Go to full page →

41 - யோர்தானில் தேவதுரோகம் PPTam 583

மகிழ்ச்சியான இருதயத்தோடும் தேவன் மேல் புதுப்பிக்கப் பட்ட விசுவாசத்தோடும் வெற்றிகொண்ட இஸ்ரவேலின் படைகள் பாசானிலிருந்து திரும்பி வந்தன. அவர்கள் ஏற்கனவே மதிப்புள்ள எல்லையை சொந்தமாக்கியிருந்து, உடனடியாக கானானை வெற்றி கொள்ளும் நம்பிக்கையிலும் இருந்தனர். அவர்களுக்கும் வாக்குத்தத்த நாட்டிற்கும் இடையே யோர்தான் மாத்திரமே இருந்தது. தாவரங்களால் மூடப்பட்டு, ஏராளமான நீரூற்றுகளால் நீர் இறைக்கப்பட்டு மிகவும் செழிப்பான பேரீச்சமரங்களால் நிழலிடப்பட்டிருந்த செழிப்பான சம்பூமி ஆற்றைத்தாண்டி இருந்தது. அந்த பூமியின் மேற்புறத்து எல்லையில் எரிகோவின் கோபுரங்களும் அரண்மனைகளும் எழும்பியிருந்தன. பேரீட்சமரத் தோப்புகளால் நிரம்பியிருந்ததால் அது பேரீச்ச மரங்களின் பட்டணம் என்று அழைக்கப்பட்டிருந்தது. PPTam 583.1

யோர்தானுக்குக் கிழக்குப்புறத்தில் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த உயர்ந்த மேட்டிற்கும் ஆற்றிற்கும் இடையிலும் அநேக மைல்கள் விரிந்திருந்து ஆற்றோடு கொஞ்ச தூரத்திற்குப் பரவியிருந்த சமபூமி இருந்தது. இந்த மறைவான பள்ளத்தாக்கு வெப்பமண்டலத்தின் தட்பவெப்பத்தைக் கொண்டிருந்தது. இங்கே சித்தீம் அல்லது வேலமரங்கள் வளர்ந்திருந்து, அதற்கு சித்தீம் பள்ளத்தாக்கு என்ற பெயரைக் கொடுத்திருந்தது. இங்கேதான் இஸ்ரலேர்கள் ஒதுங்கியிருந்தனர். ஆற்றினருகேயிருந்த வேலமரத் தோப்புகளில் ஒதுங்கக்கூடிய ஒரு அமைதி அவர்களுக்குக் கிடைத்தது. PPTam 583.2

ஆனால் கவர்ச்சிகரமான இந்த சுற்றுப்புறங்களுக்கு மத்தியில் படை வீரர்களின் வல்லமையான சேனையைக் காட்டிலும் அல்லது வனாந்தரத்தின் மிருகங்களைக் காட்டிலும் மிக அதிக மரணத்திற்கேதுவான ஒரு தீமையை அவர்கள் சந்திக்கவேண்டியதிருந்தனர். இயற்கை அனுகூலங்களால் மிகவும் செழிப்பாக இருந்த இந்த தேசம் அதன் குடிகளால் தீட்டுப்பட்டிருந்தது. அவர்களுடைய முன்னோடி தெய்வமாயிருந்த பாகாலின் ஆராதனையோடு மிகத் தரந்தாழ்ந்த அநீதி நிறைந்த காட்சிகள் தொடர்ச்சியாக இணைக் கப்பட்டிருந்தன. அதன் ஒவ்வொரு பக்கத்திலும் விக்கிரகாராதனைக் கும் காமவெறிக்கும் பெயர்போன இடங்கள் இருந்தன. அந்த இடங்களின் பெயர்கள் தாமும் அந்த ஜனங்களுடைய பொல்லாங் கையும் சீர்கேட்டையும் கூறக்கூடியதாக இருந்தது. PPTam 584.1

இந்த சுற்றுப்புறங்கள் இஸ்ரவேலின் மேல் கெடுக்கும் ஒரு செல்வாக்கை உண்டாக்கின. அவர்களுடைய மனங்கள் தொடர்ச்சி யாக சொல்லப்பட்டிருந்த தீமையான யோசனைகளுக்கு அறிமுக மாயின. சுலபமும் சோம்பலுமான அவர்களுடைய வாழ்க்கை கெட்டுப்போகும் பலனைக் கொண்டுவந்தது. ஏறக்குறைய தங்கள் நினைவின்றியே அவர்கள் தேவனை விட்டுப்பிரிந்து, சோதனைக்கு இலகுவான இரையாக விழும் ஒரு நிலைக்கு வந்து கொண்டிருந்தனர். PPTam 584.2

யோர்தானுக்கு அருகில் அவர்கள் தங்கியிருந்த காலத்தில் கானானை சுதந்தரிப்பதற்கான ஆயத்தங்களை மோசே செய்து கொண்டிருந்தான். இந்த வேலையில் மாபெரும் தலைவன் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தான். ஆனால் காத்திருந்த இந்தக்காலம் ஜனங்களுக்கு மிகவும் சோதனையானதாக இருந்தது. அநேக வாரங்கள் செல்லுமுன்பாகவே உண்மையிலும் நேர்மையிலுமிருந்து விலகிய பயப்படக்கூடிய காரியத்தால் அவர்களுடைய சரித்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. PPTam 584.3

