Go to full page →

12 - கானானில் ஆபிரகாம் PPTam 141

ஆபிரகாம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாக கானானுக்குத் திரும்பினான். லோத்து இன்னும் அவனோடு இருந்தான். மீண்டும் அவர்கள் பெத் தேலுக்கு வந்து, தாங்கள் முன்பு கட்டியிருந்த பலிபீடத்தண்டையில் தங்களது கூடாரங்களைப் போட்டார்கள். அதிகமாக அதிகரித்த சொத்துக்களால் பிரச்சனைகள் அதிகரித்ததை அவர்கள் விரைவில் கண்டார்கள். கஷ்டங்கள் சோதனைகளுக்கு மத்தியில் அவர்கள் இணக்கத்தோடு ஒன்றாகக் குடியிருந்தார்கள். ஆனால் செழிப்பில் அவர்களுக்கிடையே சண்டை வரும் அபாயம் இருந்தது. இருவ ருடைய மந்தைகளுக்கும் மேய்ச்சல் நிலம் போதுமானதாக இல்லை. மேய்ப்பர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதங்கள் அவர்களுடைய தலைவர்களை ஒரு தீர்மானத்திற்குக் கொண்டு வந்தது. அவர்கள் பிரியவே வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆபிரகாம் லோத்தைவிட வயதில் பெரியவனாயிருந்து, உறவிலும் ஐசுவரியத் திலும் தகுதியிலும் மேலானவனாயிருந்தான். என்றாலும் சமாதா னத்தை பாதுகாக்க அவனே முதலாவது பேச வேண்டியதாயிற்று. முழுதேசமும் தேவனால் தாமே அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த போதும், அவன் மரியாதையோடு இந்த உரிமையை விட்டுக் கொடுத்தான். PPTam 141.1

ஆபிராம் லோத்தை நோக்கி : எனக்கும் உனக்கும், என் மேய்ப் பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம், நாம் சகோதரர். இந்தத் தேசமெல்லாம் உனக்கு முன் இருக்கிறது அல் லவா? நீ என்னை விட்டுப் பிரிந்து போகலாம், நீ இடது புறம் போனால், நான் வலது புறம் போகிறேன். நீ வலது புறம் போனால், நான் இடது புறம் போகிறேன் என்றான். PPTam 142.1

இங்கே ஆபிரகாமின் நேர்மையான சுயநலமற்ற ஆவி வெளிக் காட்டப்பட்டது. எத்தனை பேர் இதேபோன்ற சூழ்நிலைகளில் தங்களுடைய தனிப்பட்ட உரிமைகளையும் முன்னுரிமைகளையும் அனைத்து ஆபத்துக்களுடனும் பிடித்துக்கொண்டிருப்பார்கள் ! எத் தனை குடும்பங்கள் பிரிந்து உடைந்து போயிருக்கின்றன! எத்தனை சபைகள் சத்தியத்தை துன்மார்க்கருக்கு நடுவிலே நிந்தையாக்கி, பிரிந்துபோயிருக்கின்றன! என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக் கும் வாக்குவாதம் வேண்டாம், நாம் சகோதரர் என்றான் ஆபிரகாம். இயற்கையான உறவினிமித்தம் மாத்திரமல்ல, மெய்யான தெய் வத்தை வணங்கினதினாலே அவர்கள் சகோதரராயிருந்தார்கள். உலக முழுவதிலும் இருக்கிற தேவனுடைய பிள்ளைகள் ஒரு குடும்பத்தார். ஒரேவிதமான அன்பின் ஆவியும் சமாதானத்தின் ஆவியும் அவர்களை ஆட்சி செய்யவேண்டும். சகோதரசிநேகத் திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம் பண்ணுகிற திலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள் (ரோமர் 12:10) என்பதுவே நமது இரட்சகரின் போதனை. ஒரேவிதமான மரியாதையும், மற்றவர்கள் நமக்குச் செய்ய விரும்புகிறபடி நாம் அவர்களுக் குச் செய்வதற்குக் கொண்டுள்ள விருப்பமும் வாழ்க்கையின் பாதி தீமைகளை இல்லாமற்செய்துவிடும். சுயத்தை முக்கியப்படுத்தும் ஆவி, சாத்தானுடைய ஆவி . விருப்பத்தோடு கிறிஸ்துவின் ஆவி யைப் போற்றும் இருதயம் தற்பொழிவை நாடாது அன்பைக் கொண்டிருக்கும். அப்படிப்பட்டவர்கள் தனக்கானவைகளை யல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக (பிலிப். 24) என்கிற தெய்வீக உத்தரவுகளைக் கவனிப்பார்கள். PPTam 142.2

ஆபிரகாமோடு இருந்த இணைப்பே தனது செல்வத்திற்குக் காரணமாயிருந்தபோதும், தனக்கு நன்மை செய்தவனுக்குலோத்து எந்த ஒரு நன்றியையும் வெளிக்காட்டவில்லை. மரியாதை, ஆபிரகாமுடைய தெரிந்துகொள்ளுதலுக்கு ஒப்புக்கொடுக்க கட்ட ளையிட்டிருக்கும். ஆனால் இதற்குப் பதிலாக, சுயநலமாக எல்லா சாதகங்களையும் தான் அடைந்து கொள்ள அவன் முயற்சித்தான். லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து : யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கோமோராவையும் அழிக்கு முன்னே, சோவாருக்குப் போம் வழி மட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது. முழு பாலஸ்தீனத்திலும் யோர்தான் பள்ளத்தாக்கே மிகவும் செழிப்பான ஒன்றாக பார்க்கிறவர்களுக்கு இழந்து போன பரதீசை ஞாபகப்படுத்துகிற ஒன்றாகவும், அவர்கள் சற்று முன்பு விட்டு வந்த நைல்நதி செழிப்பாக வைத்திருந்த சமபூமியின் அழகையும் செழிப்பையும் கொண்டதாகவும் இருந்தது. அங்கே, ஐசுவரியமும் அழகுங்கொண்டு, நெரிசலான கடைத்தெருக்களின் இலாபகரமான வியாபாரத்துக்கு அழைத்த பட்டணங்களும் இருந்தன. உலக ஆதாயத்துக்கடுத்த கற்பனைகளில் மயங்கினவனாக, அங்கே சந்திக்க வேண்டியதிருந்த சன்மார்க்க ஆவிக்குரிய தீமைகளை லோத்து கவனிக்கத் தவறினான். அந்த சமபூமியின் மக்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள். ஆனால் இவைகளை அவன் அறியாமலிருந்தான். அல்லது அறிந்தும் முக்கியப்படுத்தவில்லை. லோத்து யோர்தா னுக்கு அருகானசம்பூமி முழுவதையும் தெரிந்துகொண்டான். அந்த சுயநலமான தெரிந்து கொள்ளுதலின் பயங்கரமான விளைவுகளை அவன் எவ்வளவு குறைவாக முன்கண்டான் ! PPTam 142.3

லோத்து பிரிந்துபோனபின்பு, அந்த தேசம் முழுவதையுங் குறித்த வாக்குத்தத்தத்தை ஆண்டவரிடமிருந்து ஆபிரகாம் மீண்டும் பெற்றான். இதற்குப்பின் சிறிது காலத்திலேயே அவன் எபிரோனுக்குப்போய், மம்ரேயின் காவாலி மரங்களின் கீழ் கூடா ரம் போட்டு, அதன் பக்கத்தில் ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி னான். சோதோம் பாள்ளத்தாக்கின் ஆபத்தான ஆடம்பரத்தை லோத்துவிற்குக் கொடுத்துவிட்டு, அந்த மேடுகளின் சுதந்திரமான காற்றில், அதன் ஒலிவத் தோப்புகளோடும், திராட்சத்தோட்டங்களோடும், அசைந்தாடுகிற பயிர்வெளிகளோடும், சுற்றியிருந்த மலைகளின் மேய்ச்சல் நிலங்களோடும் அவன் தனது எளிய, முற்பிதாக்களின் வாழ்க்கையை வாழ்ந்தான். PPTam 143.1

