Go to full page →

பொக்கிஷத்தைப் புறக்கணிப்பதின் விளைவுகள் COLTam 105

தேவனைச் சாராமல் அற்புதமான அறிவைப் பெற முடியு மென்று சிந்திக்கவைக்க மனிதர்களுடைய சிந்தைகளில் சாத்தான் கிரியை செய்கிறான். வஞ்சகமான காரணத்தைக் கூறியே ஆதாமையும் ஏவாளையும் தேவவார்த்தையைச் சந்தேகிக்கவைத்தான்; அதற்குப்பதிலாக அவர்கள் கீழ்ப்படியாமல் போவதற்கான ஒரு வஞ்சகக்கருத்தைச் சொன்னான். ஏதேனில் வெற்றிபெற்ற இதே வஞ்சகக்கருத்து இன்றும் முன் வைக்கப்படுகிறது. பாடம் நடத்துகிற ஆசிரியர்கள் சமய நம்பிக்கையற்ற ஆசிரியர்களின் கருத்துகளையும் கலந்து சொல்வதால், தேவனை நம்பாமல் செய்கிற, அவருடைய பிரமாணங்களை மீறச்செய்கிற சிந்தைகளை வாலிபர்களுடைய மனதில் நட்டுகிறார்கள். தாங்கள் செய்வது இன்னதென்று அவர்கள் அறிவதில்லை. அதால் உண்டாகக்கூடிய விளைவையும் அவர்கள் அறிவதில்லை. COLTam 105.1

ஒரு மாணவன் இன்று பள்ளிப்படிப்புகளையும் கல்லூரிப் படிப்புகளையும் முடிக்கலாம். அறிவைப் பெறுவதற்காக தன் ஆற்றல்களையெல்லாம் செலவிடலாம். ஆனால் அவன், தேவனைக் குறித்த அறிவைப் பெற்றிராவிட்டால், தன் ஜீவி யத்தைக் கட்டுப்படுத்துகிற பிரமாணங்களுக்குக் கீழ்ப்படியா விட்டால், தன்னையே அழித்துக்கொள்வான். தவறான பழக்கங்களால், சுயமதிப்பீட்டு ஆற்றலை இழக்கிறான். சுயக்கட்டுப்பாட்டையும் இழக்கிறான். தன்னைப் பற்றிய விஷயங்களை அவனால் சரியாகப் பகுத்தறிய முடியாது. தன் மனதையும் சரீரத்தையும் பகுத்தறிவின்றி, அஜாக்கிரதை யாகக் கையாளுகிறான். தவறான பழக்கங்களால் தன்னையே நாசமாக்குகிறான். அவனுக்கு சந்தோஷம் கிடைக்காது; ஏனென்றால், அவனுடைய சமாதானத்தை அழிக்கிற பழக்க வழக்கங்களைக் கட்டுப்படுத்துகிற நல்ல, ஆரோக்கியமான நியதிகளை மேம்படுத்த தவறுகிறான். அவன் தன்னையே அழிப்பதால், பல ஆண்டுகள் கடினமாகப் படித்தும் பயனில்லை . அவன் தன்னுடைய சரீர - மன திறன்களை தவறாகப் பயன்படுத்தியதால், அவனுடைய சரீரமாகிய ஆலயம் பாழடைகிறது. இவ்வுலக வாழ்க்கையையும் அழிக் கிறான், இனிவரும் வாழ்க்கையையும் இழக்கிறான். உலக அறிவைப் பெற்றால், பொக்கிஷம் கிடைத்து விடுமென நினைத்தான்; ஆனால், தன் பரிசுத்த வேதாகமத்தைப் புறக் கணித்ததின் நிமித்தமாக எல்லாவற்றையும் விட மேலான ஒரு பொக்கிஷத்தைப் பலிகொடுத்துவிட்டான். COLTam 105.2