முதலில் இஸ்ரவேலருக்கும் அவர்களுடைய அயலகத்தாரான புறஜாதியாருக்குமிடையே பெண்கள் சம்பந்தப்பட்ட உறவுகள் குறைவாகவே இருந்தன. ஆனால் சில காலம் கழித்து மீதியானியப் பெண்கள் பாளயத்திற்குள் நுழையத்துவங்கினர். அவர்களுடைய தோற்றம் எந்த எச்சரிப்பையும் எழுப்பவில்லை . மிகவும் மௌனமாக அவர்களுடைய திட்டங்கள் நடத்தப்பட்டதினால் மோசேயின் கவனமும் இந்தக் காரியத்திற்கு அழைக்கப்படவில்லை. இந்தப் பெண்களின் நோக்கம் எபிரெயர்களோடு கொள்ளும் தோழ மையினால் தேவனுடைய பிரமாணங்களை மீற அவர்களை வஞ்சிப்பதாகவும், புறஜாதி வழக்கங்களுக்கும் சடங்குகளுக்கும் அவர்களுடைய கவனத்தை இழுப்பதாகவும், விக்கிரகாரா தனைக்குள் அவர்களை நடத்துவதாகவும் இருந்தது. இந்த நோக்கங்கள் கெட்டிக்காரத்தனமாக தோழமை என்னும் ஆடைக்குள் மறைக்கப்பட்டிருந்தது. ஜனங்களின் பாதுகாலவர் களால் கூட அவர்கள் சந்தேகிக்கப்படவில்லை . PPTam 584.4

பிலேயாமின் ஆலோசனையின் பேரில் அவர்களுடைய தெய்வங்களை கனப்படுத்த மாபெரும் பண்டிகை ஒன்று மோவாபின் அரசனால் நியமிக்கப்பட்டது. அந்தப் பண்டிகைக்கு வர பிலேயாம் இஸ்ரவேலர்களைத் தூண்ட வேண்டும் என்று இரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவன் அவர்களால் தேவனுடைய தீர்க்கதரிசியென்று கருதப்பட்டிருந்ததால் தன் நோக்கத்தை நிறைவேற்றுவது அவனுக்கு அதிகக் கடினமாயிருக்கவில்லை. ஜனங்களில் அதிகமானோர் அந்தப் பண்டிகைகளைக்காணும் படியாக அவனோடு சேர்ந்துகொண்டனர். விலக்கப்பட்டிருந்த இடத்தில் நுழைந்து, சாத்தானுடைய கண்ணியில் அவர்கள் சிக்கினர். பாடல் மற்றும் ஆடலால் ஏமாற்றப்பட்டு, புறஜாதி ஆடைகளின் அழகினால் மயக்கப்பட்டு, யெகோவாவிற்கான தங்கள் விசுவாசத்தை அவர்கள் வீசி யெறிந்தனர். களிகூருதலிலும் விருந்திலும் இணைந்தபோது அவர்கள் திளைத்திருந்த மதுபானம் அவர்களுடைய உணர்வுகளை குழப்பி சுய கட்டுப்பாட்டின் தடுப்புகளை உடைத்தது. கட்டுக்கடங்காத உணர்ச்சி முழுமையாக ஆட்சி செய்ய, தங்கள் மனசாட்சியை முறை கேட்டினால் தீட்டுப்படுத்தி விக்கிர கங்களுக்குப் பணியும்படி அவர்கள் நடத்தப்பட்டனர். புறஜாதி பலிபீடங்களின் மேல் காணிக்கைகளைச் செலுத்தி, விக்கிரகங்கள் முன் அவர்கள் பணிந்தனர். PPTam 585.1

குறைந்த நேரத்திலேயே மரணத்திற்கேதுவான தொற்று நோயைப் போல இந்த விஷம் இஸ்ரவேலின் பாளய முழுவதிலும் வெகு வேகமாக பரவியிருந்தது. தங்களுடைய சத்துருக்களை யுத்தத்தில் வென்றிருக்கக்கூடியவர்கள் புறஜாதிப் பெண்களின் தீமைகளால் மேற்கொள்ளப்பட்டனர். ஜனங்கள் மோகத்தில் இருந்ததைப் போன்றிருந்தனர். ஜனங்களின் அதிபதிகளும் தலைவர்களும் மீறுதலில் முன்னணியில் இருந்தனர். அநேக ஜனங்கள் குற்றத்தில் இருந்த மருள்விழுகை நாடுதழுவியதாக இருந்தது. இஸ்ரவேலர்பாகால் பேயோரைப்பற்றிக்கொண்டார்கள். சத்துருக்களின் திட்டங்கள் மிக வெற்றிகரமாக இருந்ததால், இந்தத் தீமையை அறியும்படி மோகே எழுப்பப்பட்டபோது இஸ்ரவேலர்கள் பேயோர் மலையில் காமவெறி ஆராதனையில் பங்கு பெற்றிருந்ததோடல்லாது புறஜாதி சடங்குகளையும் இஸ்ரவேலின் பாளயத்தில் கடைபிடித்திருந்தனர். வயதான அந்தத் தலைவன் மூர்க்கமானான். தேவனுடைய உக்கிரம் தூண்டப்பட்டது. PPTam 585.2