சுற்றியிருந்த தேசங்களால், வல்லமையான அதிபதியாகவும் ஞானமும் சாமர்த்தியமுமான தலைவனாகவும் ஆபிரகாம் கனம் பண்ணப்பட்டான். அவன் தன் செல்வாக்கை அயலகத்தாரிட மிருந்து மறைக்கவில்லை. உருவவழிபாடு செய்து கொண்டிருந்தவர் களிலிருந்து குறிப்பிடும் விதத்தில் வேறுபட்டிருந்த அவனுடைய வாழ்க்கையும் குணமும் மெய்யான விசுவாசத்தை காண்பிக்கும் ஒரு செல்வாக்காக இருந்தது. அவனுடைய பழகும் விதமும் மனிதாபிமானமும் அவன் மேல் நம்பிக்கையையும் நட்பையும் தூண்டிவிட்டு, அவனுடைய பாதிக்கப்படாத மேன்மை மரியாதை யையும் கனத்தையும் தருவித்தபோது, தேவன் மேலிருந்த அவனுடைய பற்றுறுதி அசைக்க முடியாததாயிருந்தது. PPTam 143.2

வைராக்கியமாக காவல் காக்கப்பட்டு, வைத்திருக்கிறவன் மாத்திரமே அனுபவிக்கிற விலையேறப்பெற்ற பொக்கிஷமாக அவனுடைய மதம் வைக்கப்படவில்லை. மெய்யான மதம் அவ் வாறு வைக்கப்படமுடியாது. ஏனெனில் இப்படிப்பட்ட ஆவி, சுவி சேஷத்தின் கொள்கைகளுக்கு PPTam 144.1

முரணானது. கிறிஸ்து இருதயத்தில் வசிக்கும்போது, அவருடைய சமுகத்தின் வெளிச்சத்தை மறைப்பது கூடாத காரியம், அல்லது அந்த வெளிச்சம் மங்கிப்போவது கூடாத காரியம். முரணாக, நீதியின் சூரியனுடைய பிரகாசமான பிம்பங்களால், ஆத்துமாவை மூடியிருக்கும் பாவம் மற்றும் சுயநலத்தின் பனி நாளுக்குநாள் விரட்டியடிக்கப்பட, அது பிரகாசத்தின் மேல் பிரகாசம் அடைந்து கொண்டே இருக்கும். PPTam 144.2

தேவனுடைய ஜனங்கள் பூமியின் மேல் அவருடைய பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். அவர்கள் இந்த உலகத்தின் சன் மார்க்க இருளில் வெளிச்சங்களாக இருக்கவேண்டுமென்று அவர் உத்தேசித்திருக்கிறார் தேசங்கள் நகரங்கள் பட்டணங்கள் கிராமங்கள் எங்கும் சிதறியிருக்கிற அவர்கள், தேவனுடைய சாட் சிகளும், அவிசுவாசமான உலகத்துக்கு அவர் தம்முடைய சித்தத் தைக் குறித்த அறிவையும் தம்முடைய கிருபையின் அதிசயங்களையும் தெரியப்படுத்துகிற அவருடைய வழித்தடங்களாகவும் இருக்கிறார்கள். மாபெரும் இரட்சிப்பில் பங்குபெறும் அனைவரும் அவருடைய ஊழியர்களாக இருக்கவேண்டும் என்பது அவருடைய திட்டம். கிறிஸ்தவனின் பக்தியே உலகத்தார் சுவிசேஷத்தை அளந்து பார்க்கும் தரத்தை உண்டாக்குகிறது. பொறுமையாக சகிக் கப்படுகிற சோதனைகள் நன்றியோடு பெற்றுக்கொள்ளப்படுகிற ஆசீர்வாதங்கள், இயல்பாக காட்டப்படுகிற சாந்தம், தயவு, இரக் கம் மற்றும் அன்பு போன்றவைகள் உலகத்தின் முன்பாக குணத்தின் வழியாக பிரகாசிக்கிற வெளிச்சங்களாக இருந்து, இயற்கையான இருதயத்தின் சுயநலத்திலிருந்து வரும் இருளுக்கு முரணாக இருக் கிறதை வெளிக்காட்டுகிறது. PPTam 144.3

விசுவாசத்தில் ஐசுவரியமும், பெருந்தன்மையில் உயர்வும், கீழ்ப்படிதலில் தவறாமையும், தனது யாத்திரீக வாழ்க்கையின் எளிமையில் தாழ்மையும் கொண்டிருந்த ஆபிரகாம், காரியங்களை நடத்துவதில் ஞானமும், யுத்தத்தில் தைரியமும் திறமையும் கொண்டிருந்தான். புதிய மதத்தின் போதகனாக அறியப்பட்டிருந்தது ஒரு புறமிருந்தபோது, அவன் வசித்த வந்த எமோரிய சமபூமியை ஆண்டுவந்த மூன்று அரச சகோதரர்களும், தேசம் கொடுமையிலும் ஒடுக்கத்திலும் இருந்தபடியால் அதிகமான பாதுகாப்பிற்காக தங்களோடு கூட்டணி வைக்கும்படியாக அவனை வரவேற்று தங்களுடைய நட்பை வெளிக்காட்டினார்கள். இந்த கூட்டணியை உப யோகிக்கும்படியான தருணம் விரைவில் வந்தது. PPTam 144.4

ஏலாமின் அரசன் கெதர்லாகோமேர், பதினான்கு வருடங்களுக்கு முன்பு கானான் மேல் படையெடுத்து, அதை தனக்குக் கப்பம் கட்ட வைத்திருந்தான். இப்போது சில அதிபதிகள் கலகம் பண்ண, ஏலாமின் இராஜா நான்கு கூட்டணி இராஜாக்களுடன் இவர்களை அடக்கும்படியாக மீண்டும் தேசத்தின் மேல் படை யெடுத்தான். கானானின் ஐந்து இராஜாக்கள் தங்கள் படைகளை இணைத்து, எதிரிட்டு வருகிறவர்களை சித்தீம் பள்ளத்தாக்கிலே சந்தித்தார்கள். ஆனால் முழுவதுமாக வீழ்த்தப்பட்டார்கள். இந்த இராணுவத்தின் பெரிய பகுதி சிதறிப்போனது. தப்பித்தவர்கள் பாதுகாப்பிற்காக மலைகளுக்கு ஓடிப்போனார்கள். ஜெயம் பெற்றவர்கள் சம்பூமியின் நகரங்களை கொள்ளையடித்து, அதின் கொள்ளைப் பொருட்களுடனும் அடிமைகளுடனும் திரும்பிச் சென்றார்கள். அவர்களில் லோத்தும் அவன் குடும்பமும் இருந்தது. PPTam 145.1

