Go to full page →

நகரங்களில் ஊழியம் TamChS 200

மிகப்பெரிய பணியைச் செய்யவேண்டிய ஒரு காலத்தில் வாழ்கிறோம். கலப்படமற்ற சுவிசேஷம் கிடைக்காத ஒரு பஞ்சம் தேசத்தில் நிலவுகிறது. ஜீவ அப்பத்தை பசியுள்ள ஆத்துமாக்களுக்குக் கொடுத்தாகவேண்டும். இதற்கென தன்னைப் பரிசுத்தப்படுத்தியுள்ள புத்தக ஊழியரைவிட இதைச் செய்ய அருமையான வாய்ப்பைப் பெற்றவர் எவரும் இல்லை . தற்காலச் சத்தியம் குறித்த ஈடு இணையற்ற வெளிச்சம் அடங்கிய ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நம்முடைய பெருநகரங்களில் உள்ள மக்களுடைய இல்லங்களில் காணப்பட வேண்டும். 2SW, Nov. 20, 1902 TamChS 200.1

பாக்கியமானவையும் ஆத்தும இரட்சிப்புக்கானவையுமான வேதாகம சத்தியங்கள் நம்முடைய பிரசுரங்களில் வெளியாகி வருகின்றன. நம்முடைய பத்திரிக்கைகளை விற்கும் பணியில் அநேகர் உதவ முடியும். அழிந்துபோகிற ஆத்துமாக்களைக் காப்பாற்ற முயலும்படி நம் அனைவரையும் ஆண்டவர் அழைக்கிறார். தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்படி சாத்தான் முயல்கிறான்; நாம் விழிப்போடு செயல்படவேண்டிய காலம் இது. நம்முடைய புத்தகங்களையும் பிரசுரங்களையும் மக்களுடைய கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும். தற்காலச் சத்தியம் குறித்த சுவிசேஷத்தை நம்முடைய நகரங்களில் நாம் தாமதமில்லாமல் அறிவிக்கவேண்டும். நம் கடமைகளைச் செய்ய நாம் விழித்துக் கொள்ள வேண்டாவா? 39T, 63 TamChS 200.2