Go to full page →

தாக்கம் COLTam 341

கிறிஸ்துவின் வாழ்க்கை எல்லையின்றி, அதிகதிகமாகப் பரவிச்செல்கின்ற தாக்க முடையதாக இருந்தது; தேவனோடும் மனிதக்குடும்பத்தோடும் அவரை இணைக்கிற தாக்கமாக அது காணப்பட்டது. மனிதன் தனக்கென வாழைதபடி செய்கிற ஒரு தாக்கத்தை கிறிஸ்துவின் மூலம் மனிதனுக்கு தேவன் அருளியிருந்தார். தேவனுடைய முழுக்குடும்பத்தின் ஒரு பகுதியான, நம் சகமனிதர்களுக்கு உறவினர்களாகவும், பரபரஸ்பரம் கடமைப்பட்டவர்களாகவும் நாம் இருக்கிறோம். ச கமனிதர்களைச் சாராமல் ஒருவனும் வாழமுடியாது; ஏனெனில், ஒவ்வொருவரின் நல்வாழ்வும் மற்றவர்களைப் பாதிக்கிறது. பிறர் நலன் பற்றி சிந்திப்பது அவசியமென்றும், அவர்களுடைய சந்தோஷத்திற்குப் பாடுபடவேண்டுமென்றும் ஒவ்வொரு மனிதனும் உணர தேவன் விரும்புகிறார்.... COLTam 341.1

ஒவ்வொரு ஆத்துமாவைச் சுற்றிலும் ஒரு சூழல் நிலவுகிறது; ஜீவனைக் கொடுக்கும் வல்லமையுள்ள விசுவாசத்தாலும், தைரியத்தாலும், நம்பிக்கையாலும், அன்பின் நறுமணத்தாலும் அந்தச் சூழலை நிறைக்கலாம். அல்லது இருளச்செய்யும் அதிருப் தியாலும், சுயநலத்தாலும் அல்லது பேணிவளர்க்கப்பட்ட பாவத்தின் சாவுக்கேதுவான கறையோடும் அதை திகிலாலும் இக்கட்டாலும் நிறைக்கலாம். நம்மைச் சுற்றிலும் காணப்படுகிற சூழலானது நம்மோடு தொடர்பு கொள்கிற ஒவ்வொருவரிலும் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ பாதிப்பை ஏற்படுத்துகிறது. COLTam 341.2

இந்தப் பொறுப்பை நாம் உதறிவிட்டுச் செல்லமுடியாது. நமது வார்த்தைகளும், செயல்களும், உடையும், பாவனைகளும், ஏன் முகபாவனைகளும் கூட தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. COLTam 341.3

இவ்வாறு நாம் உண்டாக்குகிற தாக்கமானது நன்மைக்கோ தீமைக்கோ விளைவுகளை உண்டாக்குகின்றன; அது எந்த அளவுக்கு இருக்குமென்பதை யாரும் கணக்கிட முடியாது. இத்தகைய தாக்கம் ஒவ்வொன்றும் விதையாக விதைக்கப்பட்டு, அதற்கேற்ற விளைவை ஏற்படுத்துகிறது. மனித நிகழ்வுகள் எனும் நீண்ட சங்கிலியில் அது ஒரு கண்ணியாக இருக்கிறது. அது எவ்வளவு தூரம் பிணைக்கப்பட்டிருக்குமெனச் சொல்ல முடியாது. மற்றவர்களில் நல்ல நியதிகள் உருவாகும் படி நம் முன்மாதிரியால் நாம் உதவினால், நன்மைக்கேதுவான ஆற்றலை அவர்களுக்குக் கொடுக்கிறோம். அவர்களும் தங்கள் பங்கிற்கு அதே தாக்கத்தை மற்றவர்களில் உண்டாக்குவார்கள்; அந்த மற்றவர்கள் இன்னும் பலரில் அதை உண்டாக்குவார்கள். இவ்வாறு நம்மை அறியாம லேயே நாம் ஏற்படுத்தும் தாக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் ஆசீர் வதிக்கப்படலாம். COLTam 341.4

குளத்திற்குள் ஒரு கூழாங்கல்லை எறிந்தால், ஓர் அலை உருவாகி தொடர் அலைகளாக மாறுகிறது; தொடர் அலைகளின் வட்டம் பெரிதாகி, கரையை வந்து எட்டுகிறது. அவ்வாறுதான் நாம் ஏற்படுத்துகிற தாக்கமும். நம்முடைய அறிவையும் அல்லது கட்டுப்பாட்டையும் மீறி, மற்றவர்களில் ஆசீர்வாதமான அல்லது சாபமான தாக்கமாக முடிகிறது. COLTam 342.1

குணம் சக்தி வாய்ந்தது. உண்மையான, சுயநலமற்ற, தேவபக்தியுள்ள வாழ்க்கையின் ஆரவாரமற்ற சாட்சியானது எதிர்பேசமுடியாத தாக்கத்தைப் பெற்றுள்ளது. கிறிஸ்துவின் குணத்தை நமது வாழ்க்கையில் வெளிப்படுத்தும்போது, ஆத்தும் இரட்சிப்பின் பணியில் அவரோடு ஒத்துழைக்கிறோம். அவரது குணத்தை நமது வாழ்க்கையில் வெளிப்படுத்தும்போது மட்டுமே அவரோடு ஒத்துழைக்க முடியும். நமது தாக்கம் எவ்வளவு அதிக மாகப் பரவியிருக்கிறதோ, அவ்வளவுக்கு அதிகமாக நாம் நன்மைகளைச் செய்யலாம். தேவனைச் சேவிப்பதாகச் சொல்கிற வர்கள் கிறிஸ்துவைப்போல கற்பனைகளின் நியதிகளை தங்கள் அனுதினவாழ்வில் கடைபிடிக்கும் போதும், அவர்கள் தங்களைப் போல பிறரையும் எல்லாவற்றிற்கும் மேலாக தேவனையும் நேசி க்கும் போதும் தான், உலகத்தையே அசைக்கும் வல்லமையை சபை பெற்றிருக்கும். COLTam 342.2