மம்ரேயின் கர்வாலி மரத்தோப்புகளில் சமாதானமாக வாழ்ந்து கொண்டிருந்த ஆபிரகாம், தப்பி வந்த ஒருவனிடமிருந்து யுத்தத்தின் செய்தியையும் தன் அண்ணன் மகனுக்கு நேரிட்டதையும் கேள்விப்பட்டான். லோத்தினுடைய நன்றியற்ற செய்கையைக் குறித்த எதையும் ஆபிரகாம் தன் மனதில் விருப்பத்தோடு வைத்திருக்கவில்லை . அவன் மேலிருந்த பிரியம் முழுவதும் எழுப்பப்பட, அவனைக் காப்பாற்ற வேண்டும் என்று தீர்மானித் தான். முதலாவது தெய்வீக ஆலோசனையை நாடினவனாக, ஆபிரகாம் யுத்தத்திற்கு தயாரானான். தனது சொந்த பாளயத் திலிருந்து, தேவனுக்குப் பயப்படுவதிலும் தங்கள் அதிபதிக்குச் சேவை செய்வதிலும் புயபலத்தை உபயோகிப்பதிலும் பயிற்சி பெற்ற முந்நூற்று பதினெட்டு பேரை அழைத்தான். அவனுடைய உடனாளிகளான மம்ரேயும் எஸ்கோலும் ஆநேரும் தங்கள் குழுக்களுடன் அவனோடு சேர்ந்து கொள்ள, ஒன்றிணைந்து, படையெடுத்தவர்களைத் துரத்த புறப்பட்டார்கள். ஏலாமியர்களும் அவன் கூட்டத்தாரும் கானானில் வடக்கு எல்லையான தாணில் கூடாரமிட்டிருந்தார்கள். வெற்றியில் களித்தவர்களாக, முறியடிக் கப்பட்டிருந்த சத்துருக்களின் தாக்குதலைக் குறித்த எந்தவித பயமுமின்றி அவர்கள் களியாட்டில் ஈடுபட்டிருந்தார்கள். வெவ் வேறு திசைகளிலிருந்து நெருங்கும் படியாக முற்பிதா தனது படையைப் பிரித்து, அந்த பாளயத்தின்மேல் இரவிலே வந்தான். தீவிரமானதும் எதிர்பார்க்காததுமான அவனுடைய தாக்குதல்கள் அதிசீக்கிர வெற்றியில் முடிந்தது. ஏலாமின் இராஜா கொல்லப்பட்டான். அவனுடைய திடுக்கிட்ட படைகள் முற்றிலும் தோற்கடிக் கப்பட்டது . லோத்தும் அவனது குடும்பமும் அனைத்து கைதிகளும் அவர்களுடைய பொருட்களோடுங்கூட மீட்கப்பட்டட்டனர். மிக ஐசுவரியமான கொள்ளை வெற்றிபெற்றவர்களின் கையில் கிடைத்தது. இந்த வெற்றி தேவனுக்குக் கீழிருந்த ஆபிரகாமினுடையதே. யெகோவாவை சேவித்துவந்த அவன், அந்த தேசத்திற்கு பெரிய சேவை செய்தது மாத்திரமல்ல, தன்னை ஒரு வல்லமையானவனென்றும் நிரூபித்தான். நீதிமானாய் இருப்பதென்றால், கோழையாக இருப்பதில்லை என்பதும் காணப்பட்டது. ஆபிரகா மின்மதம், தன் உரிமையை பராமரிப்பதிலும் ஒடுக்கப்பட்டவர்களை பாதுகாப்பதிலும் அவனை தைரியமுள்ளவனாக்கிற்று என்பது காணப்பட்டது. PPTam 145.2

அவனுடைய வீரச்செயல் சுற்றியிருந்த கோத்திரங்களிடையே பரவலான செல்வாக்கைக் கொடுத்தது. அவன் திரும்பி வந்தபோது, சோதோமின் இராஜா வெற்றிகொண்டவனை மதிக்கும் படியாக தன் பரிவாரத்தோடு வந்தான். பொருட்களை எடுத்துக்கொள்ளவும், கைதிகளை மாத்திரம் திரும்பக் கொடுத்து விடவும் அவன் மன்றாடினான். யுத்த நியமத்தின்படி வெற்றிகொண்டவனுக்கே கொள்ளை சொந்தமாகும். ஆனால் எந்த ஆதாய நோக்கத்தோடும் ஆபிரகாம் பயணித்திருக்கவில்லை. எனவே இந்த அபாக்கியச் ாலிகளின் நிலையை தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள மறுத்து, தன்னோடு சேர்ந்து யுத்தத்திற்கு வந்தவர்களுடைய பங்கை மாத்திரம் கோரினான். PPTam 146.1

இப்படிப்பட்ட சோதனைக்கு உட்படுத்தப்படுவார்களென் றால், வெகு சிலரே ஆபிரகாமைப்போல் தங்களை நேர்மையாகக் காண்பிப்பார்கள். நீதி மற்றும் மனிதனின் உரிமைகளை ஆபிரகாம் கருத்தில் கொண்டிருந்தான். உன்னில் நீ அன்பு கூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக (லேவி 1918) என்ற தேவாவியின் ஏவுதலை அவனுடைய நடக்கை விளக்குகிறது. ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு, நான் ஒரு சரட் டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டான வைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று, வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனா கிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன் என்றான். ஆதாயத்திற்காக யுத்தத்தில் ஈடுபட்டான் என்றோ, அல்லது அவர் களுடைய பரிசுகளாலோ அல்லது தயவினாலோ அவன் செழிப்பா னான் என்றோ நினைப்பதற்கு அவன் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் கொடுக்கமாட்டான். ஆபிரகாமை ஆசீர்வதிப்பதாக தேவன் வாக்குக் கொடுத்திருக்கிறார், அவருக்கே மகிமையைக் கொடுக்க வேண்டும். PPTam 146.2

வெற்றிகொண்ட முற்பிதாவை வரவேற்கும்படியாக வந்த மற்றொரு நபர் படைக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் படியாக அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்த சாலோமின் இராஜாவாகிய மெல்கிசேதேக்கு. உன்னதமானவருடைய ஆசாரியனாக, அவன் ஆபிரகாமை ஆசீர்வதித்து, தமது ஊழியக்காரன் மூலமாக பெரிய விடுதலையைக் கட்டளையிட்ட ஆண்டவருக்கு நன்றி தெரிவித் தான். இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத் தான். PPTam 147.1

ஆபிரகாம் மகிழ்ச்சியோடு தனது கூடாரங்களுக்கும் மந்தை களிடத்திற்கும் திரும்பிவந்தான். ஆனால் அவன் மனது உபத்திரவ மான சிந்தைகளால் கலங்கியது. கூடுமானவரையிலும் பகையையும் சண்டையையும் தவிர்த்து வந்த ஒரு சமாதானமான மனிதனான அவன், தான் கண்ட படுகொலையின் காட்சிகளை திகிலோடு திரும்ப நினைத்தான். தான் முறியடித்த தேசங்கள் சந்தேகத்திற்கிட மின்றி கானானின் மேல் மீண்டும் படையெடுத்து, பழிவாங்கவேண்டிய இலக்காக ஆபிரகாமை பார்க்கும். நாடுகளின் சண்டைகளில் இவ்வாறு சம்பந்தப்படுவதால், அவனுடைய வாழ்க்கையின் சமாதானம் நிறைந்த அமைதி அழிந்துபோகும். அதற்கு மேலாக, கானானை சுதந்தரித்தவனாக அவன் அதிலே பிரவேசிக்கவில்லை. வாக்குத்தத்தம் நிறைவேற வேண்டியிருக்கிற ஒரு சுதந்தரவலாளி யைப் பெறவும் இப்போது அவன் எதிர்பார்க்கமுடியாது. PPTam 147.2

ஒரு இராத்தரிசனத்திலே மீண்டும் தெய்விகக் குரல் கேட்டது. ஆபிராமே, நீ பயப்படாதே, நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்பது அதிபதிகளுக்கு அதிபதியானவரின் வார்த்தைகளாக இருந்தன. இதற்கு முன் செய்ததைப்போல் கேள்வி கேட்காத நம்பிக்கையோடு வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொள்ள முடியாதோ என்ற PPTam 147.3