பிலேயாமுடைய அனைத்து மந்திரங்களும் செய்யக்கூடாததை அவர்களுடைய அநீதியான பழக்கங்கள் இஸ்ரவேலில் செய்தது அவர்களை தேவனிடமிருந்து பிரித்தது. வேகமான நியாயத்தீர்ப்பு களால் ஜனங்கள் தங்கள் பாவங்களின் ஏராளத்தைக் காண எழுப்பப்பட்டனர். பயங்கரமான கொள்ளை நோய் பாளயத்தில் வந்தது. அதற்கு அநேக ஆயிரக்கணக்கானோர் வேகமாக பலியாயினர். இந்த மீறுதலிலிருந்த தலைவர்கள் நியாயாதிபதிகளால் கொலை செய்யப்பட வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார். இந்தக் கட்டளை மிகச்சரியாக கீழ்ப்படியப்பட்டது. மீறினவர்கள் கொலை செய்யப்பட்டனர். தலைவர்கள் மிகக் கடுமையாக நடந்து கொண்டதினால், அவர்களுடைய பாவத்தின் மேல் தேவனுக்கு இருக்கிற அருவருப்பையும் அவர்களுக்கு எதிராக இருந்த தேவனுடைய உக்கிரத்தின் பயங்கரத்தையும் உணரத்தக்கதாக அவர்களுடைய சரீரங்கள் இஸ்ரவேலின் பார்வையில் தொங்கவைக்கப்பட்டன. PPTam 586.1

தண்டனை நியாயமானதே என்று அனைவரும் உணர்ந்தனர். ஜனங்கள் ஆசரிப்புக்கூடத்திற்கு விரைந்து கண்ணீரோடும் மிகுந்த தாழ்மையோடும் பாவங்களை அறிக்கை செய்தனர். இவ்விதம் அவர்கள் தேவனுக்கு முன் ஆசரிப்புக் கூடார வாசலில் அழுது கொண்டிருந்தபோது, வாதை தன் மரண வேலையை இன்னும் செய்து கொண்டிருந்தபோது, நியாயாதிபதிகள் பயங்கரமான கட்டளையை செயல்படுத்திக்கொண்டிருந்தபோது, மீதியான் பிரபுவினுடைய குமாரத்தியான மீதியானிய வேசியோடு இஸ்ரவேலின் ஒரு தலைவனான சிமரி என்பவன் துணிவாக பாளயத்திற்குள் வந்து அவளைத் தன் கூடாரத்திற்குள் கொண்டு சென்றான். தீமை ஒருபோதும் இவ்வளவு துணிவும் அதிகப் பிடிவாதமுமாக இருந்ததில்லை . மதுபானத்தினால் மயக்கப்பட்டு சிம்ரி தன் பாவத்தை சோதோமைப் போன்றதாக அறிவித்து, தன்னுடைய அவமானத்தில் மேன்மை பாராட்டினான். ஆசாரியர்களும் தலைவர்களும் வருத்தத்திலும் தாழ்மையிலும் முகங்குப்புற விழுந்து மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது தமது ஜனங்களை தப்பவிட்டு தமது சுதந்தரத்தை நிந்தைக்கு ஒப்புக்கொடாதிருக்கவும் ஆண்டவரிடம் மன்றாடிக்கொண்டு இருந்தபோது இஸ்ரவேலின் இந்த அதிபதி தேவனுடைய பழிவாங்குதலையும் தேசத்தின் நியாயாதிபதிகளையும் அவமதிப்பதைப்போல சபையாரின் பார்வையில் வெளிப் படையாகப் பாவம் செய்தான். பிரதான ஆசாரியனாகிய எலேயாசாரின் மகன் பினெகாஸ் சபையின் நடுவிலிருந்து எழுந்து ஒரு ஈட்டியை எடுத்து அறையிலே அவன் பின்னாலே போய் அவர்கள் இருவரையும் கொன்று போட்டான். வாதை நிறுத்தப்பட்டது. தெய்வீக நியாயத்தீர்ப்பைச் செயல்படுத்தின ஆசாரியன் அனைத்து இஸ்ரவேலின் முன்பும் கனப்படுத்தப்பட்டான். ஆசாரியத்துவம் அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் என்றைக்குமாக உறுதி படுத்தப்பட்டது. PPTam 586.2

பினெகாஸ் இஸ்ரவேல் புத்திரர்மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான். ஆகையால், இதோ, அவனுக்கு என் சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன். அவன் தன் தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல் என்ற தெய்வீகச் செய்தி வந்தது. PPTam 587.1