செல்வாக்கானது தீமைக்கான ஒருவல்லமையாகவும் விளங்க முடியுமென்பதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. ஒருவர் தன் சொந்த ஆத்துமாவுக்குத் தீங்கிழைப்பது மோசமென்றால், பிற ஆத்துமாக்களுக்கு தீங்கிழைப்பது அதைவிட மோசமானது. நமது செல்வாக்கானது மரணத்திற்கேதுவான மரணவாசனையாக இருக்கிறதென்பதை நினைக்கவே பயங்கரமாக இருந்தாலும், இது சாத்தியமே. கிறிஸ்துவுக்காகச் சேர்ப்பதாகச் சொல்கிற பலர் அவரிடமிருந்து சிதறடிருக்கிறார்கள். இதனால் தான் சபை பெலவீனமாகக் காணப்படுகிறது. அநேகர் தங்கள் இஷ்டத்திற்கு பிறரை விமர்சித்தும் குற்றஞ்சாட்டியும் வருகிறார்கள். சந்தேகத்தையும், பொறாமையையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தும் போது, சாத்தானின் கைக்கருவிகளாகி விடுகிறார்கள். தாங்கள் செய்வது இன்னதென்பதை அவர்கள் உணர்வதற்கு முன்னரே, அவர்கள் மூலமாக சத்துரு தன் நோக்கத்தை நிறைவேற்றியிருப்பான். தீயதாக்கம் ஏற்பட்டிருக் கும், சந்தேக நிழல் படர்ந்திருக்கும், சாத்தான் எய்த அம்புகள் இலக்கை சரியாகத் தாக்கியிருக்கும். ஒருவேளை கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய நபர்களின் மனதில் அவநம்பிக் கையும் அவிசுவாசமும், கிறிஸ்தவ மார்க்கத்தின் மேல் நம்பிக்கை யிழப்பும் ஆழமாகப்பதிந்திருக்கும். இந்தச் சமயத்தில், தாங்கள் சந்தேகங்கொள்ளத் தூண்டிய நபர்கள் கடிந்துகொள்ளுதலுக்கும் மன்றாட்டுக்கும் செவிகொடுக்காத அறவிற்குக் கடினப்பட்டுப் போனதை சாத்தானின் ஊழியர்கள் மனநிறைவோடு பார்ப்பார்கள். அந்த ஆத்துமாக்களைவிட தாங்கள் நல்லொழுக்கவான்கள், நீதிமான்களென இவர்கள் திருப்தியடைவார்கள். வருத்தகரமான இந்தக் குணச்சீர்கேடுகளுக்கு தங்கள் கட்டுக்கடங்காத நாவுகளும் கலகக்குணமுள்ள இருதயங்களும் தான் காரண மென்பதை இவர்கள் உணர்வதில்லை. ஆனால் விழுந்து போனவர்கள், இவர்களுடைய செல்வாக்கினால் பாவச் சோதனைகளுக்கு ஆளானவர்கள்தாம். COLTam 342.3

எனவே கிறிஸ்தவர்களெனச் சொல்லிக்கொள்வோரின் அற்பத்தனமான பேச்சும், சுயநலமாட்டமும், அலட்சியமும்தான் ஜீவபாதையிலிருந்து அநேக ஆத்துமாக்களை வழிவிலக்கிவிடு கின்றன. தங்களுடைய செல்வாக்கின் விளைவுகளை தேவனுடைய நியாயத்தீர்ப்பின் நாளில் காணும் போது அநேகர் நிச்சயம் பயந்து நடுங்குவார்கள். COLTam 343.1

தேவனுடைய கிருபையால் மட்டுமே இந்த அருட்கொடையை நாம் சரியாகப் பயன்படுத்தமுடியும். பிறர்மேல் நன்மைக்கேதுவான செல்வாக்கை உருவாக்க நம்மிலே ஒன்றும் இல்லை. நம்முடைய உதவியற்ற நிலையையும், தெய்வீக வல்லமை நமக்குத் தேவைப்படுவதையும் நாம் உணர்ந்தால், நம்மேல் நாம் நம்பிக்கை வைக்க மாட்டோம். ஒரு நாளில், ஒரு மணிநேரத்தில், ஒரு கணப்பொழுதில் என்னென்ன விளைவுகள் ஏற்படுமென்பது நமக்குத் தெரியாது; எனவே நம் வழிகளை நம் பரலோகப் பிதாவிடம் ஒப்புக்கொடுக்காமல் அந்தந்த நாளை நாம் துவங்கக் கூடாது. நம்மைக் கண்காணிக்க அவர் தம் தூதர்களை நியமித் துள்ளார். அவர்களுடைய பாதுகாவலுக்கு நம்மை ஒப்புக் கொடுத்தால், ஆபத்து நேரிடும் சமயங்களில் அவர்கள் நம் வலதுபாரிசத்தில் இருப்பார்கள்; நாம் பேசவேண்டிய வார்த்தைகளைக் கொடுப்பார்கள்; நம் செயல்களைக் கட்டுப்படுத்துவார்கள். இவ்வாறு, நம்மை அறியாமலேயே நாம் அமைதியாக ஏற்படுத்தும் தாக்கம், கிறிஸ்துவண்டைக்கும் பரலோகத்திற்கும் மக்களை இழுப்பதில் மகத்தான வல்லமையோடு விளங்கும். COLTam 343.2