Go to full page →

வெற்றியின் இரகசியம் TamChS 189

நீங்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்கூறுகிற பரிசுத்த சத்தியங்களை நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறீர்கள் என்கிற ஆழமான உணர்வை ஏற்படுத்துவதற்கு ஊக்கமாகவும் வைராக்கியமாகவும் ஜெபிக்கவேண்டும். வேதஆராய்ச்சி செய்ய வேண்டும். பிரசங்கிக்கவேண்டும். இயேசுவுக்காக நீங்கள் எதைச் செய்தாலும், அதை ஊக்கத்தோடு செய்ய உங்களுடைய முழுத்திறன்களோடும் முயலுங்கள். மிக உயர்ந்த நிலையை எட்டிவிட்டதாக ஒருபோதும் எண்ணாதீர்கள், எண்ணினால் அதற்குமேல் செல்லமுடியாது. அவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுகிற விதத்தில் சத்தியத்தை எடுத்துக்கூறும்படிக்கு அந்த ஊழியம்பற்றியே சிந்தியுங்கள். அவர்களுக்கு முன்பாக நீங்கள் பேசுவதற்கு, அதிக ஆர்வமூட்டுகிற வேதாகமப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அதையே அவர்களுக்கு வலியுறுத்தி, அதில் அவர்கள் கவனம் முழுவதையும் செலுத்த வைத்து, கர்த்தருடைய வழிகளை அவர்களுக்குப் போதியுங்கள். 2RH, July 26, 1887 TamChS 189.1

வேதாகமத்தில் சொல்லப்பட்டபடியே மக்களுக்கு அதை எடுத்துக்கூறும்போது மிகப்பெரிய ஊழியத்தைச் செய்யலாம். ஒவ்வொரு மனிதனின் இதயக்கதவருகிலும் வேத வசனத்தைக் கொண்டுசெல்லுங்கள். அதன் தெள்ளத்தெளிவான அறிக்கைகளை ஒவ்வொருவருடைய மனச்சாட்சியிலும் உணர்த்துங்கள். ‘வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்’ என்கிற இரட்சகரின் கட்டளையை மீண்டும் மீண்டும் வலியுறுத்துங்கள். வேதாகமம் சொல்கிறபடியே அதை ஏற்றுக்கொள்ளவும், தெய்வீக வெளிச்சத்தை மன்றாடி கேட்கவும், வெளிச்சம் வீசும்போது, அதன் ஒப்பற்ற ஒளிக்கதிரை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளவும், பயமின்றி அதன் விளைவுகளை ஏற்றுக்கொள்ளவும் புத்திசொல்லுங்கள். 35T, 388 TamChS 189.2