அச்சத்தால் அவன் மனம் மிகவும் ஒடுக்கப்பட்டது. அது நிறைவேற என்பதற்கான உறுதியான சான்றுக்காக அவன் ஜெபித் தான். குமாரன் என்னும் பரிசு கொடுக்கப்படாத போது, உடன்படிக் கையின் வாக்குத்தத்தத்தை எப்படி உணரமுடியும்? அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான். அவனுடைய நம்பிக்கைக்குரிய வேலைக் காரன் எலியேசரை தத்தெடுப்பதன் வழியாக குமாரனாகவும் சொத் துக்களின் சுதந்தரவாளியாகவும் ஆக்கும்படி ஆலோசனை கூறி னான். ஆனால் அவனுடைய சொந்தக் குமாரனே சுதந்தரவாளியாக வேண்டும் என்று அவனுக்கு நிச்சயமாகக் கூறப்பட்டது. பின்னர் வெளியே நடத்தப்பட்டு மேலே வானங்களிலே பிரகாசிக்கிற எண்ணக்கூடாத நட்சத்திரங்களைப் பார்க்கும் படியாக சொல்லப் பட்டான். அவன் பார்த்தபோது, உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்று சொல்லப்பட்டது . ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ரோமர் 4:3. PPTam 148.1

தனது விசுவாசத்தை உறுதிப்படுத்தவும், அவர்களைக் குறித்த தேவனுடைய கிருபை நிறைந்த நோக்கங்கள் நிறைவேறும் என்பதற்கு பின்வரும் தலைமுறைகளுக்குச் சான்றாக இருக்கவும் காணக்கூடிய சில அடையாளங்களுக்காக முற்பிதா இன்னமும் மன்றாடினான். பவித்திரமான ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் படி மனிதர்களுக்குள்ளே இருந்த வழக்கத்தை உபயோகித்து தமது ஊழியக்காரனோடு ஒரு உடன்படிக்கை செய்ய ஆண்டவர் இறங்கினார். தெய்வீக நடத்துதலின்படி ஒவ்வொன்றும் மூன்று வயதாயிருந்த ஒரு கிடாரியையும், ஒரு வெள்ளாட்டையும், ஒரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டு, அவைகளின் உடல்களை ஆபிர காம் பிரித்து வைத்தான். இவைகளோடு ஒரு காட்டுப்புறாவையும் புறாக்குஞ்சையும் சேர்த்துக்கொண்டான். அவைகள் துண்டிக்கப் படவில்லை. இப்படிச் செய்த பின்பு, பயபக்தியோடு துண்டங்களின் நடுவாக கடந்து, நிலையான கீழ்ப்படிதலைக்குறித்த ஒரு பவித்திர மான வாக்கை கொடுத்தான். கவனிப்போடும் உறுதியாகவும் இருந்து, தீட்டுப்படுவதிலிருந்தும் இரை கவ்வுகிற பறவைகளால் பட்சிக்கப்படுவதிலிருந்தும் அவைகளை பாதுகாப்பதற்காக, சூரியன் அஸ்தமிக்கும் வரையிலும் அந்த உடல்களின் பக்கத்திலே அவன் நின்றான். சூரியன் அஸ்தமித்தபோது அவன் அயர்ந்த நித் திரைக்குள்ளானான். திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது. வாக்குத்தத்த நாட்டை உடனடியாக சுதந்தரிப்பதை எதிர்பார்க் காதிருக்கவும், அவனுடைய சந்ததி கானானில் ஸ்தாபிக்கப்படு வதற்கு முன்பாக அடையப் போகிற பாடுகளை சுட்டிக்காட்டியும் தேவனுடைய சத்தம் கேட்கப்பட்டது. மாபெரும் தியாக பலியான கிறிஸ்துவின் மரணமும் பின்னர் அவருடைய மகிமையான வருகையும் மீட்பின் திட்டத்தை இங்கே அவனுக்கு திறந்து காட்டியது. வாக்குத்தத்தத்தின் முழுமையான நிறைவேறுதலை பூமி ஏதேனின் அழகிற்கு மீண்டும் கொண்டுவரப்படுவதையும், நித்திய சுதந்தர மாக அவனுக்குக் கொடுக்கப்படவிருக்கிறதையும் ஆபிரகாம் பார்த்தான். PPTam 148.2

தேவன் மனிதனோடு செய்த இந்த உடன்படிக்கையின் வாக்குறுதியாக புகைகிற சூளையும் நெருப்பும் தெய்வீக சமுகத்தின் அடையாளங்களாக பிரிக்கப்பட்ட பலிகளின் நடுவே கடந்து போய் அவைகளை முழுமையாக பட்சித்துப்போட்டது. எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரியநதி மட்டுமுள்ள கானான் தேசத்தை அவனுடைய பின் சந்ததிக்கு ஈவாக கொடுப்பதை உறுதிப்படுத்தும் சத்தம் மீண்டும் ஆபிரகாமால் கேட்கப்பட்டது. PPTam 149.1

ஏறக்குறைய இருபத்து ஐந்து வருடங்களாக ஆபிரகாம் கானானில் இருந்தபோது ஆண்டவர் அவனுக்கு தரிசனமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு என்றார். பயபக்தியோடு முற்பிதா தலைகவிழ்ந்து பணிந்து கொண்டான். நான் உன்னோடே பண்ணுகிற என் உடன் படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனா வாய் என்று செய்தி தொடர்ந்தது. இந்த உடன்படிக்கை நிறைவேறு வதன் அடையாளமாக, ஆபிராம் என்று இருந்த அவன் பெயர் திரளான ஜாதிகளுக்குத் தகப்பன் என்று பொருள்படும் ஆபிரகாம் என்று மாற்றப்பட்டது. சாராயின் பெயர், இளவரசி என்று பொருள்படும் சாராள் என்று மாற்றப்பட்டது. அவள், ஜாதிகளுக்குத் தாயாக இருப்பாள்; அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாவார்கள் என்று தெய்வீக சத்தம் கூறியது. PPTam 149.2

இந்த சமயத்தில், அவன் விருத்தசேதனமில்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக (ரோமர் 4:11) விருத்தசேதன் சடங்கு ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்டது. அவர்கள் தேவனுடைய சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள் என்பதற்கும், இவ்வாறாக விக்கிரக ஆராதனைக்காரரைவிட்டு பிரிக்கப்பட்டவர்கள் என்பதற்கும், தமது சொந்த சம்பத்தாக தேவன் அவர்களை ஏற்றுக்கொண்டார் என்பதற்கும் அடையாளமாக, அது முற்பிதாவினாலும் அவனுடைய பின் சந்ததியாராலும் கைக்கொள்ளப்பட வேண்டும். இந்தச் சடங்கின் வழியாக ஆபிரகாமோடு செய்யப்பட்ட உடன்படிக்கையின் நிபந்தனைகளில் தங்கள் பங்கை நிறைவேற்ற அவர்கள் உறுதி செய்தனர். அவர்கள் புற சமயத்தவ ரோடு திருமண உறவு ஏற்படுத்தக் கூடாது. ஏனென்றால், அப்படித் திருமணம் செய்யும்போது, தேவனுக்கும் அவருடைய பரிசுத்த பிரமாணங்களுக்கும் தரவேண்டிய பய பக்தியை அவர்கள் இழந்து போவார்கள், மற்ற நாடுகளின் பாவப் பழக்கங்களில் ஈடுபட சோதிக்கப்பட்டு விக்கிரகாராதனை செய்ய வஞ்சிக்கப்படுவார்கள். PPTam 149.3

தேவன் ஆபிரகாமின் மேல் மாபெரும் கனத்தை வைத்தார். நண்பனோடு ஒரு நண்பன் நடந்து பேசுவதைப்போல் பரலோகத் தூதர்கள் அவனோடு நடந்து அவனோடு பேசினார்கள். சோதோ மின்மேல் நியாயத்தீர்ப்புகள் அனுப்பப்படவிருந்த போது, அது அவனிடமிருந்து மறைக்கப்படவில்லை. அவன் தேவனிடத்திலே பாவிகளுக்காக மன்றாடும் ஒருவனானான். தூதர்களோடு அவன் கொண்ட நேர்முகம், உபசரிப்பைக் குறித்த அழகான ஒரு உதாரணத் தையும் தருகிறது. PPTam 150.1