நாற்பது வருடங்களுக்கு முன் வனாந்தரத்தில் சாகவே சாவார்கள் என்ற தீர்ப்பை சம்பாதித்திருந்த அந்த பரந்த கூட்டத்தில் பிழைத்திருந்தவர்களை சித்தீமில் நடந்த இஸ்ரவேலின் பாவங்களுக்குக் கொடுக்கப்பட்ட நியாயத்தீர்ப்புகள் அழித்தன. யோர்தானின் சம்பூமியில் தங்கியிருந்த நேரத்தில் இஸ்ரவேலைத் தொகையிட்டபோது, முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணும் போது ....... எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாயிருக்கவில்லை (எண். 26:64,65) என்பது காணப்பட்டது. மீதியானியரின் நயங்காட்டுதலுக்குக் கொடுத்த இஸ்ரவேலின் மேல் தேவன் நியாயத்தீர்ப்புகளை அனுப்பினார். ஆனால் சே பாதித்தவர்கள் தெய்வீக நியாயத்துக்குத் தீர்ப்புக்குத் தப்பவில்லை. ரெவி தீமில், இஸ்ரவேல் சேனையின் பின்பகுதியில் பெலவீனப்பட்டு தளர்ந்திருந்தவர்கள் மேல் பாய்ந்து தாக்கின அமலேக்கியர்கள் அதிக காலம் தண்டிக்கப்படவில்லை. அவர்களை பாவத்திற்கு வஞ்சித்த மீதியானியர்களோ மிகவும் ஆபத்தான சத்துருக்களைப்போல் அவருடைய நியாயத்தீர்ப்புகளை உணர விரைவாக நடத்தப்பட்டனர். இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்குவாயாக (எண். 31:2) என்ற கட்டளை மோசேக்குக் கொடுக்கப்பட்டது. அதன் பின்பு உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார். இந்த ஆணை உடனடியாக கீழ்ப்படியப்பட்டது. ஒரு ஆயிரம் மனிதர்கள் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் தெரிந்தெடுக்கப்பட்டு, பினெகாசின் தலைமையில் அனுப்பப்பட்டனர். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் மீதியானியருடன் யுத்தம் பண்ணி, மீதியானியரின் ஐந்து ராஜாக்களையும் )..... கொன்று போட்டார்கள். பேயோரின் குமாரனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்று போட்டார்கள் (வசனம் 7, 8). தாக்கிய படையினால் சிறை பிடிக்கப்பட்ட பெண்கள் மோசேயின் கட்டளையின்படி அதிக்குற்றவாளிகளாகவும் இஸ்ரவேலின் சத்துருக்களில் மிகவும் ஆபத்தானவர்களாகவும் கருதப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். PPTam 587.2

தேவனுடைய ஜனங்களுக்கு எதிராக தீமையை திட்டம் பண்ணினவர்களின் முடிவு இவ்வாறாக இருந்தது. சங்கீதக்காரன். ஜாதிகள் தாங்கள் வெட்டின் குழியில் தாங்களே விழுந்தார்கள். அவர்கள் மறைவாய் வைத்த வலையில் அவர்களுடைய காலே அகப்பட்டுக்கொண்டது (சங்.9:15) என்று சொல்லுகிறான். கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார். நியாயம் நீதியினிடமாகத் திரும்பும். அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரே அவர்களைச் சங்கரிப்பார் (சங். 9:14, 15, 21, 23) என்று சொல்லுகிறான். PPTam 588.1

எபிரெயரை சபிக்கும்படியாக பிலேயாம் அழைக்கப்பட்ட போது அவனுடைய அனைத்து மந்திரங்களாலும் அவர்கள் மேல் தீமையைக் கொண்டுவர அவனால் கூடாமற்போயிற்று. ஏனெனில் தேவன் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை எண். 23:21, 23. ஆனால் சோதனை ஒப்புக்கொடுத்ததின் வழியாக தேவனுடைய பிரமாணங்களை அவர்கள் மீறின் போது, அவர்களுடைய பாதுகாப்பு அவர்களை விட்டு நீங்கியது. தேவனுடைய ஜனங்கள் அவருடைய கற்பனைகளுக்கு உண்மையாக இருக்கும் போது. யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை. இவ்வாறு சாத்தானுடைய அனைத்துவல்லமைகளும் அனுபவமிக்க கலைகளும் அவர்களை வஞ்சிக்க செலுத்தப்பட்டது. தேவனுடைய பிரமாணங்களை வைத்திருக்கிறதாக அறிவிக்கிறவர்கள் அவருடைய நியமங்களை மீறும் போது அவரிடமிருந்து தங்களை பிரித்துக்கொள்ளுகிறார்கள். அவர்களால் தங்கள் சத்துருக்கள் முன்பு நிற்க முடியாது. PPTam 588.2

