Go to full page →

10 - வலை COLTam 120

“பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகல விதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயி ருக்கிறது. அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்து போடுவார்கள். இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். ” மத்தேயு 13:47-50. COLTam 120.1

வலையை விரிப்பது சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு ஒப்பா யிருக்கிறது. இதனால் நல்லவரும் கெட்டவரும் சபையில் சேர்க்கப்படுகிறார். சுவிசேஷ ஊழியப்பணி முடிந்ததும், பிரிக்கிற வேலை நியாயத்தீர்ப்பின் நாளில் முடிவடையும். சபையில்கள்ளச்சகோதரர்கள் இருப்பது, சத்தியத்தின் வழி குறித்து மக்கள் தீமையாகப் பேசச்செய்யுமென்பதை கிறிஸ்து கண்டார். கிறிஸ் தவர்களெனச் சொல்லியும் பாவத்தில் வாழ் கிறவர்களினிமித்தம் சுவி சேத்தை உலகம் நிந்திக்கும். கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்த அநேகர் அவருடைய ஆவியால் கட்டுப்படாததைக் காணும் போது, கிறிஸ்தவர்களைக் கூட அது தடுமாறச்செய்யும். இத்தகைய பாவிகள் சபையில் இருப்பதால், தேவன் அவர்களுடைய பாவங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டாரென மனிதர்கள் நினைத்துவிடுகிற ஆபத்தும் ஏற்படும். ஆகவேதான், இருக்கிற இடமல்ல குணம்தான் மனிதனுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது என்பதை எல்லாரும் காணும்படி எதிர்காலத்தை மறைத்திருக் கும் திரையை கிறிஸ்து விலக்கிக் காட்டுகிறார். COLTam 120.2

துன்மார்க்கரெல்லாம் தேவனிடம் திரும்புகிற காலம் ஒன்று இல்லை என்பதையேகளைகள் மற்றும் வலை குறித்த உவமைகள் தெளிவாகச் சொல்லுகின்றன. அறுவடை மட்டும் கோதுமையும்களைகளும் சேர்ந்து வளர்ந்தன. நல்ல மீன்களும், ஆகாத மீன்களும் சேர்ந்து கரைக்கு இழுக்கப்பட்டு, இறுதியில் பிரிக் கப்படுகின்றன. COLTam 121.1

நியாயத்தீர்ப்பிற்கு பிறகு தவணையின் காலம் இல்லை என்பதை இந்த இரு உவமைகளும் மீண்டும் போதிக்கின்றன. சுவி சேஷ ஊழியப்பணி முடிவடைந்ததும், நல்லோரையும், கெட்டோரையும் பிரிக்கிற பணி உடனே துவங்கும்; ஒவ்வொரு வரின் முடிவும் நிரந்தரமாகத் தீர்மானிக்கப்படும். COLTam 121.2

ஒருவரும் அழிந்து போவதை தேவன் விரும்புகிறதில்லை. “நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியை விட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும்?” எசேக்கியேல் 33:11. நித்திய வாழ்வு எனும் ஈவை ஏற்றுக்கொள்ளும்படி தவணையின் காலம் முழுவதும் மனிதர்களிடம் தேவ ஆவியானவர் மன்றாடுகிறார். இந்த மன்றாட்டை ஒதுக்குபவர்கள் மட்டுமே அழிந்து போக விடப்படுவார்கள். தீமையானது இப்பிரபஞ்சத்தை அழித்துவிடும் என்பதால் பாவத்தை அகற்ற வேண்டுமெனதேவன் சொல் கிறார். பாவத்தைப் பிடித்திருப்பவர்கள் பாவம் அழிக்கப் படும்போது தாங்களும் அழிந்து போவார்கள். COLTam 121.3