தூரத்திலே மூன்று பயணிகள் தன்னை நோக்கி வருவதைக் கண்ட போது, உஷ்ணமான கோடைகால மத்தியான வேளையிலே, முற்பிதா தனது கூடார வாசலில் அமர்ந்து அமைதியான நிலத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். கூடாரத்தை அடையும் முன் அந்த அந்நியர்கள் தங்கள் செயலைக் குறித்து ஆலோசிப்பது போலச் சற்று தாமதித்தனர். அவர்கள் வந்து உதவிகள் கேட்கும் வரை காத்திருக்காது, ஆபிரகாம் துரிதமாக எழுந்தான். வெளிப்படையாக அவர்கள் வேறு ஒரு திசையில் திரும்பின் போது, அவன் அவர்கள் பின் துரிதமாகச் சென்று, மிக உயர்ந்த மரியாதையோடு, சிற்றுண்டிக்காக சற்று தாமதிப்பதின் வழியாக தன்னைக்கனப்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தினான். அவர்கள் பயணத்தின் தூசியை தங்கள் பாதங்களிலிருந்து கழுவும் படி அவன் தன் சொந்த கைகளால் தண்ணீர் கொண்டுவந்தான். அவனே அவர்களுடைய உணவை தெரிந்தெடுத்தான். குளுமையான நிழலில் அவர்கள் இளைப்பாறினபோது, ஒரு உணவு தயாரிக்கப்பட்டது. அவனுடைய உபசரிப்பில் அவர்கள் பங்குகொண்டபோது, அவர்களுக்குப் பக்கத்தில் அவன் மரியாதையோடு நின்றிருந்தான். இந்த மரியாதையான செயலை, தமது வார்த்தையில் பதிவு செய்வதற்குப் போதுமான முக்கியத்துவம் கொண்டதாக தேவன் கருதினார். ஆயிரம் வருடங்களுக்குப்பின்னர், தேவ ஆவியால் ஏவப்பட்ட அப்போஸ்தலனால், அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள், அதி னாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு (எபி 13:2) என்று இது குறிப்பிடப்பட்டது. PPTam 150.2

தனது விருந்தாளிகளில் ஒருவர், தான் பாவமில்லாமல் ஆரா திக்கக்கூடிய ஒருவர் என்பதை சிறிதும் சிந்திக்காது, அவர்களில் சோர்வடைந்திருந்த மூன்று பிரயாணிகளையே ஆபிரகாம் கண்டான். ஆனால் பரலோகத் தூதுவருடைய மெய்யான குணம் இப்போது வெளிப்பட்டது. அவர்கள் உக்கிரத்தின் தூதர்களாக தங்கள் பாதையில் சென்றுகொண்டிருந்தபோதும், ஆபிரகாமிற்கு, விசுவாசமனுஷனாகிய அவனுக்கு ஆசீர்வாதங்களை முதலாவது கொடுத்தனர். அக்கிரமத்தை குறிப்பதிலும் மீறுதலை தண்டிக்கிற திலும் தேவன் கண்டிப்பானவராக இருப்பினும், பழிவாங்குவதில் அவர் பிரியம் கொள்ளுவதில்லை . அழிவின் வேலை நித்திய அன்பு கொண்ட அவருக்கு அபூர்வ வேலையாக இருக்கிறது. PPTam 151.1

கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது. சங் 25:14. ஆபிரகாம் தேவனை கனம் பண்ணினான். அவனை தமது ஆலோசனைகளுக்குள் எடுத்துச்சென்று, தமது நோக்கங்களை அவனுக்கு வெளிப்படுத்துவதின் வழியாக, ஆண்டவர் அவனைக் கனம்பண்ணினார். கர்த்தர் : நான் செய்யப் போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? என்றார். பின்பு கர்த்தர்: சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும், நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின் படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார். சோதோமின் குற்ற அளவு தேவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் தமது நடவடிக்கைகளின் நீதி புரிந்துகொள்ளப்படும்படியாக மனிதனைப்போல் அவர் தம்மை வெளிப்படுத்தினார். மீறுகிறவர்கள் மேல் நியாயத்தீர்ப்புகளை அனுப்பும் முன்பாக அவர்தாமே சென்று அவர்களுடைய வழியை சோதித்தறிய ஏற்பாடு செய்கிறார். அவர்கள் தெய்வீக எல்லையை மீறாதிருந்தார்களானால், மனந்திரும்புவதற்கான காலத்தை இன்னமும் அவர்களுக்குக் கொடுப்பார். PPTam 151.2

தேவனுடைய குமாரனென்று ஆபிரகாம் இப்பொழுது அறிந்திருந்த அவர்களில் ஒருவரோடு ஆபிரகாமை தனியேவிட்டு மற்ற இரண்டு பரலோகத் தூதுவர்களும் சென்றனர். அந்த விசு வாசமனிதன் சோதோமின் குடிகளுக்காக மன்றாடினான். ஒருமுறை அவர்களை அவன் பட்டயத்தால் தப்பு வித்தான். இப்போது ஜெபத்தினால் அவர்களைத் தப்புவிக்க முயற்சித்தான். லோத்தும் அவன் வீட்டாரும் இன்னும் அங்கே வசித்து வந்தனர். ஏலாமியரிட மிருந்து அவர்களைக் காப்பாற்ற ஆபிரகாமை உந்தப்பண்ணின் அதே சுயநலமற்ற அன்பு, இப்போது தேவனுக்குச் சித்தமானால் தெய்வீக நியாயத்தீர்ப்புகளின் சீற்றத்திலிருந்தும் அவர்களை தப்புவிக்க நாடியது. PPTam 151.3

ஆழ்ந்த பக்தியோடும் தாழ்மையோடும் தூளும் சாம்பலு மாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத் துணிந்தேன் என்று தன் மன்றாட்டை வலியுறுத்தினான். அங்கே எந்தவித சுயநம்பிக் கையும் இல்லை; தனது சொந்த நீதியைக் குறித்த மேட்டிமையும் இல்லை. தனது கீழ்ப்படிதலினிமித்தமோ அல்லது தேவனுடைய சித்தம் செய்ய தான் செய்த தியாகத்தினிமித்தமோ தேவ தயவை அவன் உரிமை கோரவில்லை. தானே ஒரு பாவியாக இருந்த போதும், பாவிகளுக்காக மன்றாடினான். தேவனை நெருங்கும் அனைவரும் இப்படிப்பட்ட ஆவியைக் கொண்டிருக்க வேண்டும். என்ற போதும், அன்பான தகப்பனிடம் மன்றாடுகிற குழந்தையின் நம்பிக்கையை அவன் வெளிக்காட்டினான். பரலோகத் தூதுவரின் அருகில் வந்து, தன் மன்றாட்டை ஊக்கமாக வலியுறுத்தினான். லோத்து சோதோமில் குடியிருந்த போதும் அவ்வூராரின் அக்கிரமங்களில் பங்குகொள்ளவில்லை. அந்த மக்கள் நிறைந்த பட்டணத்தில் மெய்யான தேவனை வணங்குகிற வேறு சிலரும் இருக்கவேண்டும் என்று ஆபிரகாம் நினைத்தான். இந்தக் கண் ணோட்டத்தில் தான் அவன் : துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக,... சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ என்று மன்றாடினான். ஆபிரகாம் ஒரு முறை மாத்திரமல்ல, அநேக முறை கேட்டான். அவனுடைய விண்ணப்பம் கேட்கப்பட்டபோது அவன் தைரியமடைந்து, பத்து நீதி மான்கள் அதில் காணப்பட்டால் கூட அந்த நகரம் அழிக்கப்படாது என்னும் நிச்சயத்தை அடையும் வரை தொடர்ந்தான். PPTam 152.1