படை பலத்தால் அல்லது மீதியானியரின் மந்திரங்களால் மேற்கொள்ளப்படக்கூடாத இஸ்ரவேலர்கள் அவர்களுடைய வேசிகளுக்கு இரையானார்கள். ஆத்துமாக்களை கண்ணியில் சிக்கவைத்து அழிக்க சாத்தானுடைய சேவையில் பதிவு செய்திருக்கிற பெண்களுடைய வல்லமை அப்படிப்பட்டது. அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழப்பண்ணினாள், பலவான்கள் அநேகரைக் கொலை செய்தாள் - நீதி. 7:26. இவ்வாறே சேத்தின் பிள்ளைகள் அவர்களுடைய உண்மையிலிருந்து வஞ்சிக்கப்பட்டனர்; பரிசுத்த வித்து கொடுக்கப்பட்டது. இவ்வாறே யோசேப்பு சே பாதிக்கப்பட்டான். இவ்விதமே சிம்சோன் தன்னுடைய பலனாகிய இஸ்ரவேலின் அரணை பெலிஸ்தியர்களின் கைகளில் காட்டிக் கொடுத்தான். இவ்வாறே தாவீது தடுமாறினான். இராஜாக்களில் ஞானமான சாலமோனும் தேவனால் மூன்று முறை பிரியமானவன் என்று அழைக்கப்பட்டிருந்தவனும் உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வல்லமைக்குத் தன்னுடைய உண்மையை பலியாக்கினான். PPTam 589.1

இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண் டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கை யாயிருக்கக்கடவன் - 1 கொரி. 10, 11, 12. தான் வேலை செய்கிற மனித இருதயத்தை சாத்தான் நன்கு அறிவான். சாத்தானிய ஆழத்தோடு அவன் ஆயிரக்கணக்கான வருடங்களாக ஆராய்ந்து கொண்டிருக்கிறான். ஒவ்வொரு குணத்திலும் இலகுவாக அசைக் கப்படக்கூடியது எது என்பதை அவன் அறிவான். பாகால் பேயோரில் மிகவும் வெற்றிகரமாக இருந்த அதே சோதனைகளால் மிகவும் பலமான இஸ்ரவேலின் பிரபுக்களைக் கவிழ்க்க தொடர்ந்த தலை முறைகளில் அவன் செயல்பட்டிருக்கிறான். காலங்கள் நெடுகிலும் பரவியிருக்கிற குணத்தின் சிதறல்களிலிருந்து உணர்ச்சியில் திளைக்கும் கன்மலை திரிக்கப்பட்டிருக்கிறது. காலத்தின் முடிவை நாம் நெருங்கும்போது, தேவனுடைய ஜனங்கள் பரலோகக் கானானின் எல்லைகளில் இருக்கும் போது, முற்காலங்களில் செய்ததைப்போலவே இந்த நல்ல தேசத்தில் நுழைவதிலிருந்து அவர்களைத்தடுக்கும்படி சாத்தான் தன் முயற்சிகளை இரட்டிப்பாக் குவான். ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் தனது கண்ணிகளை வைக்கிறான். அறியாமையில் இருப்பவர்களும் நாகரீகமற்றவர் களுந்தான் காவலோடு இருக்க வேண்டுமென்றல்ல. மிக உயர்ந்த பதவிகளில் மிகப் பரிசுத்தமான தொழிலில் இருக்கிறவர்களுக்கும் தன்னுடைய சோதனைகளை அவன் ஆயத்தப்படுத்துவான். தங்களுடைய ஆத்துமாக்களை தீட்டுப்படுத்த அவனால் அவர்களை நடத்தக் கூடுமானால் அவர்கள் வழியாக அநேகரை அழிக்க முடியும். மூவாயிரம் வருடங்களுக்கு முன்பாக உப யோகித்த அதே முகவர்களை இன்றும் உபயோகிக்கிறான். உலக நட்பின் வழியாக, அழகின் மயக்கும் ஆற்றல் வழியாக, இன்பத் தையும் களிப்பையும் விருந்தையும் அல்லது மது கிண்ணத்தையும் தேடுவதின் வழியாக ஏழாவது கற்பனையை மீறும்படி அவன் சோதிக்கிறான். PPTam 589.2

