் வேண்டிக்கொள்ளும்போது, ‘அழுக்கு வஸ்தி ரங்களைக் களைந்து போடுங்கள்’ எனும் கட்டளை பிறக்கும். ‘பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன்’ என்று ஊக்கம் தரும் வார்த் தைகள் சொல்லப்படும். சகரியா 3:4. தேவபிள்ளைகளுக்கு சோத னையும் பரீட்சையும் உண்டு; ஆனாலும், உண்மையாயிருப்பவர் களுக்குகிறிஸ்துவின் நீதி எனும் மாசற்றவஸ்திரம்தரிப்பிக்கப்படும். உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட மீதமான கூட்டத்தார் உலகச் சீர் கேடுகளால் இனி ஒருபோதும் கறைபடாதபடி, மகிமையான வஸ் திரம் அவர்களுக்குத்தரிப்பிக்கப்படும். சகல காலங்களிலுமுள்ள பரிசுத்தவான்களோடு அவர்கள் பெயர்களும் ஆட்டுக்குட்டியான வரின் ஜீவ புத்தகத்தில் பதிவுசெய்யப்படும். வஞ்சகனின் மாயங் களுக்கு அவர்கள் எதிர்த்து நிற்பார்கள்; வலுசர்ப்பத்தின் உறுமலைக் கேட்டு, தங்கள் மெய்ப்பற்றை அவர்கள் விட்டுவிடமாட்டார்கள். இப்பொழுது சோதனைக்காரனின் வஞ்சகங்களிலிருந்து அவர்கள் நித்தியமாகப் பாதுகாக்கப்படுவார்கள். பாவத்தைத் தோற்றுவித்த வனிடமே அவர்களுடைய பாவங்கள் திரும்பச் செல்லும். ‘சுத்த மான பாகை’ அவர்களுடைய தலைகளின் மேல் வைக்கப்படும். தீஇவ 591.2

சாத்தான் தன் குற்றச்சாட்டுகளை வலியுறுத்திக் கொண்டிருக் கும் வேளையில், கண்ணுக்குப் புலப்படாத பரிசுத்ததூதர்கள், அங் குமிங்கும் சென்று உண்மையுள்ளவர்கள்மேல் ஜீவதேவனின் முத் திரையை இடுவார்கள். பிதாவின் நாமம் இவர்கள் நெற்றிகளில் தரிக்கப்படும். ஆட்டுக்குட்டியானவரோடு சீனாய்மலைமேல் இவர்கள் நிற்பார்கள். சிங்காசனத்திற்கு முன் அவர்கள் புதுப்பாட் டைப் பாடினார்கள். பூமியிலிருந்து மீட்கப்பட்ட இலட்சத்து நாற் பத்து நாலாயிரம் பேரைத்தவிர வேறு ஒருவரும் அந்தப் பாட்டைக் கற்றுக் கொள்ள முடியாதிருக்கும். ‘ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற் பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை ; இவர்கள் தேவனுடைய சிங்காசனத் திற்கு முன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள். வெளி 14:4, 5. தீஇவ 591.3

’’பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ, கிளை என்னப் பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்’ என்று தூத னானவர் சொன்ன வார்த்தைகள், அப்பொழுதுதான் பூரண நிறை வேறுதலைப் பெறும். சகரியா 3:8. கிறிஸ்துவே மீட்பராகவும், தம் மக்களை விடுவிப்பவராகவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். பூலோக யாத்திரையில் அவர்களுக்கு ஏற்பட்ட கண்ணீரும் தாழ்ச்சி யும், தேவனுக்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பா கவும் சந்தோஷமும் கனமுமாக மாறும். மெய்யாகவே அந்த மீத மானவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்களாக இருப்பார்கள். ‘இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக் குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும். சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருந்து ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவனெ வனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான்’. ஏசாயா 4:2,4. தீஇவ 592.1