அழிந்து கொண்டிக்கும் ஆத்துமாக்களின் மேலிருந்த அன்பு ஆபிரகாமை ஜெபிக்கத் தூண்டியது. கெட்டுப்போன அந்தப் பட்ட ணத்தின் பாவங்களை அருவருத்த அதே நேரம், பாவிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று அவன் விரும்பினான். சோதோமின் மேலிருந்த அவனுடைய ஆழமான வாஞ்சை, மனந்திரும்பாத பாவிகள் மேல் நாம் உணர வேண்டிய வேதனையைக் காண்பிக் கிறது. பாவத்தின் மேலுள்ள வெறுப்பை நாம் நெஞ்சார நேசித்து, பாவிகள் மேல் பரிதாபத்தையும் அன்பையும் காட்டவேண்டும். சோதோமின்மேல் விழுந்த அதே பயங்கரமான நம்பிக்கையற்ற அழிவிற்குள்ளாக நம்மைச் சுற்றிலும் ஆத்துமாக்கள் விழுந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் சிலருடைய கிருபையின் காலம் முடிந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மணி நேரமும் கிருபையின் தொடுதலுக்கு அப்பால் சிலர் போய்க்கொண்டிருக் கிறார்கள். இந்த பயங்கரமான அழிவிலிருந்து ஓடும்படி பாவியை அழைக்கிற எச்சரிப்பு மற்றும் மன்றாட்டின் சத்தங்கள் எங்கே? மரணத்திலிருந்து அவனை பின்னுக்கு இழுக்கும்படி நீட்டப்பட்டிருக்கிற கரங்கள் எங்கே? அவனுக்காக தேவனிடம் தாழ்மையோ டும் விடாப்பிடியான விசுவாசத்தோடும் மன்றாடுகிறவர்கள் எங்கே ? PPTam 152.2

ஆபிரகாமினுடைய ஆவி, கிறிஸ்துவின் ஆவியே. தேவகுமா ரன்தாமே பாவிக்காக மன்றாடுகிற மாபெரும் மத்தியஸ்தராக இருக் கிறார். அவனுடைய மீட்பிற்கானகிரயத்தைச் செலுத்தியிருக்கிறவர் மனித ஆத்துமாவின் மதிப்பை அறிந்திருக்கிறார். துளியும் கறையில்லாத தூய்மையானவரின் இயல்பிலே மாத்திரமே இருக்கக்கூடிய தீமையின் மேலிருக்கும் வெறுப்போடு, நித்தியமான நல்லவர் மாத்திரமே கொண்டிருக்கக்கூடிய அன்பை, கிறிஸ்து பாவியின் மேல் வெளிக்காட்டுகிறார். சிலுவை மரணத்தின் வேதனைகளில், முழு உலகத்தின் பயங்கரமான பாவப்பாரத்தால் தாமே பாரமடைந் திருந்தும், தம்மை பரிகசிக்கிறவர்களுக்காகவும் கொலை செய்கிற வர்களுக்காகவும் பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே (லூக்கா 23:34) என்று அவர் ஜெபித்தார். PPTam 153.1

ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான் விசு வாசிக்கிற யாவருக்கும் ....... அவன் தகப்பனாயிருக்கும் படிக்கும் (யாக் 223, ரோமர் 4:11) என்று அவனைக் குறித்து எழுதப்பட்டிருக் கிறது ... விசுவாசமான முற்பிதாவைக் குறித்த தேவனுடைய சாட்சி. ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால் . மீண்டும் : கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும் : நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்பதே. உலகத்திற்கான தேவனுடைய சத்தியத்தை நூற்றாண்டுகளாக காவல் காத்து பாதுகாத்து இருக்கப்போகிற ஜனத்திற்கு வாக்குப் பண்ணப்பட்ட மேசியாவின் வருகையினால் பூமியிலுள்ள ஜனங்களெல்லாம் யாருக்குள் ஆசீர்வதிக்கப்படப்போகிறார்களோ, அந்த ஜனத்திற்கு தகப்பனாக இருக்கும்படி ஆபிரகாம் அழைக்கப் பட்ட அழைப்பு மிகவும் உயர்ந்தகனமான அழைப்பு . முற்பிதாவை அழைத்தவர், அவனைத் தகுதியுள்ளவனென்று தீர்த்தார். தேவனே பேசுகிறவர். தூரத்திலிருந்து நினைவுகளைப் புரிந்து கொண்டு, மனிதன் மேல் சரியான மதிப்பைப்வைக்கிறவர். அறிந்திருக்கிறேன் என்கிறார். ஆபிரகாமின் பங்கில் எந்த சுயநலமான நோக்கத்திற்கும் அவன் சத்தியத்தை விற்றுவிட மாட்டான்; அவன் கற்பனைகளைக் கைக்கொண்டு, நீதியும் நியாயமும் செய்வான், அவன் தான் மாத்திரம் ஆண்டருக்கு பயப்படாமல், தன் இல்லத்திலும் மதத்தை வளர்ப் பான், தன் குடும்பத்தை நீதியில் போதிப்பான், அவனுடைய வீட்டில் தேவனுடைய கற்பனையே சட்டமாக இருக்கும். PPTam 153.2

ஆபிரகாமின் வீட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆத்துமாக்கள் இருந்தார்கள். அவனுடைய போதனையால் ஒன்றான தேவனை தொழுதுகொள்ள நடத்தப்பட்டவர்கள், அவனது பாள யத்தில் ஒரு இல்லத்தைக் கண்டனர். அங்கே, ஒரு கல்விக்கூடத்தில் பெறுவதைப்போல், மெய்யான விசுவாசத்தின் பிரதிநிதிகளாயிருக்க அவர்களை ஆயத்தப்படுத்துகிற இப்படிப்பட்ட போதனையை அவர்கள் பெற்றனர். இவ்வாறாக, பெரும் பொறுப்பு அவன்மேல் தங்கியிருந்தது. அவன் குடும்பங்களின் தலைவர்களை பயிற்று வித்தான். அவனுடைய ஆட்சிமுறை, அவர்களுடைய குடும்பங்களில் செயல்படுத்தப்பட்டது. PPTam 154.1

ஆரம்பகாலங்களில் தகப்பனே தனது சொந்தக் குடும்பத்தின் அதிபதியாகவும் ஆசாரியனாகவும் இருந்து, தன் பிள்ளைகள் அவர்களுக்குச் சொந்த குடும்பங்களை பெற்ற பிறகும், அவர்கள் மேல் அதிகாரம் கொண்டிருந்தான். அவனுடைய பின் சந்ததியினர் மதத்திலும் உலகக்காரியங்களிலும் அவனையே தங்கள் தலைவனாகப் பார்க்கும் படி கற்பிக்கப்பட்டிருந்தனர். இந்த முற்பிதாக்களின் ஆட்சிமுறை தேவனைக் குறித்த அறிவை பாதுகாத்ததால், இதை நிலைத்திருக்கச் செய்ய ஆபிரகாம் முயற்சித்தான். மிகப்பரவலாக, மிக ஆழமாக வேர்கொண்டிருந்த உருவ வழிபாட்டிற்கு எதிரான தடையை எழுப்ப, குடும்ப நபர்களை ஒன்றாக இணைக்க வேண்டியது அவசியமாயிருந்தது. தீமையோடு பரீட்சயமாவது அறியாமலேயே கொள்கைகளை கொடுத்துப் போடும் என்று அவன் அறிந்திருந்ததால், தன் பாளயத்திற்குள் தங்கியிருந்தவர்கள் அஞ்ஞானிகளோடு கலப்பதற்கும் அவர்களுடைய விக்கிரக பழக்கங்களை பார்ப்பதற்கும் எதிராக, தன் பலத்தில் இருந்த ஒவ்வொன்றின் வழியாகவும் அவன் தேடினான். பொய்மதத்தின் ஒவ்வொரு வழிமுறைக்கும் கதவை அடைத்து, தொழுகையின் மெய்யான நோக்கமாக மனங்களை ஜீவனுள்ள தேவனுடைய மாட்சிமையினாலும் மகிமையினாலும் உந்த, மிக அதிக கவனம் செலுத்தப்பட்டது. PPTam 154.2