விக்கிரகாராதனைக்குள் நடத்துமுன்பாக இஸ்ரவேலை விப் சாரத்திற்குள் நடத்தினான். தங்களுடைய சொந்த சரீரத்தில் தேவனுடைய சாயலை அவமதித்து அவருடைய ஆலயத்தை தீட்டுப்படுத்து கிறவர்கள் தங்களுடைய கீழ்த்தரமான இருதயத்தின் விருப்பங்களைத் திருப்தி செய்வதால், தேவனுக்கு வரும் அவமதிப்பைக் குறித்து மனஉளைச்சல் அடையமாட்டார்கள். உணர்ச்சியில் திளைப்பது மனதை பலவீனப்படுத்தி ஆத்துமாவை மட்டுப்படுத்து கிறது. மிருகநாட்டங்கள் திருப்திப்படுத்துவதினால் சன்மார்க்க அறிவு சார்ந்த வல்லமைகள் மரத்து செயலிழந்து போகின்றன. உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டிருக்கிறவனுக்கு தேவனுடைய பிரமாணங்களுக்குரிய பரிசுத்த கடமைகளை உணருவதோ அல்லது பாவ நிவாரணத்தைப் போற்றுவதோ அல்லது ஆத்துமா வின் மேல் சரியான மதிப்பை வைப்பதோ கூடாததாகிறது. நற்குண மும் தூய்மையும் சத்தியமும் தேவனுக்குக் காண்பிக்கும் பயபக்தியும் பரிசுத்த காரியங்களின் மேல் அன்பும் மனிதனை பரலோகத்தோடு இணைக்கிற இந்த அனைத்து பரிசுத்தப் பிரியங்களும் நேர்மையான வாஞ்சைகளும் இச்சையின் அக்கினியால் பட்சிக்கப்படுகிறது. ஆத்துமா இருண்டு போய் தீய ஆவிகளின் குடியிருப்பும் அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமான வனாந்தர பாழ்நிலமாகிறது. தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப் பட்டவன் மிருகங்களுக்கு சமமாக தரந்தாழ்த்தப்படுகிறான். PPTam 590.1

விக்கிரகாராதனைக்காரரோடு தோழமை கொண்டு, அவர் களுடைய பண்டிகைகளில் பங்குகொண்டதினால் எபிரெயர்கள் தேவனுடைய பிரமாணங்களை மீறி, அவருடைய நியாயத்தீர்ப்புகளை தேசத்தின் மேல் கொண்டுவந்தனர். அவ்வாறே கிறிஸ்துவின் பின்னடியார்களை தேவபக்தியற்றவர்களோடு தோழமை கொள்ள நடத்தி, அவர்களுடைய பொழுதுபோக்குகளோடு இணைத்து, பாவத்திற்குள் இழுப்பதில் சாத்தான் மிகவும் வெற்றியுள்ளவனாக இருக்கிறான். ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து போய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் - 2 கொரி. 617. முற்காலத்தில் இஸ்ரவேலர்களிடம் கோரினதைப்போலவே இப்போதும் தமது ஜனங்கள் வழக்கங்களிலும் பழக்கங்களிலும் கொள்கைகளிலும் உலகத்தை விடவும் மிகவும் வேறுபட்டிருக்கவேண்டும் என்று தேவன் கோருகிறார். அவர்கள் தமது வசனத்தின் போதனைகளை உண்மையாகப் பின்பற்றுவார்களானால் தனித்துவம் இருக்கும். இல்லாதபோது அதை அடைய முடியாது. புறஜாதிகளைப்போல் ஆவதற்கு எதிராக எபிரெயர்களுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிப்புகள், தேவபக்தியற்றவர்களின் ஆவியோடும் வழக்கங்களோடும் ஒத்துப்போக மிக நேரடியாகவும் வெளிப்படையாகவும் கிறிஸ்துவர்களை தடை செய்கிறது. உலகத்திலும் உலகத்திலுள்ள வைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந் தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை (1 யோவான் 2:15) என்று கிறிஸ்து நம்மோடு பேசுகிறார். உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனா கிறான். யாக். 4:4. கிறிஸ்துவின் பின்னடியார்கள் பாவிகளிடமிருந்து தங்களைப் பிரித்து, அவர்களுக்கு நன்மை செய்ய சந்தர்ப்பம் இருக் கும்போது மாத்திரமே அவர்களுடைய சமூகத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். தேவனிடமிருந்து நம்மைப் பிரிக்கிற செல் வாக்கை ஏற்படுத்துகிறவர்களின் கூட்டத்திலிருந்து நம்மை மறைத் துக்கொள்ளுவதில் நாம் மிகவும் தீர்மானமாயிருக்க முடியாது. சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும் என்று நாம் ஜெபிக்கும் போது சோதனைகளைக் கூடுமான வரையிலும் தடுக்கவேண்டும். PPTam 591.1

இஸ்ரவேலர்கள் வெளிப்புறமாக இலகுவும் பாதுகாப்புமான நிலையில் இருந்தபோதுதான் பாவத்திற்குள் நடத்தப்பட்டனர். தேவனை எப்போதும் தங்கள் முன் வைத்திருக்கத் தவறி, ஜெபத்தை நெகிழ்ந்து, சுய நம்பிக்கையின் ஆவியை அவர்கள் நேசித்திருந்தார்கள், இலகுவாயிருப்பதும் சுயத்தில் திளைப்பதும் ஆத்துமாவை காவலற்றதாக்க, கீழ்ப்படுத்தும் எண்ணங்கள் நுழைவைக்கண்டன . சுவர்களுக்கு உள்ளே இருந்ததுரோகிகள்தான் கொள்கையின் அரண்களை கவிழ்த்து, சாத்தானின் வல்லமையில் இஸ்ரவேலைக் காட்டிக்கொடுத்தனர். இவ்விதமே ஆத்துமாவின் அழிவை வளைத்துப்போட சாத்தான் இன்னமும் தேடுகிறான். உலகத்திற்குத் தெரிந்திராத நீண்டகாலமாக ஆயத்தப்படுத்தப்பட்ட முறை, கிறிஸ்தவன் வெளிப்படையான பாவத்தைச் செய்வதற்கு முன்பு அவனுடைய இருதயத்திற்குள் நடக்கிறது. மனம் உடனடியாக தூய்மையிலும் பரிசுத்தத்திலுமிருந்து சீரழிவிற்கும் சீர்கேட்டிற்கும் குற்றத்திற்கும் தாழ்ந்து வருகிறதில்லை. தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டதை மிருக்குணத்திற்கு அல்லது சாத்தானிய குணத்திற்கு கீழ்த்தரமாக்குவதற்கு காலம் அவசியம். காண்கிறதினால் நாம் மாறுகிறோம். அசுத்தமான நினைவுகளில் திளைப்பதினால் ஒருகாலத்தில் அருவருத்திருந்த பாவத்தை தனக்கு இன்பமானதாகக் காணும் படி மனிதன் தன் மனதை பயிற்றுவிக்க முடியும். PPTam 592.1

குற்றத்தை உண்டாக்கவும் கீழ்த்தரமாக்கும் தீமையை பிரபலமாக்கவும் சாத்தான் ஒவ்வொரு முறையையும் உபயோகிக்கிறான். சில கதைகளில் கொடுக்கப்பட்டிருப்பதைப் போன்று அல்லது சில அரங்குகளில் நடத்திக் காண்பிப்பதைப் போன்று, குற்றத்தைக் குறித்து வெளிவரும் காரியங்களை சந்திக்காமல் நாம் நம்முடைய பட்டணங்களின் வீதிகளில் நடக்க முடிவதில்லை . பாவத்தோடு மிகவும் அறிமுகமாயிருக்கும்படியாக நம் மனங்கள் கற்பிக்கப்படுகின்றன. நாளேடுகளில் கீழான தீமையானவர்களால் மேற்கொள்ளப்படும் வழிகள் ஜனங்களின் முன்பு வைக்கப்பட்டிருக்கின்றன. உணர்வுகளைத் தூண்டக்கூடிய கிளர்ச்சிப்படுத்துகிற அனைத்தும் கிளர்ச்சியூட்டும் கதைகளில் அவர்கள் முன் கொண்டுவரப்படுகின்றன. இப்படிப்பட்ட கீழ்த்தர மான குற்றங்களை அவர்கள் அதிகமாகக் கேட்டும் படித்தும் இருப்பதால், ஒருகாலத்தில் இவைகளினால் பயமடைந்திருந்த மிகவும் இளகின் அவர்களுடைய மனசாட்சி இப்போது கடினமடைய, இந்தக் காரியங்களில் அது மிகவும் ஆவலோடு இப்போது சஞ்சரிக்கிறது. PPTam 592.2

இன்றைக்கு உலகத்தில் பிரபலமாயிருக்கிற பொழுதுபோக்கு களும், கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறவர்களிடமும் பிரபலமாயிருக்கிற பொழுதுபோக்குகளும் புறஜாதியார் செய்தவைகளின் முடிவுகளைப்போல அதே முடிவுகளை நோக்கி இருக்கின்றன. ஆத்துமாக்களை அழிக்க சாத்தான் உபயோகிக்காத ஒருசிலவைகளும் அவைகளின் நடுவே இருக்கின்றன. உணர்ச்சிகளைத் தூண்டவும் தீமையில் பெருமை பாராட்டவும் இந்த நாடகத்தின் வழியாக காலங்கள் நெடுகிலும் அவன் கிரியை செய்திருக்கிறான். ஒப்பேரா - அதனுடைய கற்பனை செய்யும் தோற்றத்தில் - கவர்ச்சியூட்டுகிற மலைக்கவைக்கிற ஆடல் சூதாட்டம் இவைகளை கொள்கைகளின் தடுப்புச் சுவர்களைத் தகர்க்கவும் உணர்ச்சியில் திளைக்கும் கதவை திறக்கவும் சாத்தான் உபயோகிக்கிறான். பெருமை வளர்க்கப்பட்டு, பசி திளைக்கப்படுகிற - தேவனை மறக்கவும் நித்திய காரியங்களின் பார்வையை இழக்கவும் கூடுகிற இன்பத்திற்கான ஒவ்வொரு கூட்டத்திலும் சாத்தான் ஆத்துமாவை சங்கிலியால் சுற்றிக் கட்டுகிறான். PPTam 593.1