அஞ்ஞானிகளுடைய தொடர்பிலிருந்து தமது ஜனங்களை கூடுமானவரை துண்டித்து, ஜாதிகளோடு எண்ணப்படாதபடி அவர்களை தனித்து வாசம் பண்ணும் மக்களாக்க, தேவன் தாமே ஏற்படுத்தின் ஏற்பாடு ஞானமான ஏற்பாடு . முற்பிதா தனது குடும் பத்தை மெசபத்தோமியாவிலே அவர்களைச் சுற்றியிருந்த வஞ்சிக்கும் பாதிப்புகளுக்கு அப்பால் பயிற்றுவித்து போதிக்கவும், தலைமுறை தலைமுறையாக அவனுடைய சந்ததியினரால் மெய்யான விசுவாசம் அதன் பரிசுத்தத்தில் பாதுகாக்கப்படவும் தக்க தாக, அவர் ஆபிரகாமை விக்கிரகங்களை வணங்கின் அவனது இனத்தாரிடமிருந்து பிரித்தார். PPTam 155.1

ஆபிரகாம் தனது பிள்ளைகள் மேலும் தனது குடும்பத்தார் மேலும் வைத்திருந்த பிரியம், அவர்களுடைய மதவிசுவாசத்தைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு விலைமதிப்புள்ள பரம்பரைச் செ பாத்தாக தெய்வீக நியமங்களைக்குறித்த அறிவை கொடுக்கவும், அவர்கள் வழியாக அதை உலகத்துக்குக் கொடுக்கவும் அவனை நடத்தியது. தாங்கள் பரலோக தேவனுடைய அதிகாரத்தின்கீழ் இருப்பதாக அனைவரும் போதிக்கப்பட்டனர். பெற்றோர்களின் பங்கிலே எந்த ஒடுக்குதலும், பிள்ளைகள் பங்கிலே எந்தக் கீழ்ப்படியாமையும் இருக்கக்கூடாது. தேவனுடைய கற்பனை ஒவ் வொருவருக்கும் அவர்களுடைய கடமைகளை நியமித்திருந்தது, அதற்குக் கீழ்ப்படிவதன் வழியாகவே எவராயிருப்பினும் அவர்கள் மகிழ்ச்சியையாவது செழிப்பையாவது அடையமுடியும். PPTam 155.2

அவனுடைய சொந்த உதாரணம், அவனுடைய அனுதின வாழ்க்கையின் மெளனமான செல்வாக்கு, ஒரு நிலையான பாடமாக இருந்தது. அசையாத உண்மையும், அரசர்களின் புகழ்ச்சி யையும் சம்பாதித்திருந்த தாராளமும் சுயநலமற்ற மரியாதையும் வீட்டிலே வெளிக்காட்டப்பட்டது. அந்த வாழ்க்கையிலே ஒரு நறுமணம் இருந்தது. குணத்தில் ஒரு நேர்மையும், அழகும் இருந்தது. அது அவன் பரலோகத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறான் என்று அனைவருக்கும் வெளிப்படுத்தியது. மிகவும் தாழ்மையான வேலையாளையும் அவன் புறக்கணிக்கவில்லை. அவன் வீட்டிலே அதிபதிக்கு ஒரு சட்டமும் வேலையாளுக்கு மற்றொரு சட்டமும், ஐசுவரியவானுக்கு இராஜ பாதையும் ஏழைக்கு வேறொரு பாதையும் இருக்கவில்லை. வாழ்க்கையின் கிருபையை அவனோடு கூட சுதந்தரித்துக் கொண்டவர்களைப்போல் அனைவரும் நீதியோடும் இரக்கத்தோடும் நடத்தப்பட்டார்கள். PPTam 155.3

தன் வீட்டாருக்கு .... கட்டளையிடுவான். தன் பிள்ளைகளின் தீய குணங்களை கண்டிக்காமல் விடுகிற ஒரு பாவப்புறக்கணிப்பும், பலவீனமான ஞானமற்ற, சிலர்மேல் பிரியங்காண்பிக்கிறதும் அங்கே இருக்காது. பிரியம் என்று தவறாக புரிந்து கொள்ளப்படும் உரிமைகளுக்காக தன் கடமையைக் குறித்த உணர்வை விட்டுவிட முடியாது . ஆபிரகாம் சரியான போதனையை கொடுப்பது மாத்திரமல்ல, நீதியும் நியாயமுமான சட்டங்களின் அதிகாரத்தைப் பராமரிக்கவும் செய்வான். PPTam 156.1

இந்த உதாரணத்தைப் பின்பற்றுகிறவர்கள் இன்றைக்கு எவ்வளவு குறைவான பேர்களாயிருக்கிறார்கள்! அநேக பெற்றோர்களில் அன்பு என்று தவறாக அழைக்கப்படுகிற பிள்ளைகளை முழுமையடையாத அறிவோடும் ஒழுங்கற்ற உணர்ச்சிகளோடும் அவர்களுடைய சொந்த விருப்பங்களுக்கு விட்டு விடுவதில் வெளிக்காட்டப்படுகிற கண்மூடித்தனமும் சுயநலமுமான உணர்ச்சியும் இருக்கிறது. இது வாலிபருக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய கொடுமையும், உலகத்துக்கு இழைக்கப்படும் பெரிய தவறுமாயிருக்கிறது. பெற்றோரின் திளைப்பு குடும்பத்திலும் சமுதாயத்திலும் ஒழுங்கற்ற நிலையை உண்டாக்குகிறது. அது தெய்வீக கோரிக்கைகளுக்கு ஒப்புக் கொடுப்பதை விடுத்து, தங்களுடைய நாட்டங்களை பின்பற்றும் விருப்பத்தை வாலிபர்களில் உறுதிப்படுத்துகிறது. இவ்வாறாக, தேவனுடைய சித்தத்தைச் செய்வதில் வெறுப்பு கொண்ட இருதயத்தோடு அவர்கள் வளர்ந்து, தங்களுடைய பக்தியற்ற கீழ்ப்படியாத ஆவியை தங்கள் பிள்ளைகளுக்கும் தங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் கடத்துகிறார்கள். ஆபிரகாமைப் போல பெற்றோர்கள் தங்கள் வீட்டாரை தங்களுக்குப் பின்வரும் படி கட்டளையிடவேண்டும். தேவனுடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படியும் முதல் படியாக, பெற்றோர்களின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிவது கற்பிக்கப்பட்டு, வலியுறுத்தப்படக்கடவது. PPTam 156.2

மதத்தலைவர்களாலுங்கூட தேவனுடைய பிரமாணங்கள் சாதாரணமாக எண்ணப்படுவது, மாபெரும் தீமையை உண்டாக்குகிறது. தெய்வீக பிரமாணங்கள் மனிதன் மேல் கட்டுப் பாடு கொண்டிருக்கவில்லை என்று பிரபலமாகியிருக்கிற போதனை, மனிதர்களின் சன்மார்க்க அறிவின்மேல் பாதிப்பை ஏற்படுத்தும் உருவவழிபாட்டை ஒத்ததே தேவனுடைய பரிசுத்த பிரமாணங்களின் உரிமைகளை குறைக்கத் தேடுகிறவர்கள், குடும்பங்களும் ஜாதிகளும் கொண்ட அரசாங்கத்தின் அஸ்தி பாரத்தை நேரடியாக தாக்குகிறார்கள். அவருடைய பிரமாணங்களின்படி நடக்காத ஆவிக்குரிய பெற்றோர்கள், கர்த்தரின் வழியைக் காக்கும்படி தங்கள் வீட்டாருக்கும் கட்டளையிடுவ தில்லை. தேவனுடைய கற்பனை வாழ்க்கையின் சட்டமாக்கப்பட வில்லை. பிள்ளைகள் தங்கள் சொந்த இல்லங்களை உருவாக்கும் போது, தங்களுக்கு ஒருபோதும் கற்பிக்கப்படாததை தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் கடமையில் இருப்பதை உணரு வதில்லை. இதனால் தான் அநேக தேவனற்ற குடும்பங்கள் இருக்கின்றன. இதனால் தான் சீரழிவு ஆழமும் பரவலானதுமாயிருக்கிறது. PPTam 156.3