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும். (நீதி. 4:23) என்பது ஞானியின் வாக்கியம். அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான். இருதயம் தெய்வீகக் கிருபையினால் புதுப்பிக்கப்படவேண்டும். அவ்வாறில்லாத போது வாழ்க்கையின் தூய்மையைத் தேடுவது வீணாயிருக்கும், கிறிஸ்துவின் கிருபையை சார்ந்திராது நேர்மையான குணத்தைக் கட்ட முயற்சிக்கிறவன், சொறி மணலின்மீது தன் வீட்டைக் கட்ட முயற்சிக்கிறான். பயங்கரமான சோதனையின் புயலில் அது நிச்சயமாக கவிழ்க்கப்படும். சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும் (சங். 51:10) என்கிற தாவீதின் ஜெபமே ஒவ்வொரு ஆத்துமாவின் விண்ணபமாயிருக்கவேண்டும். பரலோக ஈவில் பங்கெடுக்கிறவர்களாக நாம் பூரணத்தை நோக்கிச் சென்று விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே (1 பேதுரு 1:5) காக்கப்படவேண்டும். PPTam 593.2

எனினும் சோதனையை வேலை ஒன்று இருக்கிறது. சாத்தானுடைய கருவிகளுக்கு இரையாகாதவர்கள் தங்கள் ஆத்துமாவின் மார்க்கங்களை நன்கு காவல் காக்க வேண்டும். அசுத்தமான நினைவுகளைக் கூறுகிறவைகளைப்படிக்கிறதையும் பார்க்கிறதையும் கேட்பதையும் தவிர்க்க வேண்டும். ஆத்துமாவின் சத்துரு சொல்லுகிற ஒவ்வொரு காரியத்திலும் சீரின்றி அலையும்படியாக மனம் விட்டுவிடப்படக் கூடாது. நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து ; ...... உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படியே இனி நடவாமல்,..... உங்களை அழைத்தவர் பரிசுத்தராகியிருக்கிறது போல், நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள் (1 பேதுரு 1:13-15) என்று அப்போஸ்தலனாகிய பேதுரு சொல்லு கிறான். பவுல் உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ள வைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ள வைகளெவைகளோ, அன்புள்ளவை களெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள் (பிலிப். 4:8) என்று கூறுகிறான். இதற்கு ஊக்கமான ஜெபமும் தொடர்ந்து விழித்திருந்து கவனிப்பதும் தேவை. மனதை மேல் நோக்கிக் கவர்ந்து தூய்மையான பரிசுத்தமான காரியங்களின் மேல் தங்கியிருக்கச் செய்கிற பரிசுத்த ஆவியானவரின் நிலைக்கும் செல் வாக்கிடமிருந்து நாம் உதவி பெறவேண்டும். தேவனுடைய வார்த்தைகளை நாம் கவனமாக ஆராய வேண்டும். வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால் தானே . நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன் (சங். 119:9,11) என்று சங் கீதக்காரன் சொல்லுகிறான். PPTam 593.3

பேயோரில் இஸ்ரவேலின் பாவம் அத்தேசத்தின் மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்புகளைக் கொண்டுவந்தது. ஒருவேளை அதே பாவங்கள் அவ்வளவு வேகமாக இன்று தண்டிக்கப்படாமல் போகலாம். ஆனாலும், நிச்சயமாக அவைகள் தண்டனையை சந்திக்கும். ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார். 1 கொரி. 3:17. இந்தக் குற்றங்களோடு பயப்படத்தக்க தண்டனைகளை விரைவாகவோ அல்லது தாம தமாகவோ வைக்கப்படப்போகிற தண்டனைகளை இயற்கையே இணைத்திருக்கிறது. இந்த பாவங்களே மற்ற எதையும் விட நம்முடைய இனத்தை பயப்படுமளவு கீழாக்கி, இந்த உலகத்தில் சபிக்கப்பட்டிருக்கிற வியாதி மற்றும் துன்பத்தைக் கொண்டுவந் திருக்கிறது. மனிதர் தங்கள் மீறுதலை தங்கள் சகமனிதரிடமிருந்து மறைப்பதில் வெற்றியடையலாம். PPTam 594.1

ஆனால் துன்பத்திலும் வியாதியிலும் அறிவாற்றலற்ற நிலையிலும் அல்லது மரணத்திலும் அதன் விளைவுகளை நிச்சயமாக அறுப்பார்கள். இந்த வாழ்க்கையைத் தாண்டி நித்தியமான பரிசுகளை வழங்கக்கூடிய தேவனுடைய நியாயஸ்தலம் இருக்கிறது. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. மாறாக, சாத்தானோடும் தீய தூதர்களோடும் இரண்டாம் மரணமாகிய அக்கினிக்கடலில் (கலா. 5:21; வெளி. 2014) பங்கடைவார்கள். PPTam 595.1

பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடு போல் ஒழுகும், அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும். அவள் செய்கையின் முடிவோ எட்டியைப் போலக் கசப்பும், இருபுறமுங்கருக்குள்ள பட்டயம் போல் கூர்மையுமாயிருக்கும் நீதி. 5:3,4. உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக் கிட்டிச் சேராதே. சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய். அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன் பிரயாசத்தின் பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும். முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும் போது நீ துக்கித்து - வச. 8-11; அவளுடைய வீடு மரணத்துக்கு ..... சாய்கிறது. அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை நீதி. 2:18,19, அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்கள் நீதி. 9:18. PPTam 595.2