பெற்றோர்கள்தாமே கர்த்தருடைய சட்டங்களில் தங்கள் பூரணமான இருதயத்தோடு நடக்கும் வரைக்கும், தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க ஆயத்தமற்றவர்களாயிருக்கிறார்கள். இவ்விதத்தில் ஒரு மறுமலர்ச்சி ஆழமும் அகலமுமாக ஒரு மறுமலர்ச்சி தேவைப்படுகிறது. பெற்றோர்கள் மாற வேண்டும். ஊழியர்கள் மாறவேண்டும், அவர்கள் வீடுகளிலே அவர்களுக்கு ஆண்டவர் தேவை. அவர்கள் வேறுவிதமான காரியங்களைப் பார்க்கவேண்டுமென்றால், அவருடைய வார்த்தையை தங்கள் குடும்பங்களுக்குள் கொண்டுவந்து, அதை தங்களுடைய ஆலோச கராக ஆக்கவேண்டும். இது தங்களுக்குச் சொல்லப்படுகிற தேவனுடைய சத்தம் என்றும், அது குறிப்பாகக் கீழ்ப்படியப்பட வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் போதிக்க வேண்டும். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பொறுமையாக போதிக்க வேண்டும். தயவாகவும், சோர்வடையாமலும் தேவனைப் பிரியப்படுத்தும்படி வாழ்வது எப்படி என்று கற்பிக்க வேண்டும். அப்படிப்பட்ட வீடுகளின் குழந்தைகள் தெய்வ பக்தியற்றவர்களின் தந்திரங்களை சந்திக்க ஆயத்தப்பட்டிருக் கிறார்கள். அவர்கள் வேதாகமத்தை தங்கள் விசுவாசத்திற்கு அடிப்படையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். சமய நம்பிக்கை யற்றவர்களால் வரும் சந்தேக அலைகளால் அடிக்கப்பட்டுப் போகாத அஸ்திபாரத்தைக் கொண்டிருக்கிறார்கள். PPTam 157.1

அநேக குடும்பங்களில் ஜெபம் நெகிழப்படுகிறது. காலை மாலை ஜெபங்களுக்கு நேரம் இல்லையென்று பெற்றோர்கள் உணருகிறார்கள். அவருடைய ஏராளமான கிருபைகளுக்காக தாவர இனங்களை செழிக்கச் செய்கிற ஆசீர்வாதமான சூரிய ஒளிக்காகவும், மழைத்துளிகளுக்காகவும், பரிசுத்த தூதர்களின் பாதுகாவலுக்காகவும் தேவனுக்கு நன்றி செலுத்த சில மணித்துளிகளை அவர்களுக்குக் கொடுக்க முடியாது. தெய்வீக உதவிக்காகவும், நடத்துதலுக்காகவும் வீட்டிலே தங்கியிருக்கும் இயேசுவின் சமுகத்திற்காகவும் ஜெபிக்க அவர்களுக்கு நேரமில்லை . தேவனைப்பற்றிய அல்லது பரலோகத்தைப் பற்றிய ஒரு சிந்தை கூட இல்லாத, மாடுகளைப்போலவோ அல்லது குதிரைகளைப் போலவோ உழைக்கச் செல்லுகிறார்கள். நம்பிக்கையின்றி அழிந்துபோக அனுமதிக்காமல், அவைகளை மீட்கும் படியாக தேவகுமாரன் தம் ஜீவனையே கொடுத்திருக்கிற விலைமதிப்புள்ள ஆத்துமாக்களாக அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவருடைய மாபெரும் மேன்மையைக் குறித்த போற்றுதல் அழிந்து போகிற மிருகங்களுக்கு இருப்பதைவிட கொஞ்சமும் அதிகமாக இல்லை. PPTam 158.1

தேவனை நேசிக்கிறதாக சொல்லுகிறவர்கள் பழங்கால முற்பிதாக்களைப்போல, எங்கெல்லாம் தங்கள் கூடாரங்களைப் போடுகிறார்களோ, அங்கெல்லாம் ஒரு பலிபீடத்தைக் கட்ட வேண்டும். ஒவ்வொரு வீடும் ஜெபவீடாக இருக்க வேண்டும் என்கிற காலம் ஒன்று இருந்திருக்குமானால், அது இதுதான். தங்களுக் காகவும் தங்கள் பிள்ளைகளுக்காகவும் தகப்பன்மார்களும் தாய் மார்களும் தங்கள் இருதயங்களை தாழ்மையான விண்ணப்பங்களோடு தேவனிடம் உயர்த்த வேண்டும். மனைவியும் பிள்ளை களும் ஜெபத்திலும் துதியிலும் இணைய, வீட்டின் ஆசாரியனாக தகப்பன் காலை மாலை பலிகளை தேவனுடைய பலிபீடத்தின் மேல் வைக்கட்டும். அப்படிப்பட்ட இல்லங்களில் தங்கியிருக்க இயேசு விரும்புவார். PPTam 158.2

ஒவ்வொரு கிறிஸ்தவ இல்லத்திலிருந்தும் ஒரு பரிசுத்த ஒளி பிரகாசிக்க வேண்டும். அன்பு செயலிலே வெளிப்படுத்தப்பட வேண்டும். அது வீட்டின் எல்லா சம்பாஷணையிலும் பாய்ந்து, கரிசனையான தயவிலும் மென்மையிலும் சுயநலமற்ற மரியாதையிலும் தன்னைக் காட்டவேண்டும். இந்தக் கொள்கை செயல்படுத்தப்படுத் தப்படுகிற தேவன் ஆராதிக்கப்பட்டு, மெய்யான அன்பு ஆட்சி செய்கிற இல்லங்கள் உண்டு. இந்த இல்லங்களிலிருந்து சுகந்தவாசனையாக காலை மாலை ஜெபங்கள் தேவனிடம் உயருகின்றன. அவருடைய கிருபைகளும் ஆசீர்வாதங்களும் காலையின் பனி யைப்போல் விண்ணப்பக்காரர்மேல் இறங்குகிறது. PPTam 158.3

மிக ஒழுங்கான கிறிஸ்தவ இல்லம் கிறிஸ்தவ மதத்தின் உண் மைக்குவல்லமையான தேவபக்தியற்றவர்கள் மறுதலிக்க முடியாத வாதமாகும். பிள்ளைகளை பாதிக்கிற ஒரு செல்வாக்கு குடும்பத் திலே செயல்படுவதையும், ஆபிரகாமின் தேவன் அவர்களோடு இருக்கிறதையும் அனைவரும் காணமுடியும். கிறிஸ்தவர்களென்று அழைத்துக் கொள்ளுபவர்களின் இல்லங்கள் சரியான அமைப்பில் இருக்குமானால், அவர்கள் நன்மைக்காக மிக வல்லமையான செல்வாக்கை ஏற்படுத்த முடியும். அவர்கள் மெய்யாகவே உலகத்திற்கு வெளிச்சமாக இருப்பார்கள். கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும். நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்ற வார்த்தைகளால் பரலோகத்தின் தேவன் விசுவாசமான ஒவ்வொரு பெற்றோரிடமும் பேசுகிறார். PPTam 159.1